Wednesday, June 28, 2017

விதியை மதியால் வெல்லலாம் ??

மனதை அடக்கு ! அதன் மூலம், வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு அதிலிருந்து எளிதாக மீண்டு வரலாம்!!
இது பொதுவாக அனைவருக்கும் அறிவுறுத்தும் ஒரு எளிமையான அறிவுரை !
விதியை மதியால் எப்படி வெல்ல முடியும் ?
வெல்வது என்பது அதை தோற்கடிப்பது அல்ல.! அதை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவதை குறிக்கும்.
அது எப்படி ? நடப்பதை மாற்றமுடியாதே ? அதனால் மனதால் நடப்பதை மாற்றவோ தடுக்கவோ முடியுமா ? என்றெல்லாம் பலர் கேள்வி எழுப்புவார்கள். (நம்முள் பலரும் இப்படிதான் !!)
ஒரு உண்மையை யாரும் உணரவில்லை !!
ஆண்டவன் விதி எனும் தேரை தந்து அதை கட்டுபடுத்தும் கடிவாளத்தை நம்மிடமே தந்துள்ளார்.!!
எப்படி ?
ஒருவர் தனது வாழ்நாளில் அனுபவிக்கும் அனைத்து விசயங்களும் நடக்கும் தசா புத்திகளுக்கு ஏற்ப நடக்கும் என்பது நாம் அறிந்தது. அவரவரின் கர்ம வினைக்கேற்ப அவை பிறப்பு ஜாதகத்தில் உள்ளபடி நடக்கும்.
அந்த தசா புத்திகளை நடத்துவது சந்திரன் !
சந்திரன் என்ற ரதம் செல்லும் பாதை தசா புத்தி காலங்கள்.
அந்த பாதையின் நிலைக்கேற்ப ரதம் செல்லும்.
நமது மனதையும் எண்ணங்களையும் நடத்துவதும் அந்த சந்திரனே !!
அந்த ரதத்தின் (சந்திரனின்) கடிவாளம் நம் கையில் (மனதில்) !!
எனவே கடவுள் ரதத்தை இயக்கி விட்டு, அதன் கடிவாளத்தை நம் கையில் தந்துள்ளார்.
பாதையை மாற்ற முடியாது. அதை கடந்து தான் ரதம் சென்றாக வேண்டும். ஆனால், பாதையின் தன்மையை முன்னேரே அறிந்து, மனதில் நிறுத்தி, மனதை அடக்கி, ரதத்தை இயக்குவதன் மூலம் பாதையில் உள்ள பள்ளம், மேடுகளையும் இதர தடைகளையும் சற்று எளிதாக எதிர்கொண்டு கடந்து செல்லலாம்.!! இல்லையெனில் ரதம் எனும் மனம் அதிக கஷ்டப்படும், வேதனைப்படும். அதனால், நிம்மதி இருக்காது. முன்னரே தெரிந்து புரிந்து மனதை கட்டுப்படுத்தி செல்வதன் மூலம், தடைகளின் அளவு மாறவில்லை என்றாலும், பாதிப்பின் அளவை குறைக்கலாம்.
எளிமையாக சொல்லவேண்டுமென்றால் , செல்லும் வழியில் சிறு பள்ளம் வரும் என்றால் அதை தடுக்க முடியாது. நமது ரதம் அதில் ஏறி செல்ல வேண்டும் என்பதையும் தடுக்க முடியாது. அது விதி. ஆனால் அதில் வேகமாக ரதத்தை செலுத்தி நாம் விழப்போகிறோமா அல்லது மெதுவாக இறங்கி ஏறப் போகிறோமா என்பது நம் கையில்! அது மதி !!
இழப்பு உறுதி என்றால் அதை தடுக்க முடியாது என்றாலும், அது ஆயிரத்திலா அல்லது கோடியிலா என்பாத்து நம் கையில் உள்ளது.!!
எனவே கடவுள் மிக பெரியவன் !! நம் விதி எனில் தேரில் நம்மை அமர்த்தி அதை செலுத்தும் கடிவாளத்தை நம்மிடமே தந்துள்ளான். அது தெரியாமல் நாம் எங்கெங்கோ அலைகிறோம் !!
விதியை மதியால் வெல்லலாம் !!
ஓம் சாய்ராம் !!

தாமரை மணி மாலை

பொருள்தேடி, புயல் வேகத்தில் ஓடும் உலகில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், சம்பாதிக்க முயற்சி செய்தாலும், பிரச்சினைகள் மட்டும் தீராமல் தொட்டு தொடர வே செய்கிறது.

தடை, அதை உடை என்பார்கள்... ஏதாவது ஒன்றில் தடை என்றால் உடைக்க முயற்சிக்கலாம், எல்லாவற்றிலும் தடை என்றால் என்ன செய்வது என இனி யாரும் நொந்து கொள்ள வேண்டாம்.

வீட்டுக்கு வீடு வாசல்படி, என்பது போல வீட்டுக்கு வீடு பிரச்சினைகள், பிரச்சினைகள் இல்லாத வீடுகளை கான்பது அரிது எனலாம்., அந்த அரிய குடும்பங்கள் தாமரை மணி மாலையின் மகத்துவத்தை உணர்ந்திருக்கும்.

சில குடும்பங்களில் பணவரவு இல்லாமல் பொருளாதார தடை.. இளமை காலத்தில் ஓடி, ஓடி பொருள் சேர்த்து பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தாலும், திருமணம் கைகூடுவதில் தடை, திருமணம் கைகூடி, குழந்தை செல்வம் இல்லாமல் தடை, குழந்தை செல்வங்கள் உள்ளவர்களுக்கு அவர்களை சிறந்த முறையில் வளர்ப்பதற்கு பிரச்சினை, கல்வியறிவில் அவர்களை முன்னனி மாணவர்களாக வளர்ப்பதில் உள்ள பிரச்சினைகள் இப்படி ஒவ்வொரு வீட்டிலும் பிரச்சினைகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வே கிடையாதா என வருந்த வேண்டாம்., பல பிரச்சினைகளின் அடிப்படை காரணமே நம்மை சுற்றியுள்ள எதிர்மறையான விடயங்களே., நம்மிடம் உள்ள எதிர்மறையான சிந்தனைகள், எதிர்மறையான எண்ணங்கள் இவைகளே நம்மை பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் அதற்குள்ளேயே மூழ்கடித்து விடுகிறது.

இத்தகைய குறைபாடுகளை நீக்கும் அற்புத, அளவிள்ளாத சகிதியை உள்ளடக்கியது தான் தாமரை மணி மாலை. தாமரை மணி மாலை இருக்கும் இடத்தில் எந்த எதிர்மறையான எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும், இடமளிக்காது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தாமரை மணி மாலையை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு குடும்பங்களிலும் உள்ள பொருளாதார தடை, திருமண தடை போன்ற அனைத்து தடைகளையும் நீக்கி வழமான வாழ்க்கையை வாழ முடியும்.

Sunday, June 25, 2017

நமக்குத் தீங்கு செய்பவர்களை நாம் எப்படி எண்ணுகின்றோம்? எப்படி எண்ண வேண்டும்?


அன்றாட வாழ்க்கையில் மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாம் பார்க்கின்றோம். அறிந்து கொள்கின்றோம்.

அதே சமயத்தில் அவர் “தீங்கு செய்கிறார்… தீங்கு செய்கின்றார்…” என்று எண்ணி அவர் தவறு செய்யும் உணர்வினை நுகர்ந்தால் என்ன ஆகும்?
1.நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் தான் வரும்
2.அடுத்து நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர
3.நன்மை செய்ய முடியுமா? என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.
ஒருவர் “வேதனைப்படுகின்றார்…” என்று நுகரும் பொழுது அந்த வேதனை நமக்குள் வந்து நாமும் வேதனையைத்தான் படுகின்றோம்.
இதைப் போன்று தான் ஒருவர் தீங்கு செய்கின்றார் என்றால் அந்தத் தீங்கின் நிலையே நமக்குள் விளைகின்றது.
நமக்குத் தீங்கு செய்கின்றவர்களை நாம் எப்படி எண்ண வேண்டும்? அவர்கள் தீமைகள் நமக்குள் வராமல் எப்படித் தடுக்க வேண்டும்? நன்மைகள் எப்படிச் செய்ய வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் வினா எழுப்பினார்.
தீங்கு செய்கின்றவர்களை எண்ணும் பொழுது
1.அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று
2.நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவரைத் தீமையிலிருந்து மீட்ட வேண்டும் என்று
3.ஒவ்வொரு நொடியிலும் அனுபவ ஞானத்தை ஊட்டினார் குருநாதர்.
தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் யாம் குருநாதர் காண்பித்த அருள் வழியில் தெளிவுபடுத்துகின்றோம்.
ஒருவர் நமக்குத் தீமைகள் செய்கிறார் என எண்ணும் பொழுது அவர் “தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்… ஈஸ்வரா” என்று எண்ணி உங்களுடைய உயிரான ஈஸ்வரனிடம் வேண்டுங்கள்.
உங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களுடைய உடலையும் உணர்வுகளையும் தூய்மையாக்கிவிடும்
அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தீமை செய்வோர் உடல்களில் படர்ந்து அவர்கள் அறியாது செய்யும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் அடுத்து செய்வது எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமைய வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள். இவ்வாறு
1.அவர்களைக் காக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்.
2.அப்பொழுது நமக்குப் பாதுகாப்பாகின்றது.
3.அவர்களுடைய தீமைகள் நம்மைச் சிறிதளவும் இயக்காது.
மாறாக நாம் “நன்மை செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக” வளர்கின்றோம். இதெல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். செய்து பாருங்கள்.

வீட்டில் பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்கவிடுவது ஏன்உங்களுக்கு தெ...

இதை மட்டும் செய்யுங்க வீட்ல தெய்வ சக்தி அதிகம் இருக்குமாம்

வழிபாடு செய்வது எப்படி?

இறந்தவர்களுக்கு திதி, கர்ம காரியம்,பித்ருக்கள் சடங்குகள் செய்யலாமா ?

தீய மற்றும் எதிர் மறை சக்திகளை விரட்டும் பரிகாரம்

மிக சக்தி வாய்ந்த மிக சுலபமான இந்த பரிகாரம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம். நல்ல பலன் தெரியும் நாள் மற்றும் கிழமை திசை போன்ற எதுவும் பார்க்க தேவை இல்லை. தாந்த்ரீக முறைப்படி சில காரணங்கள் இருப்பினும் அறிவியல் ரீதியாகவும் இதன் பலன் நிச்சயம். ஆகவே செய்து பலன் அடையுங்கள். மேலும் இவை மேலை நாடுகளில் தங்கள் உடலில் புகுந்துள்ள தீய சக்திகள், மற்றவர் கண் பார்வையால் நமக்கு ஏற்படும் அசதி, காரியத்தடை துரதிர்ஷ்டம் போன்றவைகளை போக்க உபயோகிப்பது வழக்கம். டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் எனப்படும் பெரிய மளிகை கடைகளில் சைனீஸ் வினீகர்அல்லது ரைஸ் வினீகர்என கேட்டு வாங்கவும். அதை ஒரு பாத்திரத்தில் அல்லது வாணலியில் இட்டு நன்கு கொதித்து புகை வர ஆரம்பித்ததும் அந்த புகையை வீட்டின் அல்லது வியாபார இடத்தின் அனைத்து மூலைகளில் அறை முழுதும் காட்டி விட்டு பின்பு அந்த அறைகளில் ஒரு நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து அதில் ஒரு டையமன்ட் கற்கண்டுமற்றும் கிராம்புபோட்டு வைக்கவும்.உங்களுக்கு நல்லனவற்றை அளிக்கும் படி பிரபஞ்சத்தை வேண்டி கொள்ளவும் பின்பு தீபம் எறிந்து முடிந்ததும், விளக்குகளை எடுத்து வைத்து விடலாம்-அவ்வளவே. செய்த நாள் இரவு கொதிக்கும் நீரில் ரைஸ் வினீகர் விட்டு அந்த புகையை சுவாசித்து கொண்டே குளிக்கவும். இந்த முறை உங்கள் உடல் மற்றும் நீங்கள் இருக்கும் வீடு-இரண்டிலுமே உள்ள தீய மற்றும் எதிர் மறை சக்திகளை விரட்டும்-வாரம் ஒரு முறை கூட செய்யலாம். செய்து பயன் அடையுங்கள். 


 

Friday, June 23, 2017

என்ன செய்தும் தம்பதிகளுக்குள்ள ஒற்றுமை இல்லையா ? இங்க போங்க! | Melmalaya...

நிரந்தர பணக்காரராக வழிகள்.

Ways to attract money in life forever..... நிரந்தர பணக்காரராக வழிகள். GUYS PLEASE CHECK MY Laksmi video Part 2 Video in my Channel..... just RELEASED Laksmi Parayanam.... Thanks...

இந்த தொகுப்பை முழுமையாக கேட்டு பயன்பேறுங்கள் .
இந்த தொகுப்பில் உள்ள வெளியீடுகள்

பகுதி 1 :https://youtu.be/YcJ5LzkEIVU
பகுதி 2 :https://youtu.be/aVpJP0iRvSg
பகுதி 3: https://youtu.be/shIJpjHAdWM
பகுதி 4: https://youtu.be/634Ml4lh2Kk
பகுதி 5 : https://youtu.be/Ir7rPxE8UnA

அனைவரும் லஷ்மி தேவியின் அருள் பெற்று சிறந்து வாழ்க....

Catch out Lakshmi Sree Sookhtam Parayanam video in my Channel Lakshmi video part 2. Hear everyday.... see the difference...


அதிர்ஷ்டம் கிடைக்க கல் உப்பை என்ன செய்ய வேண்டும்.?

தீமைகளை நீக்குங்கள்

துருவ நட்சத்திரத்துடன் ஐக்கியமாகுங்கள்

தியானம் செய்ய வேண்டிய முறை

முளைப்பாரி பரிகாரம்

கோடான கோடி நன்றிகள்

Siddhayogi Sivadasanrav

திருச்சிற்றம்பலம்


முளைப்பாரி பரிகாரம்
---------------------------------
மருத்துவ சிகிச்சைக்கு உகந்த நட்சத்திரங்களில் ஒன்று சதயம் நட்சத்திரமாகும். இந்த சதயம் நட்சத்திரத்தின் உருவம் மூலிகை கொத்து என்று மூல நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை கொத்தை எப்படி காண்பது என்று சிந்தித்தபோது நம் இந்து மத வழிபாட்டு முறைகளில் ஒன்று ஆலயங்களுக்கு முளைப்பாரி எடுத்து செல்வது என்பதை உணர முடிந்தது. கோவில் திருவிழாக்காலங்களில் வீட்டில் ஒரு மண் பாத்திரத்தில் ஒன்பது வகையான தானியங்களை போட்டு நீர் விட்டு நிழலில் வளர்த்து திருவிழா அன்று ஆலயத்திற்கு எடுத்து சென்று நீரில் கரைத்து விடுவது வழக்கமாகும். இது ஒரு நோய் நீக்கும் பரிகாரமாகும். நோயாளிகள் இந்த முளைப்பாரி பரிகாரம் செய்தால் நோய்கள் விரைவில் குணமாகும்.

****************************************************************


வீணையில் 7 நரம்புகள் உள்ளன. அவை சப்த கிரகங்களை குறிப்பவை. வீணை ஒரு பக்கம் அகன்றும், இன்னொரு பக்கம் சிறுத்தும் இருக்கும். அகன்ற பாகம் ராகுவை குறிக்கும், சிறுத்த பாகம் கேதுவை குரிக்கும். வீணையில் 4 பெரிய நரம்புகளும், 3 சிறிய நரம்புகளும் இருக்கும். 4 பெரிய நரம்புகள் ஆண் கிரகங்களையும்(சூரியன், செவ்வாய், குரு,சனி), 3 சிறிய நரம்புகள் பெண் கிரகங்களையும்(சந்திரன்,சுக்கிரன்,புதன்) குறிக்கும். கர்பினிப்பெண்கள் வீணை இசை கேட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல மூளை வளச்சியோடு அறிவாளியாக பிறக்கும் என கூறப்படுகிறது. கால சர்ப்ப தோசம் உள்ளவர்கள் வீணை இசை கேட்டால் கிரக தோச பாதிப்புகள் குறையும்.

நீருக்கிரைத்த எள்ளும் சோறும் பித்ருக்களுக்குப் போய் சேருமா?
---------------------------------------------------------------------------------------
ஒருவர் இறந்த திதியையொட்டி பித்ரு காரியங்கள் செய்யப்படுகின்றன. திதி என்பது பஞ்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் ஒன்றாகும்.
பஞ்சாங்கம் – பஞ்ச பூதம்
வாரம் - நெருப்பு
திதி – நீர்
நட்சத்திரம் – காற்று
யோகம் – ஆகாயம்
கரணம் – நிலம்
பஞ்ச பூதங்களில் ஒன்றான திதியானது நீர் தத்துவத்தைக் குறிக்கிறது. பித்ரு பூஜைகளும் நீர் நீர்நிலைகளுக்கு அருகிலேயே செய்யப் படுகிறது. பித்ரு பூஜையின் முக்கிய அம்சம் என்னவென்றால் பூஜை செய்பவன் எள்ளையும்,சோற்றுப்பிண்டத்தையும் நீரில் வைத்து அதன் மீது நீரை தெளிப்பான்.இவ்வாறு நீருக்கிரைக்கப்படும் எள்ளும்,சோற்றுப்பிண்டமும் பித்ருக்களைப்போய் சேருமா? என்பதற்கு தத்துவார்த்தமான விடை உண்டு, அதை பார்ப்போம்.
பஞ்ச பூதம் – புலனுறுப்பு – புலனறிதல்
நிலம் – உடல் – உணர்தல்
நீர் – வாய் –சுவையறிதல்
நெருப்பு – கண்கள் – பார்த்தல்
காற்று – மூக்கு – நுகர்தல்
ஆகாயம் – காது – கேட்டல்
பஞ்ச பூதங்களில் நீரானது புலனுறுப்புகளில் வாயைக்குறிக்கிறது.எனவே நீரில் தெளித்த எள்ளும்,சோறும் பித்ருக்களின் வாய்க்குள் செல்வதாக கொள்ளலாம். மேலும் இறந்தவர்களை வைகுண்ட பதவி அடைந்ததாக கருதுவது வழக்கம். வைகுண்ட நாதனான விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளான். எனவே வைகுண்டம் என்பது சமுத்திரத்தைக்குறிக்கிறது. சமுத்திரத்தில் மீன் வடிவத்தில் முன்னோர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு நம்பிக்கை.
பித்ரு பூஜையை சரிவர செய்ய முடியாதவர்கள் அமாவாசை நாட்களில் புனித நதிகளில் நீராடி மீன்களுக்கு சாதம்,பொரி போன்ற உணவுப்பொருட்களை அளித்தால் பித்ருக்கள் சந்தோசமடைவார்கள். இதன் மூலம் பித்ரு தோசத்திலிருந்து நிவாரணமடையலாம்.

ஓம்

வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற  ஒலி பிறக்கின்றது.
அவ்வொம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.
ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும்.
அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.
வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும்,
ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.
ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,
"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)
"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941)
என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-
என்பவற்றாலும் அறியலாம்.
உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.
ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)
" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.
முதல் எழுத்து:
***************
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.
" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,
அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,
அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்
********************
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.
"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்
உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.
மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.
இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்
அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "
என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.
ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.
இதை விளக்கும்படி திருமூலர்,
ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.
"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும்.
ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.
"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும்.
இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.
ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது.
அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.
போன்றவை எளிதானவைதானே!
பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள்.
ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.
உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.
இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும்.
இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :
பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....
ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.
“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
விநாயகர் படத்தை உற்றுப் பாருங்கள்.
விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான்.
விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.
- *சித்தர்களின் குரல் shiva shangar*

Wednesday, June 21, 2017

பழனி முருகன் சிலை ரகசியம்

காயத்ரி மந்திரத்தின் ரகசியம்

திருப்பதி கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து விடும் ரகசியங்கள்.

அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம். கருடாழ்வார் சன்னதியில் இருந்து கர்ப்பாலயம் வரையிலும் இருக்கும் ஒரு இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு எனர்ஜி பீல்ட் என்று சொல்லப்படும் விஷயமாக இருக்கும். இந்த எனர்ஜி பீல்டு என்பது ஆகமத்தில் சொல்லியிருக்கும் வகையில், நித்தியமும் சுவாமியை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கிண்ணரா, கிம்புருஷா,கருடா, கந்தர்வா, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசா முதலிய இனங்களைச்சேர்ந்த தேவதைகள் எல்லாரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும், சுவாமி அஷ்டோத்ரத்தில் வரும் நாமப்படி ஸ்வேத்ததீபம் எனும் ஒரு முக்தி அடைந்த சித்தர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சித்தர்கள் நித்தியமும் சுவாமியை தரிசித்துக்கொண்டிருப்பார்கள்


 என்றும், குமாரதாரா என்ற தீர்த்தத்தில் எப்பவும் தவத்தில் இருக்கும் ஸ்கந்தன் எனும் முருகப்பெருமான் தினமும் சுவாமியை தரிசிப்பார் என்றும், பல தேவதைகளும் கர்ப்பகிரகத்தில் சுவாமியை வணங்க வருவார்கள் என்றும், அப்படி வருகின்ற தேவதைகளுக்கு பௌதீகமான சொரூபம் (கண்ணுக்கு புலனாகும் உருவம் ) இல்லை என்றும், அவர்கள் சக்தி சொரூபமாகவே சூட்சும ரூபத்தில் வந்து அங்கு கர்ப்பாலயத்தில் இருப்பார்கள் என்றும், அவர்களுடைய வருகையினால், அவர்களுடைய இருக்கையினால்,சக்தி வளையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கும் சக்திவளையங்களுக்குள் மனிதர்கள் செல்லும்போது மனிதர்களின் அறிவு அலைகள் ஆல்பா வேவ்ஸ் இந்த சக்தி வளையத்தின் தாக்குதலால் ஸ்தம்பித்து போய்விடுகிறது.அதாவது, இட்ஸ் கோயிங் பிளாங்.., அதனால், அவர்கள் சுவாமியிடம் என்ன வேண்டும் என்று கேட்க வந்தார்களோ,அந்த விஷயங்களை மறந்து விடுவார்கள்…எ லாஸ் ஆப் மெமரி ஹேப்பன்ஸ்.

தோப்புக்கரணம் தரும் பலன்கள் என்ன...???

உடலின் 72000 நாடிகளையும் வளமாக்க குசா தோப்புக்கரணம்

இனிய வாழ்வு - வேதாத்திரிய விளக்கம் து.பே.அ/ நி சுமதி happy life by Asst....

ஆழ்மனதறிதல் , விஸ்வரூபம் அருள் அறிவு மாமணி A/N சீனி இளங்கோ know the dee...

ஜென்ம நட்சத்திர வழிபாடு தடைகளை நீக்கும்…!!!

கர்மயோகம் SKM ; Karma Yogam '-By Padma Shri A-N.SKM.Maeilanandha...
கர்மயோகம் பாகம்-2; Karma Yogam '-By Padma Shri A/N.SKM.Maeilanandhan, President, WCSC. - Part-2


https://youtu.be/PT90Pd2MyAo


***************************************

9. Enlightenment (முக்தி) - 2015 Healer Baskar (Peace O Master)

"எப்படி வினையை போக்குவது" - முது.பேரா.V.சுப்ரமணியம்how to erase sins by ...

Buddham Saranam Gachami by Hariharan

Tuesday, June 20, 2017

கோலங்கள். KOLANGAL.: ஆனித்திருமஞ்சனக் கோலம் - 1. AANI THIRUMANJANAM KOL...

கோலங்கள். KOLANGAL.: ஆனித்திருமஞ்சனக் கோலம் - 1. AANI THIRUMANJANAM KOL...: ஆனித்திருமஞ்சனக் கோலம் - 1. சூலம் உடுக்கைக் கோலம். நேர்ப்புள்ளி 11- 11 இந்தக் கோலம் 29. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியான...

வேறெந்த கோவில்களிலும் நடக்காத அதிசய நிகழ்வு இங்கு நடக்கிறது...


வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருப்பது
மெய்சிலிர்க்க வைக்கும் ஆச்சரியங்கள் அல்லவா? குளித்தலை, மணப்பாறை வழியி ல் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தின கிரி மலை உள்ளது. இந்த ரத்னகிரி மலையில் முருகன் எழுந்தருளியுள்ளதால் இம்மலை உலகப்புகழ்பெற்றது. மே லும் இம்முருகன் கோவிலை 14ஆம் நூற்றாண்டில் கட்ட ப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுகள் தெரிக்கின்றன• இம்மலையில் முருகன் அருள் பாலி க்காத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு முருகன் அருள் எங்கும் எதிலும் பரவிக் கிடக்கிறது.
மேலும் இக்கோவில் உள்ள மலையில்மேல்தான் வெறெந்த கோவிலிலும் நடக்காத அதிசயமாக இம் மலைமீது காகங்கள் பறப்பதில்லை. இம்மலையில் கோவில்கொண்டுள்ள முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால், சிலமணித்துளிகளிலேயே அந்த அபிஷேக பால் தயிராக மாறி பக்தர்கள் அனைவரையும் அதிசயிக்க வைக்கிறது.

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?

30 miracles in Garbarakshambigai temple

கருவினைக் காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில்

அருள் தரும் கர்ப்பரட்சாம்பிகை Garbharakshambikai

HARE RAMA HARE KRISHNA KEERTHANAM BY SRI SRI MURALIDHARA SWAMIJI

கர்ம வினை

கர்ம வினை எங்கு உள்ளது?

இறைவனுக்கு பாகுபாடு உண்டா?

ஏன் உடலை புதைக்க வேண்டும் ? ஏன் எரிக்க கூடாது ?

இதனை அடைந்துவிட்டால் ரகசியத்தை அறிந்துவிடுவீர்கள்-SWAMI VIVEKANANDA

நம் ஆன்மாவை தவிர வேறு இறைவன் இல்லைSWAMI VIVEKANANDA

புருவமத்தி என்பது அண்ட உச்சி

72000 நாடி நரம்பு

மனோ சக்தியும் மன அமைதியும்..Manosakthiyum Mana Amaithiyum - Arulthanthai...

Monday, June 19, 2017

சக்ரா மந்திரம்


உள்ளங்கையில் மறைந்திருக்கும் கடவுளின் உருவங்கள்!

நம் உறுப்புகளில் ஒன்றான கைகள் நாம் அன்றாட பணிகளைச் செய்வதற்கு மிகவும் பயன்படுகிறது.
கைகளின் உதவி இல்லாமல் நாம் எந்தவொரு செயலையும் செய்ய முடியாது.
செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்கென்று தனி இடம் உண்டு.
கைகளின் சிறப்பு
இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் தான் உதவிகிறது.
நாம் உள்ளங்கைகளைப் பார்க்கும் பொழுது இறைவனின் உருவங்கள், அபயவரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தருவதாக தோன்றும்.
இதனால் இறைவனின் உருவத்தின் பெருமைகளை கைகள் வெளிப்படுத்துகின்றன.
எனவே கைகள் கடவுளுக்குச் சமமானது என வேதங்கள் சொல்கின்றது.
காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளைப் பார்ப்பதற்கான காரணங்கள்
ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. இந்த சாஸ்திரத்தில் கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாக கூறப்படுகிறது.
அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெறுவதற்கு தான் நாம் காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். என்று புராணங்களில் கூறப்பட்டதை நாம் பழக்கவழக்கமாக கொள்கிறோம்.
மேலும் நாம் காலையில் எழுந்து நம் உள்ளங்கைகளை பார்க்கும் போது,
”கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்”
என்ற ஸ்லோகத்தை கூற வேண்டும்.
இவ்வாறு செய்தால் நம்முடைய நடைமுறையில் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றி பல நன்மைகள் நம்மை கூடி வரும் என்பது ஒரு கடவுள் ஐதீகமாக உள்ளது.


உள்ளங்கை ரகசியம்ஓம் என்ற மந்திரம்: உடலில் செய்யும் அதிசயங்கள்

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்;இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.
இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர்,தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.
ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.
ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.
மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.
ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார,உகார,மகாரங்கள் “பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை”க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.
ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின்புறம் உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் “உ” மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம” தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.
ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.
ஏழு சக்கரங்களிலும் அதிர்வு
இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,
1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.
2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.
மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸீம்,ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம்,மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3 ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384 ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம் ,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.
ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,கல்லீரல்,சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள்,சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.
இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.
இறைச்சி உணவு நாம் வணங்கும் இறைவனுக்கு சம்மதமா

Image may contain: 4 people
கருணை பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் ::
கீழே உள்ள வேப்பை கிளிக் செய்து படிக்கலாம் - நன்றி
http://www.atruegod.org/2017/02/06/
http://www.atruegod.org/…/2017/02/Non-veg-book-final-pdf.pdf

Sadhananda Swamigal: திதி நித்யா தேவதைகள் - தெய்வங்கள்

Sadhananda Swamigal: திதி நித்யா தேவதைகள் - தெய்வங்கள்: Thank: http://jothidasaagaram.blogspot.in/2015/12/blog-post_16.html http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=45 http://siva...


  திதி நித்யா தேவதைகள் - தெய்வங்கள்


நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள்.

ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை. அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது. அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள்.

அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

1. பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி நித்யா
2. துவதியை –பகமாலினி நித்யா 
3. திரிதியை – நித்யக்லின்னை நித்யா
4. சதுர்த்தி – பேருண்டா நித்யா
5. பஞ்சமி – வந்நிவாசினி நித்யா
6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி நித்யா
7. ஸப்தமி – சிவதூதி நித்யா
8. அஷ்டமி – த்வரிதா நித்யா
9. நவமி – குலசுந்தரி நித்யா
10. தசமி – நித்ய நித்யா
11. ஏகாதசி – நீலபதாகா நித்யா
12. துவாதசி – விஜயா நித்யா
13. திரயோதசி – ஸர்வமங்களா நித்யா
14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி நித்யா
15. பவுர்ணமி – சித்ராதேவி நித்யா

அன்னையின் காலவடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திரகலை வளர்கிறது.ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக அம்பிகையே வீற்றிருக்கிறாள்.

திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள்.
அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,
திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் 43 முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும்

15 தேவியர் தான் இந்த திதி நித்யா.
நீங்கள் பிறந்த திதியும் திதி நித்யாவும் வளர்பிறை ப்ரதமை திதிக்கும் தேய்பிறை அமாவாசை திதிக்கும்

ஸ்ரீ காமேச்வரி நித்யா வளர்பிறை த்விதியை திதிக்கும் தேய்பிறை சதுர்த்தசி திதிக்கும்

ஸ்ரீ பகமாலினி நித்யா வளர்பிறை த்ருதியை திதிக்கும் தேய்பிறை த்ரயோதசி திதிக்கும்

ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் தேய்பிறை த்வாதசி திதிக்கும்

ஸ்ரீ பேருண்டா நித்யா வளர்பிறை பஞ்சமி திதிக்கும் தேய்பிறை ஏகாதசி திதிக்கும்

ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா வளர்பிறை சஷ்டி திதிக்கும் தேய்பிறை தசமி திதிக்கும்

மகா ஸ்ரீ வஜ்ரேச்வரி நித்யா வளர்பிறை சப்தமி திதிக்கும் தேய்பிறை நவமி திதிக்கும்

ஸ்ரீ சிவதூதி நித்யா வளர்பிறை அஷ்டமி திதிக்கும் தேய்பிறை அஷ்டமி திதிக்கும்

ஸ்ரீ த்வரிதா நித்யா வளர்பிறை நவமி திதிக்கும் தேய்பிறை சப்தமி திதிக்கும்

ஸ்ரீ லஸுந்தரி நித்யா வளர்பிறை தசமி திதிக்கும் தேய்பிறை சஷ்டி திதிக்கும்

ஸ்ரீ நித்யா நித்யா வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும்

ஸ்ரீ நீலபதாகா நித்யா வளர்பிறை த்வாதசி திதிக்கும் தேய்பிறை சதுர்த்தி திதிக்கும்

ஸ்ரீ விஜயா நித்யா வளர்பிறை த்ரயோதசி திதிக்கும் தேய்பிறை த்ருதியை திதிக்கும்

ஸ்ரீ ஸர்வமங்களா நித்யா வளர்பிறை சதுர்த்தசி திதிக்கும் தேய்பிறை த்விதியை திதிக்கும்

ஸ்ரீ ஜ்வாலாமாலினி நித்யா வளர்பிறை பவுர்ணமி திதிக்கும் தேய்பிறை ப்ரதமை திதிக்கும்

ஸ்ரீ சித்ரா நித்யா 15 திதி நித்யா தேவதைகளின் காயத்ரி மந்திரங்கள் :

லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான ‘பராபட்டாரிகா’ என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

ஒரு மாதம் கிருஷ்ண பக்ஷம் (பௌர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பக்ஷம் (அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பக்ஷமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது. மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பக்ஷத்திற்கும் ஒருநாள் ஆக மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

தெய்வங்களை கோகுலாஷ்டமி, ராமநவமி போன்ற திதிகளிலும், நீத்தார் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் உலகை நீத்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அதே நாளில் இந்தத் திதிக்குரிய தேவதைகளை வழிபட மறந்து விடுகிறோம். இதனாலேயே நாம் உரிய பலன்களை பெற முடிவதில்லை என்றும் சொல்லலாம். அன்றன்றைய திதிகளை பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால் நம்மை வறுமை அணுகாது, அனைத்து சங்கடங்களிலிருந்தும் விடுதலையாவோம், இக பர சுகங்களை நிச்சயமாகப் பெறுவோம்.

கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால் மிகச் சிறந்த நலன்களை அந்த உபாசனை தரும். பிரதமை முதல் பௌர்ணமி வரை அப்பிரதட்சணமாகவும், திரும்பவும் அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரை பிரதட்சணமாகவும் பூஜிக்க வேண்டும். இந்த பதினைந்து தேவிகளுக்கும் நம் அன்றாடப் பணிகளில் ஒரு பணியும், அப்பணி நன்கு நடைபெற ஒரு மந்திரமும், யந்திரமும் நியமிக்கப்பட்டுள்ளன.

ஆதிசங்கரரால் பிரசித்தமான ‘சுபாகம தந்த்ர பஞ்சகம்’ என்ற நூலில் இவர்களின் உபாசனை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ‘தந்த்ர ராஜ தந்த்ரம்’ என்ற நூலிலும் இவர்களின் தியான ஸ்லோகங்கள், யந்திரங்களின் விளக்கங்கள், உபாசனை புரியும் முறை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

சர்வம் சக்தி மயம். ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருவருள் பாலிக்கும் இந்த அன்னையர்களின் தோற்றம், வழிபடும் நாட்கள், பலன்கள் என்னென்ன?

1.காமேஸ்வரி

‘காம’ எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள். பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.

மந்திரம்:

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.

வழிபடு பலன்கள்:குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.

2. பகமாலினி

இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். பகம் என்ற சொல்லுக்கு பரிபூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி என்றெல்லாம் பொருளுண்டு. இவற்றுடன் அம்பிகை கூடியிருப்பதால் பகமாலினி ஆனாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இவளுடைய அம்சம் ஆதலால் தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு. சிவந்த நிறமுள்ளவள். சிவப்புக் கற்களால் ஆன நகைகளை அணிவதில் மகிழ்பவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழ்கிறாள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும் வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தருகிறாள். 

மந்திரம்:

ஓம் பகமாலின்யை வித்மஹே ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:சுக்ல பக்ஷ த்விதியை, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி.

வழிபடு பலன்கள்:வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.

3. நித்யக்லின்னா

நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவளின் இதயம் என்றும் கருணையிலேயே ஊறிப்போனதாம்! இவளின் மகிமையைப் பற்றி கருட புராணத்தில், ‘நித்யக்லின்னா மதோவக்ஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்பிகையைத் துதிப்போர் மூவுலகிலும் புக்தி சக்தியோடு வாழ்வர் என்று பொருள். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல் சிந்தும் திருமுக மண்டலம், முக்கண்கள், நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடனும், திரு முடியில் பிறைச்சந்திரனுடனும் அருள்பாலிக்கும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.

மந்திரம்:

ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:  சுக்லபட்ச த்ருதியை, கிருஷ்ணபக்ஷ திரயோதசி.

வழிபடு பலன்:குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் எதுவும் வராது.

4. பேருண்டா நித்யா

அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத்துக்கே ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ’ என்றும் ஓர் திருநாமம் உண்டு. உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடைகளையும், குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் முக்கண்கள் தரித்தவள். 

புன்முறுவல் பூத்து தரிசிப்போரைப் பூரிக்க வைக்கிறார். தன் கர கமலங்களிலும் பக்தர்களின் பாதக மலங்களை அழிக்க பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடித் தாமரையைத் தாமரை மலர் தாங்குகிறது.

மந்திரம்:

ஓம் பேருண்டாயை வித்மஹே விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சதுர்த்தி, கிருஷ்ண பக்ஷ துவாதசி.

வழிபடு பலன்கள்: விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.

5. வஹ்னிவாஸினி

அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி. அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். தேவி லலிதையின் பஞ்சதசாக்ஷரி என்னும் மகா மந்திரத்தின் வாக்பவ, காமராஜ, சக்தி கூடங்களும் மூன்றே ஆகும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள். 

மந்திரம்:

ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ பஞ்சமி, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி.

வழிபடு பலன்கள்:நோய் தீரும். தேக காந்தியோடு, உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.

6. மஹா வஜ்ரேஸ்வரி

இந்த நித்யா ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும் அதற்கருகில் வஜ்ரமயமான நதியொன்று உள்ளதென்றும் அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாஸ மகரிஷி தன் லலிதாஸ்தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க வருபவள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிற பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள். வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். அன்பர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகி, அவர்தம் உடலும், உள்ளமும் தூய்மை பெறச் செய்யும் அதியற்புத சக்தி. கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.

மந்திரம்:

ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சஷ்டி, கிருஷ்ண பக்ஷ தசமி.

வழிபடு பலன்: அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலை.

7. சிவதூதி

இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப&நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குமுன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற க்ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர். எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூர்ய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்னங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள்.

மந்திரம்:

ஓம் சிவதூத்யை வித்மஹே சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சப்தமி, கிருஷ்ண பக்ஷ நவமி.

வழிபடு பலன்கள்: நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கை எதுவும் எளிதில் நிறைவேறும். எந்த ஆபத்தும் நெருங்காது.

8. த்வரிதா

இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள். சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி ஸித்திகளும் ஞானமும் கைகூடும். 

மந்திரம்:

ஓம் த்வரிதாயை வித்மஹே மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ அஷ்டமி.

வழிபடு பலன்கள்: எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.

9. குலஸுந்தரி

குலஸுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள்  துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, ஜபமாலை, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் இவளைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும் அசுரர்களும்கூட இந்த அன்னையின் அருளை வேண்டி  நிற்கின்றனர்.

மந்திரம்:
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ நவமி, கிருஷ்ண பக்ஷ ஸப்தமி.

வழிபடு பலன்கள்:இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.

10. நித்யா

அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, புஷ்பபாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சௌந்தர்ய ரூபவதியான இவள் அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழும் பச்சைப் பசுங்கிளி. 

மந்திரம்:

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ தசமி, கிருஷ்ண பக்ஷ சஷ்டி.

வழிபடு பலன்கள்: அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.

11. நீலபதாகா

நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள். இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள். சிகப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்னங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள். இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் திருவருட் பார்வையினால் ஒரு நொடிப்போதில் மேன்மை கைகூடும்.

மந்திரம்:

ஓம் நீலபதாகாயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ ஏகாதசி, கிருஷ்ண பக்ஷ பஞ்சமி.

வழிபடு பலன்கள்: எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.

12. விஜயா

இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்களும் அழகுக்கு அழகு செய்கின்றன. திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லி மலரை ஏந்தி வலதுகாலை மடித்து இடதுகாலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள். 

மந்திரம்:

ஓம் விஜயா தேவ்யை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ துவாதசி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி.

வழிபடு பலன்கள்: எந்தவகை வழக்குகளிலும் வெற்றி. கலைகளில் தேர்ச்சி.

13. ஸர்வமங்களா

இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்னங்களும் இழைக்கப்பட்ட வைடூர்ய மகுடம் துலங்கப் பொலிகிறாள். இந்த நித்யா தேவியின்  கடைக்கண் பார்வை அனவரதமும், அன்பரைக் காக்கின்றது. தன் நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டுடுத்தி ஸர்வாலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள். இந்த நித்யா தேவியைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன. 

மந்திரம்:

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே சந்த்ராத்மிகாயை திமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ திரயோதசி, கிருஷ்ண பக்ஷ த்ரிதியை.

வழிபடு பலன்கள்: பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.

14. ஜ்வாலா மாலினி

இந்த நித்யா தேவி நெருப்பு ஜ்வாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது. வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜ்வாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள். பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும் முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சதா சூழ்ந்துள்ளனர்.

மந்திரம்:

ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சதுர்த்தசி, கிருஷ்ண பக்ஷ த்விதியை

வழிபடு பலன்கள்: எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.

15. சித்ரா

திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திருமேனியள். பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள். 

மந்திரம்:

ஓம் விசித்ராயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: பௌர்ணமி, கிருஷ்ண பக்ஷ பிரதமை.

வழிபடு பலன்கள்:  திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.


Image result for "திதி தேவதைகள்"


திதிகளின் தெய்வங்கள் !


சுக்லபட்சம்

1. பிரதமை –  குபேரன் மற்றும் பிரம்மா
2. துவதியை – பிரம்மா 
3. திரிதியை – சிவன் மற்றும் கெளரி மாதா
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர் 
5. பஞ்சமி – திரிபுர சுந்தரி
6. ஷஷ்டி – செவ்வாய்
7. ஸப்தமி – ரிஷி மற்றும் இந்திரன் 
8. அஷ்டமி –  காலபைரவர்
9. நவமி –  சரஸ்வதி 
10. தசமி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன் 
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – மகா விஷ்ணு 
13. திரயோதசி – மன்மதன் 
14. சதுர்த்தசி –  காளி
15. பவுர்ணமி – லலிதாம்பிகை 


கிருஷ்ணபட்சம்

1. பிரதமை –  துர்க்கை
2. துவதியை – வாயு 
3. திரிதியை – akni
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர் 
5. பஞ்சமி – நாகதேவதை 
6. ஷஷ்டி – முருகன் 
7. ஸப்தமி – சூரியன் 
8. அஷ்டமி –  மஹாருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி –  சரஸ்வதி 
10. தசமி – எமன் மற்றும் துர்கை 
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – சுக்ரன்
13. திரயோதசி – நந்தி
14. சதுர்த்தசி –  ருத்ரர் 
15..அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி இறை நம்பிக்கை + தன்னம்பிக்கை + முயர்ச்சி + உழைப்பு = வெற்றி
புடிச்ச பகிருங்கள் ! லைக் பொடுங்கள் !!
வெற்றி நிச்சயம் !
வாழ்க வளமுடன் !!