Monday, January 30, 2017

இருபத்தியேழு நட்சத்திரங்கள் வணங்கவேண்டிய சித்தர்கள்

அசுவினி நட்சத்திரம் :
 சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.
பரணி நட்சத்திரம் :
  சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.
கிருத்திகை நட்சத்திரம்:
 ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.
ரோகிணி நட்சத்திரம்:
  சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
மிருகசீரிடம் நட்சத்திரம்:
 சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.
திருவாதிரை நட்சத்திரம்:
 சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.
புனர்பூச நட்சத்திரம்:  
 சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.
பூசம் நட்சத்திரம்:
 கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.
ஆயில்யம் நட்சத்திரம்:
 இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.
மகம் நட்சத்திரம்:
 இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.
பூரம் நட்சத்திரம்:
 இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர்  மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.
உத்திரம் நட்சத்திரம்:
 இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.
அஸ்தம் நட்சத்திரம்:
சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.
சித்திரை நட்சத்திரம்:
 இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.
சுவாதி நட்சத்திரம்:
 இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
விசாகம் நட்சத்திரம்:
 இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.
அனுஷம் நட்சத்திரம்:
 சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
கேட்டை நட்சத்திரம்:
 இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.
மூலம் நட்சத்திரம்:
 இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.
பூராடம் நட்சத்திரம்:
 இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
உத்திராடம் நட்சத்திரம்:
 இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.
திருவோணம் நட்சத்திரம்
 இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.
அவிட்டம் நட்சத்திரம்:
 இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.
சதயம் நட்சத்திரம்:
 இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.
பூராட்டாதி நட்சத்திரம்:
 இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.
உத்திரட்டாதி நட்சத்திரம்:
 இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.
ரேவதி நட்சத்திரம்:
 இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது. மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்.

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன் ரகசியத்தை அறிவோம்.
1. மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்?
மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.
நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில் சேர்கின்றது அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால், நமக்குள் அது வலிமை பெறுகின்றது.
விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும்,
வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின்,
நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.
ஏனென்றால், மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியபின், விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக, மாட்டின் சாணம் வெளிப்படுகின்றது. ஆகவே, விஷத்தை ஒடுக்கும் வல்லமை மாட்டின் சாணத்திற்கு உண்டு.
ஆகையால், ஞானிகள் “மாட்டின் சாணத்தை வீட்டில் தெளி” என்றார்கள். மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால், நம்மால் வெளியிடப்பட்டு, வீட்டில் பதிந்துள்ள சங்கடம், சலிப்பு, வேதனை, போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.
2. எந்த எண்ணத்துடன் கோலம் போடவேண்டும்?
அதே மாதிரி வீடுகளில் கோலம் போடுவார்கள். இது சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை. கோலம் எதற்காகப் போடுகிறார்கள்? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.
கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப் புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.
நாம் நமது வீட்டில் கோலப்பொடி வைத்திருக்கிறோம். மற்ற எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். ஆனால், மாமியார் மீது வெறுப்பு, மாமனார் மீது வெறுப்பு, கணவர் மீது வெறுப்பு என்று மனதில் வெறுப்பு கொண்டு, புள்ளி வைத்தால் எப்படியிருக்கும்?
இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும்? அது ஒழுங்காக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.
ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது, பற்றும் பாசமும் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.
குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி
கோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
ஆக, நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால், நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும், இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித்தான், இங்கு கோலமிட வேண்டும்.
ஆக, நம் முன்னோரான சித்தபெருமக்கள் வகுத்த அறிவியல் தத்துவங்கள் பொய்யல்ல.
நாம் தெளிவாக இதையெல்லாம் தெரிந்து அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ்வோம்.



உடலுக்கு ஆரோக்கியம் தரும் வழிபாட்டு முறைகள்!
ஆலயத்திற்கு நாம் உடலை சுத்தம் செய்து தூய்மையான ஆடையணிந்து செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுடன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும். பின் ஆலயத்திற்குள் செல்லும் முன் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பர். கோபுரதரிசனம் செய்ய மேல்நோக்கி பார்க்கும் போது தலைக்கான பயிற்சி ஆரம்பிக்கின்றது. மூன்றுமுறை கீழிருந்து மேலாக பார்த்து வணங்கும் போது தலைக்கான இரத்தோட்டம் சீராகும்.
ஆலயம் உள் சென்ற உடன் முதலில் செய்வது விநாயகர் வழிபாடு. விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு புருவப் பொட்டில் மூன்றுமுறை குட்டி வழிபடுவது வழக்கம், இவ்வாறு குட்டுகின்ற போது புத்தியைச் செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும் இதனால் இரத்தோட்டம் அதிகரிக்கும் செவிகள் இரண்டையும் இழுக்கும் போது நரம்பு கீழ்நோக்கி இழுபடும் இதனால் மூளையில் சிந்திப்பதற்கான பகுதி செயல்படும். அடுத்து ஆலயத்தை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை வலம் வருவர். வலம் வரும் போது நடப்பது ஓர் சிறந்த உடல் பயிற்சி என்பர். சிலர் பிரதட்ணம் பண்ணுவர். இதனால் குடல் தொடர்பான நோய்களுக்கும் இரத்தோட்ட சீரக்கத்துக்கும் சிறந்த உடல் பயிற்சி என்பர். அடுத்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர். அஷ்டாங்க நமஸ்காரம் என்னும் போது அஷ்டாங்கம் என்பது தலை கையிரண்டு செவியிரண்டு மோவாய் புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந்தும் படி வலக்கையை முன்னால் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டிய பின் அம்முறையே மடக்கி வலபுயமும் இடபுயமும் மண்னிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டிவலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதாகும். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த ஆண்களுக்கான உடல் பயிற்சியாகும். இது போன்று பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர் பஞ்சாங்க என்பது தலை கையிரண்டு முழந்தாளிரண்டு என்னுதைந்தவயவங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும். இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்.

Sunday, January 29, 2017

சித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள் !!!
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
(9) 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.
(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.
(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..
(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்
(18)கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப் பரிகாரம்:
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று
(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
இதற்குப் பரிகாரம்:
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்
(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.



ஜாதகம் இல்லாதவர்களுக்கு
பரிகாரம்:
ஜாதகம் இல்லாதவர்களுக்கு துன்பங்கள் வந்தால் அதை சரி செய்ய எளிமையான ஒரு பரிகாரம்.
நல்ல முற்றிய கொப்பரை தேங்காய் ஒன்றினை மட்டையோடு எடுத்துக்கொள்ளுங்கள்.அதன் மேலே சீவி அதில் ஒரு ஓட்டை போடுங்கள். அதனுள்பேரீச்சம்பழம்,கரும்புச்சர்க்கரை,முந்திரி ஆகிய மூன்றையும் போட்டு அடைத்து எடுத்துச்சென்று ஒரு அரச மரத்தின் அடியில் பதித்து விடவும்.அதன் பிறகு துன்பங்கள் குறைந்து நன்மைகள் நடக்கும்.
ஜாதகம் இல்லாதவர்கள் எந்த கோவிலுக்கு போக வேண்டும்...??
விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோவிலின் உள்ளே ஆழத்து விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோயில் இருக்கும் ஆழத்து விநாயகர் தரைமட்டத்தில் இருந்து கீழே பள்ளத்தில் இருப்பதால் ஆழத்து விநாயகர் என்று அழைக்க
படுகின்றார்.
ஆழத்து விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பிரம்மாவுக்கு அறிவு புகுத்தியவர் இந்த ஆழத்து விநாயகர் என்று கூறப்படுகிறது.
பிரம்மா, விருத்தாசலத்தில் மலையை உருவாக்க எண்ணினார். அங்கு சிவபெருமான் பழைய(ஆதி) மலையாக காட்சி அளித்தார்.
ஆகையால் பிரம்மா, சிவனே மலையாக இருக்கிறார் என்று சென்றுவிட்டார்.
இங்கு உள்ள ஆழத்து விநாயகர், திருமண தடை நீக்குகிறார், குழந்தை பாக்கியம் தருகின்றார், சிறந்த கல்வி வழங்குகின்றார்.21 பிறவிகளில் ஏற்பட்ட தோஷங்களை நீக்குகிறார்.
ஜாதகம் இல்லாதவர்கள் இங்கு வந்து இவரை வேண்டி வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்க பெறுகின்றனர்.
சங்கடகர சதுர்த்தி அன்று இவரை வேண்டி வணங்கினால் எல்லா சங்கடங்களும் நீங்கும்.
உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து 108, 27, என்ற எண்ணிக்கையில் சிதறு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
ஜாதகம் இல்லாதவர்களின் கிரக தோஷங்களை நீக்கும் பரிகாரம்
பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் ஜாதகம் இல்லாதவர்களின் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால் தடைபடும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும்.
ஜாதகம் இல்லாதவர்களுக்கு மிக சக்தி வாய்ந்த பரிகாரமாக எந்த எந்த நாளில் எந்த உயிர்களுக்கு உணவிட்டு பலன் தேடி கொள்ளலாம் என்பது கீழே
கொடுக்கப்பட்டுள்ளது-
ஜாதகம் இல்லாதவர்கள் ஏழு நாட்களும் அந்தந்த நாட்களுக்குரிய கிரகத்தின் அருளை பெறுவதற்கு தங்களால் முடிந்த அளவு மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் போன்ற உயிர்களுக்கு உணவிட்டு வருவது அவர்களது அனேக பிரச்சனைகளுக்கு உடனடி பலன் அளிக்க கூடிய பரிகாரமாகும்.அன்றாட வாழ்வில் இதன் பயனை உடனடியாக உணரலாம்.
நாட்கள் - கிரகம் - உணவு
ஞாயிறு - சூரியகிரகம்- சப்பாத்தி மற்றும் ஊற வைத்த கோதுமையை பசுக்களுக்கு கொடுக்கலாம். வெல்லம் குரங்குகளுக்கு கொடுக்கலாம்.
திங்கள் - சந்திரகிரகம் - கோதுமை மாவை சீறிய உருண்டைகள் செய்து
மீன்களுக்கு உணவிடலாம். (வீட்டில் உள்ள மீன் தொட்டி மீன்களுக்கல்ல)
பசுவிற்க்கு நீர் அருந்த வைக்கலாம்.
செவ்வாய் - செவ்வாய கிரகம்-ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் வெல்லம் குரங்குகளுக்கு கொடுக்கலாம்.இனிப்பு பொடி எறும்புகளுக்கு போடலாம்.
புதன் -புதன்கிரகம்-பச்சை புற்கள், அகத்தி கீரை பசுக்களுக்கு கோடுக்கலாம அல்லது குதிரைவாலி அரிசியை (உணவு பொருள்-நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) புறாக்களுக்கு இடலாம்.
வியாழன் - குரு - ஊற வைத்த கொண்டை கடலையை- குதிரை மற்றும்பசுக்களுக்கும்- சோளத்தை புறாக்களுக்கும் வழங்கலாம்.
வெள்ளி - சுக்கிர கிரகம் - பூனைகளுக்கு பாலும் - பசுக்களுக்கு புற்கள் அல்லது அகத்திகீரையையும் வழங்கலாம்.
சனி - சனிகிரகம்- கருப்பு நாய்கள் மற்றும் கருப்பு பசுக்களுக்கு நல்லெண்ணையில்சுட்ட சப்பாத்தி அல்லது வேறு உணவுகளை வழங்கலாம்
புதன் அல்லது சனி - ராகுகிரகம்- எருமைகளுக்கு தீனி வைத்தல் மற்றும்
யானைகளுக்கு இலை தழை,வாழைப்பழங்கள் ஏதேனும் வழங்கலாம்.
வெள்ளி-கேதுகிரகம்- நாய் வளர்க்கலாம், அல்லது முயல், பசு எது முடிகிறதோ அது. ஆனால்
அவைகளை துன்புறுத்தாமல் தினசரி உணவிட்டு பராமரிக்க வேண்டும்.
பொதுவாகவே தினசரி நாய்களுக்கு ஒரு மூன்று ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டாவது வாங்கி போட்டு வருவது நலம். மேலும் உங்கள் குழந்தைகளுக்கும்
நாய்,பூனை சிறு உயிரினங்கள்,எறும்பு போன்றவற்றை துன்புறுத்தாமல்
இருக்க கற்று கொடுத்து, கர்ம வினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றி வாருங்கள்.
விருத்தாசலம் ஆழத்துபிள்ளையார் கோவில்

Friday, January 27, 2017

 நாயகி, நான்முகி என தொடங்கும் 50 ஆவது பாடலின் விளக்கத்தை கூறிய அவர், இந்த பாடலை நம்பிக்கையோடு பாராயணம் செய்தால் எல்லா நலமும் கூடும் என்று கூற, அதை குறிப்பு எடுத்து கொண்ட அவர், நாளை ஒரு நாள் இதை பாராயணம் செய்து பார்த்து பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என தன் முடிவை தள்ளி போட்டார். வீட்டிற்கு சென்று அந்த பாடலை பாராயணம் செய்து கொண்டே இருந்தார். அன்று மாலை அவருக்கு ஒரு கல்லூரியில் இருந்து பணிக்கு அழைப்பு வந்தது. இருப்பினும் அங்கு சென்று கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே என தன்னை ஓரளவு தயார் செய்து கொண்டவர், தன் தந்தையிடம் தனது ஆடைகளை இஸ்திரி போட பணம் கேட்ட பொது கூட ஆமா, இந்த வேலை மட்டும் கெடச்சுட போகுதா அப்டியே போ என்று கடிந்து கொண்டார். சரி என அம்பாள் மேல் பாரத்தை போட்டு விட்டு அந்த பாடலையே பாராயணம் செய்து கொண்டு அந்த கல்லூரிக்கு சென்றார், நேரம் 10 மணி ஒருவரும் வரவில்லை. மணி 12.15 காவலாளி வந்து உள்ளே உங்களை அழைப்பதாக கூற, சான்றிதழ்களை சரி பார்த்துவிட்டு, பெயரை மட்டும் கேட்டுவிட்டு, உங்களை பேராசிரியர் பணிக்கு சேர்த்துக்கொள்கிறேன் என்றார். ஒரு கேள்வி கூட கேட்கவில்லையே என்று யோசிக்க, நாளை மறுநாள் முதல் கல்லூரி திறக்கப்படவேண்டும், அதோடு வேறு யாரும் உங்களுக்கு போட்டியாக வரவும் இல்லை. எனவே உங்களையே தேர்வு செய்கிறேன் வாழ்த்துக்கள் என்றார். ஆனந்த கண்ணீர் பெறுக, மீனாட்சியின் திருவடிகளை வணங்கினார். அந்த பாடலை எப்போதும் பாடிக்கொண்டு இருந்தார். முதல் மாதம் சம்பளம் வாங்கிய அவர் உபன்யாசம் செய்த மணிமாறன் இளம்பிறை அவர்களுக்கு மணிஆர்டர் அனுப்பினார். அதை திருப்பி அனுப்பிய உபன்யாஸகி வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டதோடு, அந்த பணத்தில் அன்னை மீனாக்ஷிக்கு பட்டு புடவை சார்த்துமாறு கேட்டுக்கொண்டார்கள் அப்படியே செய்து நலம் பெற்றார் அந்த அடியவர். தனது வாழ்க்கை இன்றோடு முடித்துக்கொள்ளலாம் என நினைத்து தனது வேலை இல்லாத கொடுமையை மாற்றி தந்த சக்தியுடைய அபிராமி அந்தாதி ஒரு பாடல் எனில், தினமும் 102 பாடல்களையும் படித்து அம்பிகை வணங்கினால் அதன் பலன்களை அளவிட்டு கூற இயலாது... இந்த தை அமாவாசை நாளில் இருந்து நாமும் தினமும் அபிராமி அந்தாதி பாராயணம் செய்து அன்னை அருள் பெறுவோம்.
..

Tuesday, January 17, 2017

இந்த பதிவை ஒருவர் படிக்கிறார் எனில் அதற்கு அவர்கள் நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும் இதை படித்த பின் ருத்ராட்சம் அணிந்து கொள்வார் எனில் இறைவன் அவர்கள் மீது கருணை செய்திருக்க வேண்டும், ஏனெனில் ருத்ராட்சம் அணிந்து இருப்பவர்கள் அனைவரும் சிவ குடும்பமே சிவ குடும்பத்தில் ஒருவர் ஆவார்.
பூர்வ ஜென்மத்தில் ஒரு ஆன்மா புண்ணியம் செய்திருந்தால் தான் ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும் .
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். சிவபுராணத்தில் "புல்லாகிப், பூடாய்ப், புழுவாய், மரமாகிப், பல்விருக மாகிப், பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய் வல்லசுரர், ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்! என்ற பாடல் வரிக்கேற்ப நாம் பல பிறவி கஷ்டங்களை கடந்து வந்துள்ளோம். உலகில் மொத்தம் 84 நான்கு லட்சம் உயிரினங்கள் உள்ளது அதில் கடைசி பிறப்பு தான் மானிட பிறவி.
ஒரு அறிவு புல் பூண்டு மரம் செடி கொடிகள்!
இரண்டு அறிவு நீரில் வாழ்பவை மீன் தவளை முதலை நண்டு!
மூன்று அறிவு நிலத்தில் ஊர்பவை பாம்பு பல்லி ஓணான்!
நான்கு அறிவு வானில் பறப்பவை மயில் குயில் கழுகு புறா காகம்!
ஐந்து அறிவு ஆடு மாடு சிங்கம் புலி யானை எருமை நாய் பூனை!
ஆறு அறிவு ஆண் பெண், திருநங்கை
என்று இந்த ஆறு அறிவும் ஒன்று முதல் எண்பத்தி நான்கு லட்சம் முடிய பிறந்து இறந்து இறந்து பிறந்து 8399999 வரை மற்ற உயிரினங்களாக வாழ்ந்து 8400000 லட்சம் எண்ணும்போது தான் மானிடப் பிறவி அதுவும் 8399999 இறந்த பிறந்து வாழும்போது இதில் ஏதாவது
ஒரு பிறப்பில் புண்ணிய காரியம் செய்து இருந்தால்தான் மானிட பிறவி கிடைக்கும் அப்படி பட்ட அரிதான மனித பிறவி எடுத்து பிரயோஜனம் இல்லாமல் போய்விடகூடாது என்பதற்காகத்தான் இறைவன் நம்மீது கருணை கொண்டு தேவர்களுக்கு கூட கிடைக்காத மஹா பொக்கிஷம்மான *திருநீறு* *ருத்ராட்சம்* *பஞ்சாட்சரம்*
அருளி உள்ளார் இவைகளை பயன் படுத்தி அனைவரும் பயன்பெறலாம் இதை என் அனுபவத்தில் அனுபவித்து சொல்லுகின்றேன்.
சிலர் சொல்லுவார்கள் சுத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று?
ஆம் சுத்தம் என்பது மனதை சுத்தமாக வைத்துக்கொள்வது பிறர்க்கு துன்பம் தராமல் இருப்பது, பிறரின் சொத்துக்களை அபகரிப்பு செய்வது, கடும் பொறாமை படுவது, திருடுவது , ஏளனமாக நடப்பது, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம் செய்வது, தவறு செய்யாத பிறருக்கு தண்டனை தருவது, தண்டிப்பது, கோர்ட்டில் பொய் சாட்சி சொல்வது, இதைப்போன்ற சுத்தம் இல்லாத மனிதநேயம் இல்லாத காரியங்கள் செய்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய கூடாது.
தர்மம் மனிதாபிமானம் மனிதநேயம் மரியாதை கனிவு அன்பு கருணை பக்தி பிரதோஷம் அன்று ஆலயம் செல்வது இதுபோன்ற நல்ல
நற்காரியங்களை செய்பவர்கள் ருத்ராட்சம் கண்டிப்பாக 10000000000000008,மடங்கு அணியலாம் நாம் பிறந்ததின் பயனும் பெறலாம்
உதாரணத்திற்கு
63 நாயன்மார்கள் பெரியபுராணம் படியுங்கள் தெளிவு கிடைக்கும் வெற்றி நிச்சயம்.
"திருச்சிற்றம்பலம்".
திருநீறு (நெற்றியில்) தரித்தல் ருத்ராட்ஷம் (கழுத்தில்) அனிதல் பஞ்சாட்சர மந்திரம் (ஓம் நமசிவாய மனதில்) உச்சரித்தல் இம்மூன்றும் ஒருவர் ஒரு சேரச் செய்வார் எனில் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யங்கள் பெறுகும்
இறைவனின் (சிவபெருமானின்) கருணை கிடைக்கப்பெறும்



Monday, January 16, 2017

உண்மையான பிறந்த நாள் -ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும், ஒரு விரிவான அலசல் !!!
நாம் இந்துக்கள், சாஸ்திர சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள். ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்ச்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்ச்சத்திரம் ஆகும். பிறந்த நட்ச்சத்திரம் , அந்த நட்ச்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் . எமது கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நடச்சத்திரம் , அதன் அதிபதி. .
.இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்ச்சத்திரங்கள் . ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான்.எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விட்டு விடாதீர்கள்.
குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, உங்கள் ஜாதகம் மூலம், (தீமைகள் அகல, தோஷம் விலக ) எந்த கடவுளை வழிபட
வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிபிடத்தக்கது. ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.
ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது.
ஜென்ம நடச்சத்திரத்தின் மகிமைக்கு உதாரணமாக இந்த கதையையும் கூறுகிறேன்
வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி, இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது. இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். அது ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்.
நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். இதில் எந்த பலனும் கிடைக்காது.
அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100-க்கு 100 வெற்றியைப் பெறலாம். பிறந்த நாளில் ஆத்ம திருப்திக்கு கோவில் சென்றாலும் , அர்ச்சனை செய்யும் பொது கூட, பிறந்த நட்ச்சத்திரத்தை கூறி அர்ச்சனை செய்கிறோமே தவிர பிறந்தநாளை யாரும் கூறுவதில்லை. பிறந்த நாளை பெரிய பார்டி கொண்டாடுவது ஆங்கில கலாச்சாரமே, இதில் எந்த வித ஜோதிட அனுகூலமோ ரகசியமோ இல்லை.

Wednesday, January 11, 2017



பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்
1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.
2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.
3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .
4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.
5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச் சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.
6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.
7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.
8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.
9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்

Tuesday, January 10, 2017

ஆருத்ரா தரிசனம்- திருவாதிரைக் களி செய்வது எப்படி ?

தூங்கும் போது கட்டிலுக்கு அடியில் ஒரு டம்ளர் நீரை ஏன் வைக்க வேண்டும் எனத...

செல்வம் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!

ஸ்ரீ ருத்ரம் கேட்பதால் கிடைக்கும் நன்மைகள் | Sri Rudram



திருப்பள்ளியெழுச்சி Thirupalliyezhuchi

சித்தபுருஷர் போகர் அருளிய மகாமந்திரம் - ஞானிபிருந்தாவனர்/Bohar Mahamant...

1.உங்கள் தேகத்தினுள்ளே தெய்வத்தை காணலாம் | பகுதி 1 |ஞானிபிருந்தாவனர் | F...

நினைத்த பணம் கையில் சேர வேண்டுமா..?????

Monday, January 9, 2017

கோடியை அள்ளித்தரும் மணி பிளாண்ட் - Money Plant Gives Crores of Money ..!!

வீடு நிறைய செல்வம் ஜொலித்து இருக்க வேண்டுமா???? - Tips for Money in Home

வற்றாத பண வரவிற்கு பரிகாரம்

பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள்

பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள்
பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ள
து. ஸ்ரீமத் பாகவதம் 3:20:46 ல் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் முகூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம் அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும். இதில் தைத்ரீய பிராஹ்மனத்தில் மூன்றாம் பாகத்தில் 10:1:1 லும், சதபாத பிராஹ்மனத்தில் X 4-2-18.25-27; 3,20; XII 3,2,5 மற்றும் X 4,4,4 லும் பிரம்மமுகூர்த்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. கர்கசம்ஹிதையில் 4:8:19, 4:18:14, 5:15:2, 8:10:7 ஆகிய ஸ்லோகங்களில் பிரம்ம முகூர்த்தம் பற்றியும் அதன் சிறப்பையும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முஹூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது. அவையாவன :
1. रुद्र मुहुर्त --------- ருத்ர முஹுர்த்தம்----
-----------06.00AM – 06.48AM
2. आहि मुहुर्त - ஆஹி முஹுர்த்தம்--------- 06.48am –07.36am
3. मित्र मुहुर्त -- மித்ர முஹுர்த்தம்----
--------------- 07.36am – 08.24am
4. पित्रु मुहुर्त--------- பித்ரு முஹுர்த்தம்----
------------- 08.24am – 09.12am
5. वसु मुहुर्त--------- வசு முஹுர்த்தம்----
---------------- 09.12am – 10.00am
6. वाराह मुहुर्त------- வராஹ முஹுர்த்தம்----
--------- 10.00am – 10.48am
7. विश्वेदेवा मुहुर्त -- விச்வேதேவாமுஹுர
்த்தம்---- 10.48am – 11.36am
8. विधि मुहुर्त-----விதி முஹுர்த்தம்----
--------------- 11.36am – 12.24pm
9. सुतमुखी मुहुर्त---- சுதாமுகீ முஹுர்த்தம்------------ 12.24pm – 01.12pm
10. पुरुहूत मुहुर्त----- புருஹூத முஹுர்த்தம்---------- 01.12pm – 02.00pm
11. वाहिनी मुहुर्त---- வாஹிநீ முஹுர்த்தம்------------ 02.00pm – 02.48pm
12. नक्तनकरा मुहुर्त நக்தனகரா முஹுர்த்தம்------ 02.48pm – 03.36pm
13. वरुण मुहुर्त------ வருண முஹுர்த்தம்----
---------- 03.36pm – 04.24pm
14. अर्यमन् मुहुर्त--- அர்யமன் முஹுர்த்தம்----
------ 04.24pm – 05.12pm
15. भग मुहुर्त------- பக முஹுர்த்தம்--------------------- 05.12pm – 06.00pm
16. गिरीश मुहुर्त---- கிரீச முஹுர்த்தம்----
------------- 06.00pm – 06.48pm
17. अजपाद मुहुर्त--- அஜபாத முஹுர்த்தம்----
-------- 06.48pm – 07.36pm
18. अहिर्बुध्न्य मुहुर्तஅஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36pm – 08.24pm
19. पुश्य मुहुर्त----புஷ்ய முஹுர்த்தம்-------------- 08.24pm – 09.12pm
20. अश्विनी मुहुर्त---அச்விநீ முஹுர்த்தம்----
-------- 09.12pm – 10.00pm
21. यम मुहुर्त------- யம முஹுர்த்தம்------------------ 10.00pm – 10.48pm
22. अग्नि मुहुर्त----- அக்னி முஹுர்த்தம்----
--------- 10.48pm – 11.36pm
23. विधात्ऱ् मुहुर्त--- விதாத்ரு முஹுர்த்தம்-------- 11.36pm – 12.24am
24. कण्ड मुहुर्त------ கண்ட முஹுர்த்தம்------------- 12.24am – 01.12am
25. अदिति मुहुर्त---- அதிதி முஹுர்த்தம்----
---------- 01.12am – 02.00am
26. जीव/अम्र्त मुहुर्त ஜீவ/அம்ருத முஹுர்த்தம்--- 02.00am – 02.48am
27. विश्णु मुहुर्त----- விஷ்ணு முஹுர்த்தம்----
-------- 02.48am – 03.36am
28. द्युमद्गद्युति मुहुर्त- த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்-- 03.36am – 04.24am
29. ब्रह्म मुहुर्त------ பிரம்ம முஹுர்த்தம்----
----------- 04.24am – 05.12am
30. समुद्रम् मुहुर्त--- சமுத்ரம் முஹுர்த்தம்----
-------- 05.12am – 06.00am
மேலே சொல்லியுள்ளவற்றில் 29வதாகச் சொல்லப்பட்டிருப்பதுதான் பிரம்மமுகூர்த்தமாகும். இவற்றுள் 26வது முஹூர்த்தமான ஜீவ/அம்ருத முஹூர்த்தம் மற்றும் 29வது முஹூர்த்தமான ப்ரம்ம முஹூர்த்தம் ஆகியவை இறைவழிபாடு மற்றும் திருமண வைபவங்களுக்கு மிகவும் சிறப்பான முஹூர்த்தங்களாகும


Wednesday, January 4, 2017

1.விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் .
2.வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.
3.தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட்/தொட்டி /குளம் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும்.
4.கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும்.
5.அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன் 3 மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர தொல்லைகள் நீங்கும் .
6.எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.
7.சாம்பிராணி தூபம்..
வெண்கடுகு ,நாய்க்கடுகு ,மருதாணி விதை ,சாம்பிராணி ,
அருகம்புல் வில்வ இலை ,
வேப்ப இலை இவைகளை நன்றாக கைய வைத்து துளாக்கி சம்பிராணியுடன் கலந்து வீட்டில் அடிக்கடி தூபம் போட வேண்டும்…(இந்த கலவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கலாம்)
வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது.
அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும்.
வில்வம் மற்றும் வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது.
மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.
இப்படி செய்யும் பொழுது ..வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல் படும் …
8. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம்
செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது,பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்..
9.ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு “கோ” என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்,அகவே பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்…
10.முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.
11.வசிய கட்டு ,தீய மைகள் , தீய வசிய ஏவல் போன்ற சக்திகள் ஒரு மனிதனுக்கு செய்யப்பட்டு இருந்தால் அவைகள் மழை நீரில் அல்லது கறந்த பசும்பாலில்(கறவை சூடாக) தலையில் நனைந்து விட்டால் அந்த சக்திகள் செயல் இழந்து போகும் ….
12.இந்த வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைத்து வழிபடலாம்..
13.ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை வாசற்படியில் தெளிக்கவும்.
14.வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது..

Sunday, January 1, 2017

'சனியனே' என்று திட்டினால் என்ன நடக்கும் தெரியுமா? - Tamil TV

துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்கவும், கெட்ட எண்ணங்களிலிருந்து விடுபட, பண...

வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் வரும் என்கிறார்களே ஏன்?

வீட்டில் சிலர் பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்க விடுகிறார்களே! ஏன்?

எளிய பரிகாரங்களும் மிக பெரிய பலன்களும்...!

“8” ல் நடந்து பாருங்கள்...!!!

கல் உப்பு - கேட்டது கிடைக்கும்…!!!

உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி!!!

My Whatsapp Collections - K.Karthik Raja: ‪45 ஆன்மீக‬ ‪‎சூட்சமங்கள் - ‎சகல‬ ‪‎செல்வங்கள்‬ ‪‎...

My Whatsapp Collections - K.Karthik Raja: ‪45 ஆன்மீக‬ ‪‎சூட்சமங்கள் - ‎சகல‬ ‪‎செல்வங்கள்‬ ‪‎...: ‪45 ஆன்மீக‬ ‪‎சூட்சமங்கள் - ‎சகல‬ ‪‎செல்வங்கள்‬ ‪‎நிலைக்க‬ ---------------------- நீங்கள பரிகாரம் எதுவும் செய்ய வேண்டாம். கோயிலுக்கு போ...

Best of TamilNadu - Medicines,Naturals,Knowledge: செல்வம் பெருக சில குறிப்புகள்

Best of TamilNadu - Medicines,Naturals,Knowledge: செல்வம் பெருக சில குறிப்புகள்: செல்வம் பெருக சில குறிப்புகள் !!! வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வீட்டி...

Spritual: தடைகள் விலக தாந்த்ரீக முறை :

Spritual: தடைகள் விலக தாந்த்ரீக முறை :: இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய வேண்டும். ஆகாசதாமரை செடியை வியாழன் அன்று பறித்தோ (ஏரி மற்றும் நீர் நிலைகளில...