Tuesday, August 8, 2017

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..?

தலை - சிவபெருமான்

நெற்றி - சிவசக்தி
வலது கொம்பு - கங்கை
இடது கொம்பு - யமுனை
கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
கொம்பின் அடியில் - பிரம்மன், திருமால்
மூக்கின் நுனி - முருகன்
மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள்
இரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர்
இரு கண்கள் - சூரியன், சந்திரன்
வாய் - சர்ப்பாசுரர்கள்
பற்கள் - வாயுதேவர்
நாக்கு - வருணதேவர்
நெஞ்சு - கலைமகள்
கழுத்து - இந்திரன்
மணித்தலம் - எமன்
உதடு - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
கொண்டை - பன்னிரு ஆதித்யர்கள்
மார்பு - சாத்திய தேவர்கள்
வயிறு - பூமிதேவி
கால்கள் - வாயு தேவன்
முழந்தாள் - மருத்து தேவர்
குளம்பு - தேவர்கள்
குளம்பின் நுனி - நாகர்கள்
குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள்
குளம்பின் மேல்பகுதி - அரம்பெயர்கள்
முதுகு - ருத்திரர்
யோனி - சப்த மாதர் (ஏழு கன்னியர்)
குதம் - லட்சுமி
முன் கால் - பிரம்மா
பின் கால் - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
பால் மடி - ஏழு கடல்கள்
சந்திகள் - அஷ்ட வசுக்கள்
அரைப் பரப்பில் - பித்ரு தேவதை
வால் முடி - ஆத்திகன்
உடல்முடி - மகா முனிவர்கள்
எல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர்
சிறுநீர் - ஆகாய கங்கை
சாணம் - யமுனை
சடதாக்கினி - காருக பத்தியம்
வாயில் - சர்ப்பரசர்கள்
இதயம் - ஆகவணியம்
முகம் - தட்சரைக் கினியம்
எலும்பு, சுக்கிலம் - யாகத் தொழில்
பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.
அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள்.
எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.
கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.
லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.Tuesday, August 1, 2017

நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள

முருகன் கையில் இருக்கும் வேலின் ரகசியம் என்ன.?

கோ சேவை


கோ சேவை
ரமண மகரிஷி :-
~~~~~~~~~~
சேவைகளுக்கெல்லாம் சிகரம் போன்றது கோ-சேவை.
கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை விடவே கூடாது.
தயங்கவும் கூடாது
பசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா..???
ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார்.
வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி.
அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது.
எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம்,
ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை.
ஒரு கட்டத்தில் ஆடையே உடுத்த முடியாத அளவு நோயின் தீவிரம் அதிகமானது.
எரிச்சலிலும் வலியிலும் துடித்தார்.
ரமணரை போய் பார்த்தால் ஏதாவது தீர்வு சொல்வார் என்று யாரோ சொல்ல
ரமணரை நாடி திருவண்ணாமலை வந்தார்.
பகவான் ரமணர் அவரை பார்த்து,
“நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து.
உன்னிடம் உள்ள செல்வத்தை கொண்டு ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய்.
ஆஸ்ரமத்தில் உள்ள கோ-சாலையில் ஒரு மண்டலம் வேலை செய்.
பசுக்களை குளிப்பாட்டு,
சாணத்தை அள்ளிப்போடு,
கோ-சாலையை சுத்தம் செய்!”
என்றார்.
செல்வந்தரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு,
ஆஸ்ரமத்தின், . . .
கோ-சாலையில் வேலை செய்ய ஆரம்பித்தார்.
சரியாக, 48 நாள் கழித்து பார்த்தபோது ,
அவரது உடலில் தோல் நோய் இருந்த தடயமே மறைந்து போய் அவருக்கு பரிபூரணமாக குணமாகியிருந்தது.
பசுவின் சாணம்,
கோமியம் ,
ஆகியவை நம் மேல்படுவது,
பசுக்களின் மூச்சுக் காற்றை நாம் சுவாசிப்பதும்,
சஞ்சீவனியை விட சிறந்த மருந்து என்பது ரமணருக்கு தெரியாதா என்ன..???
தீராத தோல் நோய் உள்ளவர்கள்,
உங்கள் அந்தஸ்தை தூக்கி தூர போட்டுவிட்டு,
ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவு பணியை செய்து பாருங்கள்.
கோ-சேவையின் மகத்துவம் புரியும்
அனைத்து உயிரனங்களுக்கும் தோஷம் உண்டு
ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசு மட்டுமே.
ஒரு பசுவை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும்
தொழுவத்தில் இருந்தாலும்
பார்ப்பவருக்கு பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்
பிரம்மஹத்தி தோஷமே விலகும்போது சாதாரண தோல் நோய் குணமாகாதா...???
காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல்,
கீழ்கண்ட மந்திரத்தை கூறி பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால்
புத்திரப் பேறு கிடைக்காத பெண்ணுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்/
🙏 சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.🙏
பகவான் கோப்ராம்மணாசுதர் எனப்படுகிறார்.
கோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால்
வாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும்.
கோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால்,
சிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான்.
கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகாராஜன் ரகுவைப் பெற்றான்.
பசு காயத்ரீ மந்திரம்:-
~~~~~~~~~~~~~
ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.
1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன் ,
அவன் நம் முன்னோர்கள் 7 தலை முறையைக் கரை ஏற்றி விடுவான்.
நாட்டுப் பசுவினம் காக்க உதவிப் பயனடையுங்கள் .


Sunday, July 23, 2017

No automatic alt text available.

விதுர நீதி- மின்னூல் !விதுர நீதி- மின்னூல் !
நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என நினைத்த நூல்.

சகல காரியங்கள் சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் - மின்னூல் !

Aga Oli Dhyanam (அக ஒளி தியானம்) - 2015 Healer Baskar (Peace O Master)

திருவடி ஞானம் சிவமாக்குவிக்கும்

குருபக்தியால் தான் ஞானக்கனல் தோன்றும்.

No automatic alt text available.

புத்தர் கூறுகிறார் !

உங்கள் எல்லா அனுபவங்களும் 
அந்தச் சூன்யம் ...
என்ற மைய நிலையைச் சுற்றித்தான் நிகழுகின்றன ...
எப்படி நாம் இந்த சூன்ய நிலையை
அடைவது ?
தியானம் மூலமாகத்தான் அடைய
முடியும் ..வேறு வழியே இல்லை ...
உங்களையே நீங்கள் பார்க்க முடியாத
அளவுக்கு ...
அந்தக் கடைசி ' நான் ' என்பதையும்
விட்டால் மட்டுமே அதை அடைய முடியும் ...
அதுவும் மறைந்த பிறகு நீங்கள் வெறும்
வெற்றுத்தாள் போல ...
மேகமற்ற ஆகாயம் போல முதலும் முடிவும்
தெரியாத அளவுக்கு ...
ஆழமாக ஒரே நீல நிறமாக இருப்பீர்கள்
இதைத்தான் புத்தர் அனாதா என்றார் ...
நீங்கள் நடக்கிறீர்கள் அப்போது நடப்பவர்
என்று யாரும் இல்லை ...
நீங்கள் சாப்பிடுகிறீர்கள் அப்போது
சாப்பிடுபவர் என்று யாரும் இல்லை ...
நீங்கள் பிறந்திருக்கின்றீர்கள் ஆனால்
பிறக்கக் கூடியவர் யாரும் இல்லை ...
நீங்கள் வியாதி அடையலாம் உங்களுக்கு
வயதாகலாம் ...
ஆனால் வியாதி அடைந்தவர் என்றும்
வயதானவர் என்றும் அங்கு யாரும் இல்லை ...
நீங்கள் இறந்து போகலாம் ஆனால்
இறப்பவர் என்று அங்கு யாரும் இல்லை ...
நீங்கள் பிறக்கவே இல்லை என்றால்
எப்படி இறக்க முடியும் ?
நீங்களே இல்லை என்றால் எப்படி
நீங்கள் வியாதியாகவோ ...
ஆரோக்யமாகவோ இருக்க
முடியும் ?
இதைத்தான் பேரின்ப வாழ்க்கை
என்கிறார் புத்தர் ...
ஆனால் இந்தச் செயல்கள் எல்லாம்
நடக்கும் பொழுது ...
அவைகளை நீங்கள் சாட்சியாக நின்று
பார்க்கலாம் ...
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவை
தானாகவே நடப்பதை அறிவீர்கள் ...
அவற்றிற்கும் உங்களுக்கும் எந்தச்
சம்பந்தமும் இல்லை ...
என்பதைப் புரிந்து கொள்வீர்கள் ..
இதை நன்றாக புரிந்து கொள்ளுபவரே
ஒரு ஞானியாகிறார் ...
ஓஷோ ...
புல் தானாகவே வளருகிறது ...

ஒரு மணி நேரம் *ஓம் நம சிவாய* நாமம் சொன்னால்.

ஒரு மணி நேரம்,
1. நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .
2. ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .
3. ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது .
4. ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிக்ஷைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது .
5. ஒரு மணி நேரம் பூஜை செய்ததாகிறது .
6. ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது .
7. ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது
8. ஒரு மணி நேரம் வேதம் ஓதுவதாகிறது.
9. ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது.
10. ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள் .
11. ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.
12. ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள்.
13. ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்.
14. ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள்.
15. ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள்.
16. ஒரு மணி நேரம் Positive ஆக இருக்கிறீர்கள்.
17. ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள்.
18. ஒரு மணி நேரம் பாண்டுரங்கன் உங்கள் கை யை பிடித்துக்கொண்டு இருக்கிறான் .
19. ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
20. ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை கோவிந்தன் ரசித்துக்கொண்டு இருக்கிறான்.
21. ஒரு மணி நேரம் மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள்.
22. இந்த ஒரு மணி நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான்.
23. ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள்.
24. ஒரு மணி நேரம் பகவானையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள்.
25. ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
26. ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
27. ஒரு மணி நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள்.
28. ஒரு மணி நேரம் பிருந்தாவன மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள்.
29. ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள்.
30. எல்லாவற்றிர்க்கும் மேல் நாமம் வேறு இல்லை பகவான் வேறு இல்லை ..அந்த ஒரு மணி நேரம் இறைவனே உங்கள் நாக்கில் எச்சில் பட்டு கட்டுண்டு இருக்கிறான்...

Saturday, July 22, 2017

ஓம்_என்றால்_என்ன?

ஓம் என்பதற்கு வேதாந்த விளக்கங்கள் மற்றும் சித்தாந்த விளக்கங்கள் உண்டு .*
வேதம்முதலில் வேதாந்தம் , வேதம் என்பதை பார்ப்போம் .* *இறைஅருள் பெற்றவர்களால் இறைவனிடம் நேராகவோ மறைமுகமாகவோ பெற்ற செய்திகள் வேதம் . இது அனுபவத்தை அடிப்படையாக கொண்டது . நிருபிக்க அவசியம் இல்லை . நம்புவோர் நம்புவர்கள் .
*இது போன்று ரிஷிகளும் முனிவர்களும் பெற்றசெய்திகள் இந்தியாவில் ஆ தி வேதம் எண்ப்பட்டது . ஆதியில் வேதம் ஒன்றுதான் .. 28 எட்டாவது வேத வியாசர் கிருஷ்ணன துவ பர்னர் வேதங்களையும் புரானகளையும் வகை படுத்திநார்..*
*இது போன்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வவொரு நம்பிக்கை ஒவ்வொரு வேதம் . அது அவரவர் நம்பிக்கை . அனுபவத்தை அடிப்படையாக கொண்ட கருத்துகள் வேதாந்தம் .மாற்று கருத்தை மதிக்க தெரிந்தவர் மனிதர் .*
*சித்தாந்தம்.அனுபவ அடிப்படைகளை ஆராய்ந்து முடிவு செய்து சித்தபடுததியது சித்தாந்தம். சித்தாந்த வழி கடைபிடிப்பவர் சித்தர் கள் .*
*சித்தர் நூல்களகளின் பாடலுக்கு பொருள் எழுதுவது கடினம் காரணம்*
*பரிபாசைஇல் உள்ளது*
*ஒருசொல் பலபொருள் ..*
*முன் பின்னாக உள்ளது*
*மறைப்பாக உள்ளது*
*மாறாட்டமாக உள்ளது*
*புராணமாக உள்ளது*
*தொக்குப்பு நூல் என்று உள்ளது*
*பழ்ம் தமிழ் சொற்களாக உள்ளது*
*சாபக்க்னல் உள்ளது..*
*ஆகையால் பெரும்பாலோர் படிக்க முடிவது இல்லை.*
*ஆகையால் பலவித விழக்கண்களை . விருப்பப்படி சொல்லுவார்கள் . அவர்கள் கருத்து அவர்கள் விருப்பம்.*
*இந்த அடிப்படைஇல் எனது விளக்த்தை நிகண்டு அடிப்படைலயிலும் துரிய தியானத்தின் அடிப்படைலயிலும் ஓம் என்பதற்கு பொருள் சொல்கிறேன் ..*
*அகத்தியர் சொன்னது நூல்*
*அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 30*
*ஓம் என்ற பிரனவேமே ஆ தி வஸ்து .*
*உலகமேல்லந் தானிரைந்த யோம சக்தி*
*தான் என்ற சக்தியடா எவரும் தானாய்*
*சதா கோடி மந்திரத்திற்கு உயிராய் நின்று*
*ஆம் என்று ஆடினதும ஓங்காரம் தான்*
*அடிமுடியாய் நின்றதுவும் ஒம்காரந்தான்*
*நாமென்ற ஓங்காரம் தன்னிலேதான்*
*நாடிநின்ற எழுவகை பிறப்புமசே. .*
*பொருள்*
*ஓம் என்பது இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு இருந்த ஆதி வஸ்து . அதை நம் இறைவன் என்று சொல்லுகிறோம் .. அதன் உருவ வடிவமோ தெர்யாது ஆகையால் ஆதி வஸ்து என்றார் . இந்த உலகம் எல்லாம் நிறைந்து நின்ற இயங்கு சக்தி . நூறு கோடி மந்திரங்கலுக்கும் உயிர் . ஆம் என்றும் இதை சொல்லுவார்கள். ஓ என்பது ஓங்காரம் . அடி என்ற எல்லவற்றிற்கும் ஆதாரமாக விரிவு ஆக இருப்பது .. இதுவே ஒடுக்கம் என்ற முடிவாக இருப்பது . நகரம் என்றஓங்காரமதில் ஏழுவகையான உயிர்கள் தோன்றினஎப்படி ஓங்காரம் என்ற இறைவன் விரிவு அடைந்தான் என்பதை பார்போம் .*
*அகத்தியர் சொன்னது. நூல்*
*அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 29*
*அச்சப்ப ஆதி பராபரந்தான் மைந்தா*
*அணு கிரகத்தால் உதித்த கணபதி வல்லபை*
*மூச்சப்ப நிறைந்த சக்தி சிவமுமாகி*
*மூவுலகும் தானாகி முதலுமாகி*
*பேசப்ப நிறைந்த தொரு பஞ்ச பூதம்*
*பாச்சப்ப பஞ்சகர்தல் அஞ்சு பேரும்*
*பக்தி கொண்டு ஆதியிலே ஓம் என்றரே .*
*பொருள்*
*ஆதியில் ஓ என்ற ஓங்காரம் என்ற இறைவன் இப்ப்ரபச்சமான மூன்று உலகிலும் சக்தி சிவன் என்ற நேர்மறை சக்தி மற்றும் எதிர் மறை சக்தி யான உகர அகர மாக இரண்டாகவும் அவை இணைந்த மகர மகவும் இருக்கிரர்கள் .. அ+ உ= மஅதன் பின் பஞ்ச கர்த்தாகள் என்றஅகர , உகர,மகர , நாதா , விந்து என்ற அடிப்படை வித்துகளாக 5 தாகஉள்ளார் . இந்த அடிப்படை வித்து வில் இருந்து பஞ்ச பூதம் உருவானது . பஞ்ச பூதத்தில் இருந்து பிறபஞ்சம் உருவானது . பஞ்ச வித்தாக நேர்மறை எதிர்மறை சக்தியாக மூல தரத்தில் கணபதி யாக வல்லபை யாக . இருப்பது ஒடுக்கமான ஒ என்ற ஓங்காரம் . ஓங்காரம் = ஓ=இறைவன் இறைவன் வடித்து சிதறி அகர உகர என்ற எதிர் மறை சக்தி , நேர்மறை மறை சக்தியாகஇரண்டு ஆனான்.அவைஇணைந்துஅ+உ = ம இதை 8 +2= 10 என்பார்கள் , இதை 5+ 3= 8 > ந, மா, சி, வ, யா =5, = சிவன் ( மந்திரம் ) ஐயும் , கிளியும், சவ்வும் = 3 சக்தி மந்திரம் என்பார்கள் . மூன்று ஆனான் . நான்காக மாறினான் அ, உ, நாதா விந்து ஆகியவை நான்கு nilaikal அ + உ+ நாதா+ விந்து + ம =உயிர்கள் . இது ஓம் என்றஓங்காரம் .இன்று இது பிரபஞ்ச விரி கொள்ள்கை ( theory of expansion of universe) அ - உ-நாத- விந்து -ம குறுகி னால் மீண்டும் ஒங்கராமாகும்இன்று இது கருங்குழி கொள்கை,

Image may contain: text

Sanmarga Sorpozhivu - சன்மார்க்க சொற்பொழிவு Tamil Speech திரு. Dr. Husai...

டாக்டர் ஹுசைன் , இஸ்லாமியரில் ஒரு வள்ளலார்! Dr. M.A.Hussain -follower...

Upanyasams (mp3)

http://upanyasams-mp3.blogspot.com/************************************************************************************************************************

http://devotionaltube.blogspot.com/


************************************************************************************************************************


18 Rahasyangal (Tamil Discourse by Sri Velukkudi Krishnan Swami)

Tuesday, July 18, 2017

How do you achieve Goal? நினைத்ததை சாதிக்க வேண்டுமா? Beemaraja Iyer

பிரதோஷம் நடைபெறாத சிவாலயம் எது.?ஆச்சரியம்..!

கோவில் கருவறையின் ரகசியம் தெரியுமா.?

நமசிவாய என்னும் மந்திரத்தின் மகிமை தெரியுமா..?

இறந்தபின் உயிரின் நிலை என்ன? | கருடபுராணம்

ஒருவர் அணிந்த ஆடையை மற்றொருவர் அணியலாமா?

எளிய வழிபாடு பெரிய பலன் EASY WAY TO GET A GOOD DAY

நீங்களும் செல்வந்தர் ஆகலாம் -

ஆடி மாதத்தின் ரகசியம் என்ன.?

Monday, July 17, 2017

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து மெய் ஒளியினை ஒருவருக்கொருவர் பெறவேண்டும் என்று எண்ணினால் “சப்தரிஷி” – படைக்கும் சக்தியாகும் பொழுது “சப்தரிஷி மண்டலம்”

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து மெய் ஒளியினை ஒருவருக்கொருவர் பெறவேண்டும் என்று எண்ணினால் “சப்தரிஷி” – படைக்கும் சக்தியாகும் பொழுது “சப்தரிஷி மண்டலம்”

அன்று சாவித்திரி கதைகளைக் காட்டியுள்ளார்கள்.
கணவனை எமனிடமிருந்து மீட்டினாள். கணவன் மனைவி இருவரும் மெய் ஒளியினைக் காணவேண்டும் என்ற ஆற்றல்மிக்க சக்திகளை எடுத்துக் கொண்ட பின் இதே உணர்வுடன் உடலை விட்டுச் சென்றால் இரு உடலுக்குள் எவர் முந்தினாலும் அவர் உடலுக்குள் சென்றுவிடுகின்றது.
ஆனால் அதே உணர்வின் தன்மை உணர்ச்சியை அங்கே உந்தி அந்த மெய் ஒளியின் மிக மிக ஆற்றல்மிக்க சக்தியாகத் தன் கருவின் தன்மை உண்டாக்குகின்றது.
கணவன் மனைவி இறந்த பின் அந்த உடலுக்குள் போனால் ஒளி பெறும் உணர்வின் தன்மையை அந்த விண்ணின் நினைவலைகளையே தான் ஊட்டும்.
ஆனால் ஆசையின் நிலைகளில் தாங்க முடியாது வீட்டில் விரக்தி கொண்டு தற்கொலை செய்து இறந்த ஒரு ஆன்மா அதே போல எண்ண ஏக்க அலைகள் கொண்ட இன்னொரு உடலுக்குள் சென்றுவிட்டால்
1.அந்தக் குடும்பத்திற்குள் கலக்கமும் வேதனையும் ஆகின்றது.
2.துன்ப நிலைகளுக்கு இழுத்துச் செல்கின்றது.
அதே போல் இன்னொரு உடலின் தன்மை பெறாதவண்ணம் தடுத்து நிறுத்தி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி நாம் என்றும் நிலையான ஒருநிலையான ஒருக்கிணைந்த ஒரு சரீரமாக பெறும் நிலையைத்தான் சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள் என்று காவியங்களில் உணர்த்தப்பட்டது.
ஆனால் சாவித்திரி மட்டும் கணவனை மனைவி ஏங்கியே தான் இருக்க வேண்டும் என்று ஒரு தலைப்பட்சமாக எழுதப்பட்டதாக மாற்றிவிட்டார்கள்.
கணவன் மனைவி இருவரும் மெய் ஒளியை இரண்டறக் கலந்து அந்த உணர்வின் ஒளி அலைகள் பெறவேண்டும் என்று அதை எண்ணத்தாலே இருவரும் படைப்போம் என்றால் இந்த உணர்வுகள் இரண்டற சரீரங்கள் இரண்டாக இருந்தாலும் உணர்வின் ஒளிச் சரீரமாகும்
இதைத் தான் சப்தரிஷி என்பது.
தன் உணர்வின் நிலைகள் கொண்டு படைக்கும் ஆற்றல்கள் பெற வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி நமக்குள் சுத்தப்படுத்தினாலும் ஒருவருக்கொருவர் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.
1.மனைவி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.அது சமைக்கும் ஆகாரம் அனைத்தும் சுவைமிக்கதாக ஆகி
3.அதைப் புசிப்போர் அனைவரும் மகிழ வேண்டும்.
4.மன பலமும் உடல் நலமும் பெறக்கூடிய ஆற்றலும் பெறவேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.
1.அதே போல தன் கணவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.அவர் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் செய்யும் தொழிலில் நலமும் வளமும் பெறவேண்டும்.
4.அவர் பார்ப்பதெல்லாம் நலமாக வேண்டும்.
5.அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல உணர்வுகள் தோன்ற வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.
இந்தப் படைப்பின் படைப்பினுடைய நிலைகள் நாம் ஏங்கி அதை நாம் அடிக்கடி செயல்படுத்தும் பொழுது அந்த ஆக்கச் சக்தியான நிலைகள் இருவருடைய உள்ளங்களையும் ஒன்று சேர்க்கின்றது.
ஒரு உயிரின் தன்மை பூமிக்குள் ஈர்க்கப்படும் பொழுது ஒரு தாவர இனச் சத்தைத் தனக்குள் கவர்ந்த பின் அந்தக் கவர்ந்த சக்தியினுடைய நிலைகள் அந்த உயிருக்குள் உறையச் செய்து அணு திசுக்களாக மாற்றி உடலின் தன்மை பெறுகின்றது.
இதைப் போல கணவன் மனைவி இரு சரீரம் என்று இருந்தாலும் ஆண்பாலினுடைய நிலைகள் இருந்தாலும் பெண்பாலினுடைய உணர்வின் ஈர்ப்பலைகள் தனக்குள் சத்தைக் கவர்ந்து குழந்தையை உருப்பெறச் செய்யக்கூடிய ஆற்றல்மிக்க சக்தியாக வருகின்றது.
இதைப்போல் கணவன் மனைவி இருவரும் இரண்டறக் கலந்த எண்ணத்தின் உணர்வை உயிருக்குள் சேர்த்து மெய் ஒளியின் தன்மை தனக்குள் பெருக வேண்டும் என்று இந்த உடலுக்குள் இரண்டறக் கலந்துவிடுகின்றது.
இவ்வாறு கலந்த உணர்வின் தன்மைகள்
1.மெய் ஒளியின் தன்மையை ஒலி ஒளி என்ற நிலைகளில் வளர்த்து
2.மெய் ஒளியைக் காணும் நிலை ஏழாவது சப்தரிஷி
3.ஒளியின் தன்மையை சிருஷ்டிக்கும் தன்மையாக அது எட்டும்.
விண்ணுலகம் செல்லும் பொழுது எதையும் தனக்குள் படைத்து அந்தப் படைப்பில் என்றும் ஒளி சரீரமாகி என்றும் பதினாறாக நிலை பெறும் தகுதியை அடைகின்றது.
இந்த உடலில் எப்படி இரு நிலையில் பிரிந்திருந்து மகிழ முடிகின்றதோ ஆக இரு நிலையான இயக்கச் சக்தி மாறி என்றுமே மகிழ்ச்சியான நிலைகள் தோற்றுவிக்கும் நிலைகள் தான் இது.
அதைத்தான் சப்தரிஷி மண்டலம் என்பது.அதை எவெரொருவர் பின்பற்றி இந்தச் சரீரத்திலிருந்து உருப்பெறும் நிலையை அமைத்துக் கொண்டால் ஆறாவது அறிவு பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் - முருகன்.

Image may contain: 1 person

கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.!

கோலம் ஒரு அர்த்தமற்ற அழகு அல்ல அது நமது பண்பாட்டுச் செறிவின் வெளிப்பாடு. அரிசி மாவால் இடும் கோலம் எறும்புக்கும்,பறவைக்கும் உணவாகிறது. சிறு உயிர்களிடம் கூட நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அது சிறுவயதிலேயே நமக்கு கற்று தருகிறது.
கோலம் வெறுமனே பார்த்து ரசிக்க கூடிய கோடுகள் அல்ல ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் மறைந்து கிடக்கும் பொதுவாக பெண்கள் புள்ளி இல்லாத கோலத்தை விரும்புவது இல்லை கோலம் என்பது கோடுகளால் போடும் ஒரு வரைபடம் தானே அதற்கு எதற்கு புள்ளிகள் புள்ளிகள் இல்லாது கோலம் போட்டால் கற்பனைக்கு தகுந்தவாறு சுதந்திரமாக சித்திரங்களை தீட்டலாமே என்று நாம் சிந்திக்கலாம்.
ஆனால் கோலத்தில் உள்ள புள்ளிகள் சுகந்திரத்தை தடை செய்யும் முற்று புள்ளிகள் அல்ல வாழ்க்கை என்றால் எப்படியும் வாழலாம் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் சந்தோசம் மட்டும் தான் முக்கியமென்று வாழ்ந்தால் அது மிருக வாழ்க்கையாகும் வாழ்க்கைக்கு ஒரு நெறிமுறை ஒழுக்கம் என்பது வேண்டும் அப்போதுதான் அது வாழ்க்கையாக இருக்குமே தவிர இல்லை என்றால் அது முறையான வாழ்வாக இராது.
ஒழுக்கம் என்பது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை தர்ம வாழ்க்கையாக மாற்றுகிறதோ அதே போலத்தான் கோலங்களுக்கான புள்ளிகளும் கோலத்தை அர்த்தமுடையதாக்கிறது முறைப்படி இலக்கண சுத்தமாக கணக்கு போட்டு வைக்கின்ற புள்ளிகள் கோலத்தின் கோடுகளை தாறுமாறாக வளரவிடாது நெறிப்படுத்தி வகைபடுத்தி ஒரு முழுமையான வடிவமாக்கி விடும் புள்ளிகளை மீறிய கோடுகள் அலங்கோலமாகத்தான் இருக்கும்
கோலத்தின் மீது சாணி உருண்டையில் பறங்கிப் பூவைச் செருகி வைத்து அழகு பார்க்கும் மரபு மெள்ள மெள்ள மெலிந்துவிட்டது. மறுநாள் அதைச் சுத்தம் செய்து குப்பைக்குச் செல்லும்போது மாக்கோல மாவும், பூவும்,சாணியும் அருமையான இயற்கை உரமாக கம்போஸ்ட் ஆகி, விளைச்சலை பெருக்குகிறது.
இது மட்டுமா, கோலம் இடுவது சிரண உறுப்புக்கும் பிறப்புறுப்புக்கும் நன்மை பயக்கும். இவர்கள் கை எழுத்தைப் பார்த்தாலே அது நமக்குச் புலப்படும். கோலம் இடும் பெண்ணின் கையெழுத்து மிகவும் அழகாய் இருக்கும். கற்பனைதிறனும், இயற்றல் திறனும் (creativity) கைவந்த கலையாகிவிடுகிறது கோலம் இடும் பெண்ணுக்கு.
கோலத்தில் வைக்கின்ற புள்ளிகளுக்கே இத்தனை தத்துவம் என்றால் கோலம் போட பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை தத்துவம் மறைந்திருக்க வேண்டும் அரிசி மாவில் போடுகின்ற கோலம் சம்பிராதய பழக்கம் மட்டுமல்ல சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து அவைகளுக்கும் உணவளிக்கும் உயர்ந்த தானம் அவற்றில் மறைந்திருக்கிறது உணவுக்கே அரிசி இல்லாத மனிதன் கோலம் போட அரிசிக்கு எங்கே போவான் அதனால் மாக்கோலத்தை வலியுறுத்திய இந்து மதம் மண்ணால் போடுகின்ற கோலத்தையும் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டது
அரிசியை தவிர்த்து மண்ணால் போடுகின்ற கோலத்திற்கு கூட தத்துவம் இருக்கிறது சந்தனமும் ஜவ்வாதும் பாலும் நெய்யும் போசித்து வளருகின்ற இந்த உடம்பு ஒரு நாள் மண்ணோடு மண்ணாக போகப்போகிறது தினசரி காலை நேரம் கோலம் போட அந்த மண்ணை தொடுகின்ற பெண் நானும் ஒரு நாள் இப்படி தான் ஆவேன் என்று வாழ்வின் நிலையாமையை யோசித்தாள் என்றால் அவளுக்கு பேராசை என்பது எப்படி வரும்?
எனவே மாவாலும் மண்ணாலும் கோலம் போடலாமே தவிர செயற்கை வண்ணங்களால் ரசாயன பொருட்களால் கோலம் போடவே கூடாது அப்படி போடுவது கோலங்கள் அல்ல அது வெறும் கிறுக்கல்.

மார்கழியில் மாக்கோலங்கள் -- கோலத்தில் உள்ள புதையல்கள்!

கோலம் நமது பண்பாட்டுச் செறிவின் 

வெளிப்பாடு. அரிசி மாவால் இடும் கோலம் 

எறும்புக்கும்,பறவைக்கும் உணவாகிறது. சிறு 

உயிர்களிடம் கூட நாம் எப்படி நடந்துகொள்ள 

வேண்டும் என்று அது சிறுவயதிலேயே 

நமக்கு கற்று தருகிறது. 

கோலத்தின் மீது சாணி உருண்டையில் 

பறங்கிப் பூவைச் செருகி வைத்து அழகு 

பார்க்கும் மரபு மெள்ள மெள்ள 

மெலிந்துவிட்டது. மறுநாள் அதைச் சுத்தம்

 செய்து குப்பைக்குச் செல்லும்போது 

மாக்கோல மாவும், பூவும், சாணியும் 

அருமையான இயற்கை உரமாக கம்போஸ்ட் 

ஆகி, விளைச்சலை பெருக்குகிறது.

இது மட்டுமா, கோலம் இடுவது சிரண 

உறுப்புக்கும் பிறப்புறுப்புக்கும் நன்மை 

பயக்கும்.

அதிக நேரம் கையை தரையிலிருந்து 

எடுக்காமலும் குனிந்த நிலை மாறாமல் 

கோலம் இடுவது கிராமத்து பெண்களுக்கு 

கௌரவ பிரச்சனையாம்! இது வரலாற்றுச் 

செய்தி ஆகிவிட்டது.  ஆனால் இன்னும் கூட 

கோலம் போடும் தமிழ் பெண்கள் இருக்கவே 

செய்கிறார்கள், இவர்கள் கை எழுத்தைப் 

பார்த்தாலே அது நமக்குச் புலப்படும். கோலம் 

இடும் பெண்ணின் கையெழுத்து மிகவும் 

அழகாய் இருக்கும். கற்பனைதிறனும், 

இயற்றல் திறனும் (creativity)  கைவந்த 

கலையாகிவிடுகிறது கோலம் இடும் 

பெண்ணுக்கு.