Sunday, August 28, 2016

ஏழரைச் சனி என்னதான் செய்யும்?- அறிந்து கொள்வோம்

ஐங்கரனின் ஆறு படை வீடு !!!

தனபாக்கியத்தை அள்ளித்தரும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்!

http://www.dinamani.com/weekly_supplements/vellimani/2015/07/04/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/article2902181.ece

*

http://temple.dinamalar.com/New.php?id=336

*

http://www.dailythanthi.com/Others/Devotional/2016/04/21131620/Especially-auspiciousGivesTirukkollikkatuSaneeswarar.vpf


*

http://www.shivatemples.com/sofct/sct115.php

*

http://shaivam.org/siddhanta/sp/spt_p_kollikkadu.htm

*

http://www.aanmigakkadal.com/2014/05/blog-post_26.html

*

http://www.vikatan.com/sakthivikatan/2011-dec-27/kovil-vazhipadu/13813.art


*

http://koyil.siththan.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

*

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=11095


*

http://www.livingextra.com/2011/07/blog-post_28.html


*

http://www.vakeesarperavai.com/Cholanadu/Thiurkollikadu.html



*


Saturday, August 13, 2016

ஏன் ஸ்வாதி ஒரு உயர்ந்த நக்ஷத்திரமாக இருக்கிறது

ஒரு நாள் இறைவன் தனது தர்பாருக்கு நவ கோள்களையும் அழைத்தார். நவ கோள்களும் என்ன ஏது என்று ஒன்றும் புரியாமல் அவசரமாக வந்து நின்றனர்.
இறைவன் கேட்டார். உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார். கிரஹங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இறைவான் கேட்டார்: 27 நக்ஷத்திரங்களில் உயர்ந்த நக்ஷத்திரம் எது ?
உடனே வரிசையாக எல்லா கிரஹங்களும் தாங்கள் உச்சமாகும் நக்ஷத்திரத்தை சொன்னார்கள். ஏன் என்றால் அங்கு தானே அவர்களின் பலமும் சுதந்திரமும் உள்ளது.
சூரியன் அஸ்வினியையும், சந்திரன் கார்த்திகையையும், செவ்வாய் அவிட்டத்தையும், புதன் ஹஸ்தத்தையும், சுக்ரன் ரேவதியையும், குரு பூசத்தையும், சனி ஸ்வாதியையும் சொன்னார்கள்.
உடனே இறைவன் ராகுவையும், கேதுவையும் கூப்பிட்டு நீங்களும் உங்களுக்கு பிடித்த நக்ஷத்திரம் எது என்று கூறுங்கள்.
உடனே சூரிய சந்திரர்களுக்கு கோபம் வந்தது. . இறைவனே எதற்காக இந்த அரூபிகளை அதுவும், அசுரர்களை தெய்வீகத்தோடு இணைக்கிறீர்கள். என்று கேட்டனர். உடனே இறைவன் அவர்களை அமரச் சொல்லி , என் அரசாங்கத்தில் எல்லோரும் சமம், ஆகவே அவர்களுக்கும் அதில் உரிமை உள்ளது என்றார். உடனே ராகுவும் கேதுவும் சனி தேர்ந்தெடுத்த ஸ்வாதியையே சொன்னார்கள்.
ராகு கேதுவை பார்த்து இறைவன் கேட்டார் . ஏன் நீங்களும் ஸ்வாதியை தேர்ந்தெடுதீர்கள் . உங்களின் பதிலை கேட்பதற்கு முன் அதை முதலில் சொன்ன சனி பதில் தரட்டும் என்றார்.
உடனே சனி, இறைவா, நான் உச்சமாவதால் ஸ்வாதியை சொல்லவில்லை. அதேபோல் எனது நண்பரான ராகு கும்பத்தில் என்மூல திரிகோண இணைவில் உள்ள சதயத்தின் அதிபதியான அவரின் நக்ஷத்திரம் என்பதால் சொல்லவில்லை. பின் ஏன் சொன்னேன் என்றால் இந்த ஸ்வாதி ஒன்று தான் உங்களுடைய உலகில் வந்து சேர்வதற்க்கான அதாவது உங்களுடன் பரம பதத்தில் இணைய உகந்த நக்ஷத்திரமாக உள்ளது என்றார்.
உடனே சூரியன் தன் புதல்வனை பார்த்து, பொய் சொல்லாதே என்றார். மேலும் தன் மகனை பார்த்து எப்படி ஒரு கொடிய பாபியான அரூபியான ராகுவால் கடவுளை காட்ட முடியும் என்றார்.
உடனே இறைவன் சூரியா அமைதி என்று கர்ஜித்தார். நீங்கள் சனியின் பிதாவாக இருக்கலாம். ஆனால் யாம் எல்லோருக்கும் பிதாகாரகன். சனி தன் விளக்கத்தை தொடரட்டும் என்றார்.
பெருமானே, இதை நான் ஒரு பறவையின் மூலமாக தான் உணர்ந்தேன் என்றார். உடனே இறைவன் எப்படி என கேட்க, சனி தொடர்ந்தார். மழை நீரை மட்டுமே உண்டு வாழும் ஒரு பறவை ஒன்றை கண்டேன். அதாவது ஸ்வாதியின் உதயத்தில் தான் மழை பெருகும் . வானிலிருந்து பொழியும் அந்த தூய நீரை உண்டு வாழும் பறவை உணர்த்திய தத்துவத்தால் தான் நாம் ஸ்வாதியை சொன்னேன்.
உடனே சூரியன், தன் மகனை பார்த்து ஆவேசத்துடன் இது மட்டும் தானா, வேறு ஏதாவது உண்டா என அலட்சியமாக கேட்டார்.
உடனே சனி, தந்தையே, உங்கள் அரசாங்கத்தின் உயர்வை பற்றியே பேசும் நீங்கள், சின்ன சின்ன விஷயத்தை மறந்து பேசுகிறீர்கள். அதனால் தான் உங்கள் உச்சத்தில் ஒரு மனிதன் கோபத்தில் வைராக்யத்தையும், விவேகத்தையும் மறந்து செயல் படுகிறான் என்றார். அந்த பறவை, ஏன் கங்கை, யமுனை போன்ற புண்ய நதிகளில் உள்ள நீரை அருந்தாமல் பெருகும் மழை நீரை மட்டும் அருந்தி உயிர் வாழ்கிறது . அதுதான் அதன் வைராக்யம், விவேகம்.
உடனே சூரியன், என்னை தாண்டி வெகு தூரத்தில் உள்ள உனக்கு புத்தி மழுங்களாகத்தான் இருக்கும் ஏன் என்றால் என் ஒளி பட்டால் தானே எழுச்சியும் வளர்ச்சியும் இருக்கும். உன் பதிலில் இருந்து நன்றாக தெரிகிறது என்றார். உடனே சனி குறிக்கிட்டு, தந்தையே இது மந்தமோ மழுங்கலோ இல்லை. நிதானமான விவேகமும், வைராக்யமும் உள்ள உயர்வு என்றார். எந்த வழியில் என்றார் சூரியன்.
உடனே சனி தன் விளக்கத்தினை தொடர்ந்தார். நீருக்கெல்லாம் மூலதாரம் ஸ்வாதிதான். அவன் ஆயிரம் நக்ஷத்திரங்களை உடையவன். அதன் மூலம் தான் நீர் பெருகும். அங்குதான் உங்களின் சக்தி இழக்கப்படுகிறது. உங்களின் சக்தி இழக்கப்படும் போதெல்லாம் ஒருவனை இறைவனை நோக்கி முன்னேற வைக்கிறது. முப்பெரும் சக்திகளான, பிரம்மா இருப்பதும் நீர் சம்பந்தத்தில் தான், பரந்தாமன் இருப்பதும் நீர் சம்பந்த்தில்தான், பரமேஸ்வரனான இந்த இறைவன் இருப்பதும் நீர் சம்பந்தத்தில் தான். அதனால் தான் ஒருவன் தன் முக்திக்கும் மோக்ஷத்திற்கும் நீர் நாடி வருகிறான்.அதுதான் அவனின் விவேகமும் வைராக்யமும் ஆகும். ஏன் பக்ஷிகளும், விருக்ஷங்களும், விலங்குகளும் நீர் இல்லாமல் வாழாது. தானத்தை பெறுவதற்க்கும் தருவதற்கும் நீர் தான் முக்யமானது. எது நதிகளின் மூலமோ, எது நதிகள் மற்றும் மனிதனின் வாழ்வாதாரத்தை பெருக்குமோ, எது இறைவனிடம் இருந்து பெறப்படுக்கிறதோ, எது அவனிடம் கொண்டு சேர்க்குமோ அதுவே உயர்ந்தது என்று சனி தன் வாதத்தினை முடித்தார். உடனே சூரியன் இறைவனை பார்க்க, இறைவன் புன் முறுவல் பூத்தபடி இருந்தார்.
எல்லா கிரஹங்களும் கர கோஷத்துடன் சனியை பாராட்ட, இறைவன் தன் சனியை தன் அருகில் அழைத்து, அதி அற்புதம் சனி, இனிமேல் நீ ஸ்வாதி உச்சன் என்று அழைகப்படுவதோடு, உன் தான்யமான எள்ளையும், நீ உச்சமாகும் ஸ்வாதியில் பெருகி வரும் நீரையும் சேர்த்து எனக்கு அர்க்யம் விடும் மானிடன் மோக்ஷ கதியை அடைவான். என்றார். மேலும் கால புருஷனுக்கு ஏழில் இருக்கும் ஸ்வாதியில் உச்சமாவதால் அதுவே உன் ஸ்தானத்தின் பலமாகவும் இருக்கும்.
மேலும் கால புருஷனின் கர்ம ஸ்தானதின் காரகனான நீ கால புருஷனின் களத்திர ஸ்தானத்தில் உச்சமாவதால், ஒருவன் தன் தர்ம பத்தினியுடன் ஒளபாசனத்தோடு ஹோமங்களை செய்ய தகுதி உள்ளவனாகிறான். அவன்தரும் அவிசை சந்தோஷத்தோடு உடனே ஏற்கிறேன். உடனே, புதன், ஸ்வாதியே சனி, அவனின் கர்மத்தினை காக்கும் ஸ்வாஹாவே அக்னி என்று கூற, இறைவனும் மற்ற கிரஹங்களும் பெரிதாக புன்னகைத்தனர்.
கற்பனையில் உருவான கதை.
நக்ஷத்திரங்களில் உயர்ந்தவன் ஸ்வாதிதான்.
அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.

கோடான கோடி நன்றிகள்    


Sunday, August 7, 2016

பகிர்ந்து கொள்வோம்!!: கோலம் போடுவது ஏன்?

பகிர்ந்து கொள்வோம்!!: கோலம் போடுவது ஏன்?:   வீ ட்டுக்கு முன்னால் பெயிண்டால் கோலம் போடலாமா? அந்த காலத்தில் கிராமங்களில் நூல்பிடித்த மாதிரி வரிசையாக வீடுகள் கட்டியிருப்பார்கள்...

Thursday, August 4, 2016

கர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் !!!

கோடான கோடி நன்றிகள் :-

http://www.idhayamtv.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

1. தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும்இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர்கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது.
2. இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
3. இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப் பயனால் ஏற்படும்வியாதிகளை தீர்ப்பதால் அவருக்கு பவரோக நிவாரணன் என்றும் ஒருபெயர் உண்டு.
4. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் உள்ள குழந்தைகள் நலமருத்துவர்கள் ஒவ்வொரு தடவை பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போதுகர்ப்பரட்சாம்பிகையை மனதில் நினைத்து கொண்டு காணிக்கைப் பணம்தனியாக எடுத்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். 3 மாதத்துக்குஒரு தடவை திருக்கருகாவூர் வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு அந்தகாணிக்கையை செலுத்துகிறார்கள்.
5. இங்கு தலவி நாயகராக கற்பக விநாயகர் உள்ளார்.
6. கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறுஅடைகின்றனர்.
7. இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லைகர்ப்பவேதனையும் மிகுதியாவதில்லைகருவுடன் மரணமடைவோரும் இலர்கருவைத்தருவதும்காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள். 8. காவிரியின்தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று.
9. ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்குசனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
10. இக்கோவிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்தலிங்கமும் உள்ளது.
11. மூலவர் சுயம்பு மூர்த்திமேற்புறம் பிருதிவிபாகம்புற்று மண்ணாலாகியதுசுவாமிதிருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாகஇருந்ததால்சுற்றிய வடு உள்ளது.
12. இங்குள்ள நந்தி – உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
13. இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டுநெய்யால் அம்பாள் திருவடியில்அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கைமக்களிடையே உள்ளது.
14. சோழர்கள்மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.
15. முதலாம் இராசராசன் கல்வெட்டில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத்திருக்கருகாவூர் “ என்று தலம் குறிக்கப்படுகின்றது.
16. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கியதலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
17.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள18ஆவது சிவத்தலமாகும்.
18. திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம்முல்லைவனம்திருக்கருகாவூர்கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில்குறிப்பிடப்படுகிறது.
19. மாதவி (முல்லைக் கொடியைதலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம்(முல்லை வனம்என்று பெயர் பெற்றது.
20. இத்தலம் ஒரு சிறப்புமிக்க பிரார்த்தனைத் தலமாகும்இத்தலத்தில் மூர்த்திதலம்தீர்த்தம் மூன்றும் சிறப்புடையது.
21. க்ருத யுகத்தில் தேவர்களும்த்ரேதா யுகத்தில் முனிவர்களும்துவாபர யுகத்தில்சூரியன்சந்திரன்நட்சத்திரங்கள்தேவதைகளும் வணங்கினர்கலியுகத்தில்முனிவர்களும்மனிதர்களும் வணங்கி வரும் தலம் திருக்கருகாவூர் தலமாகும்.
22. அம்மை இத்தலத்தில் 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் ஆகஅருள்பாலித்து வருகிறாள்.
23. பொன்னி நதி பாபநாசம் வட்டத்தில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளதுஇத்திருத்தலம்.
24. இத்திருத்தலத்தில் பிரம்மன்கௌதமர்மன்னர் குசத்துவசன்சங்குகர்ணன்நிருத்துவ முனிவர் முதலியோர் வாழ்ந்து சிவ பூசை செய்ததாக வரலாறு உள்ளது.
25. முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்ட தலம் ஆதலால் இத்தலம் மாதவிவனம் என்றும் அழைக்கபடுகின்றதுஇதனாலே இறைவரும் முல்லைவனநாதர் என்றும்மாதவிவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
26. முக்தி தரும் சிறப்புத்தலம் என்று ஞான சம்பந்தர் பாடிய தலம்.. தில்லை வனம் காசிதிருவாரூர் மாயூரம் முல்லைவனம் கூடல்முதுகுன்றம் – நெல்லை களர்காஞ்சிகழக்குன்றம் மறைக்காடருணை காளத்திவாஞ்சிய என முத்தி வரும்.
27. தட்ச சாபத்தில் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் இங்கு வந்துபூஜை செய்ததால் ஒவ்வொரு பங்குனி மாத முழு நிலா நாளன்று சந்திரன் தன் ஒளியால்இறைவனை வணங்குவதைக் காணலாம்.
28. பிரம்மன் படைப்புத்தொழிலில் ஆணவம் கொண்டதால் படைப்புத் தொழில்தடைப்பட்டதுஇத்தலம் வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி முல்லை வன நாதரைபூஜித்ததால் மீண்டும் படைப்புத்தொழில் கைவரப் பெற்றார்.
29. சுவர்ணகரன் தீய செயலால் பேயுருக் கொண்டான்கார்க்கிய முனிவரால்இத்திருத்தலத்தில் திருவாதிரை நன்னாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பேயுரு நீங்கப்பெற்றான்.
30. கௌதமரிடம் புகலடைந்த முனிவர்களின் சூழ்ச்சியால் பசுக்கொலை புரிந்தபாவத்திற்கு ஆளானார்போதாயனார் முனிவரின் சொற்படி நீராடி ஒரு லிங்கத்தைவைத்து பூஜித்தால் பசுக் கொலைப்பழி நீங்கியதுகௌதமேஸ்வரர் என்ற பெயருடன்அம்மன் சன்னதியில் ஒருத் தனிக் கோவில் உள்ளது.
31. மன்னன் குசத்துவன் காட்டில் வேட்டையாடும் போது சத்திய முனிவரின் சாபத்தால்கொடும்புலி உருப்பெற்று சத்திய கூப தீர்த்தத்தில் நீராடு சுய உருப்பெற்றான்.
32. சங்கு கர்ணன் என்னும் அந்தணன் விந்தியா குருஷன் மகளை திருமணம் செய்யமறுத்ததால் அவர் சாபப்படி பேயுருப் பெற்றான்பின் முன் வினைப்பயனால் இத்திருத்தலஎல்லையை அடைந்ததும் பேயுரு நீங்கப்பெற்றான்.
33. இத்தலத்தின் சோமாஸ்கந்தர்நடராஜர்ஆறுமுகர் உற்சவ மூர்த்திகள் மிகவும் அழகுவாய்ந்தவை.
34. கோவிலின் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீசுவரர்மிகுந்த பொலிவுடன் உள்ளார்நடராஜர் மண்டபத்தில் உள்ள தேர் சக்கரமும்குதிரையும்காணக் கண் கோடி வேண்டும்.
35. இத்திருத்தல புராணத்தை அம்பலவாணப் பண்டாரம் பாடியுள்ளார்நான்மணி மாலைஇரட்டை மணி மாலை வீரபத்திர சுவாமிகள் பாடியுள்ளார்பதிற்றுப் பத்தந்தாதி ஆலந்தூர்கோவிந்தசாமிப்பிள்ளையும்வடமொழி ஸ்லோகங்கள் சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீஅனந்தராம தீக்ஷதரும் பாடியுள்ளார்அம்பிகை ஸ்தோத்திரங்களை டி.எஸ்வைத்திநாதன் பாடியுள்ளார்.
36. காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையில்மாலை 4.00 மணி முதல் இரவு8.00 மணி வரையில் ஆலயம் திறந்திருக்கும்.
37. இத்திருக்கோவிலில் உள்ள நவக்கிரகங்கள் சற்று மாறுபட்ட நிலையில் இருக்கம்சூரியனைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்களும் சூரியன் பார்த்தவாறு நின்றிருக்கும்நவக்கிரகங்கள் அபயவரத முத்திரைகளுடன் காட்சி தருகின்றனர்.
38. இத்திருக்கோவிலில் சந்தன மரங்கள் தானாகவே வளர்கின்றனமரத்தை வைத்துப்பயிர் செய்ய வேண்டிய அவசியமில்லை.
39. திருநாவுக்கரசர்திருஞான சம்பந்தர்சுந்தரர் போன்ற மூவரால் பாடல் பெற்றபுண்ணியத் திருத்தலம் இது.
40. 1946 ஆம் ஆண்டு காஞ்சி முனிவர் சாதுர்மாஸ்ய விரதத்தை இங்கேஅனுஷ்டித்தார்கள்அப்போது ஐந்து மாத காலங்கள் இத்தலத்தில்எழுந்தருளியிருந்தார்கள்.
41. இத்திருக்கோவிலின் சிற்ப வேலைப்பாடுகள் பல்லவ காலச் சிற்பக் கலைநுணுக்கத்தோடு கூடியவை.
42. மதுரை கொண்ட கோபுர கேசரிவர்மன்முதலாம் ராஜராஜன்முதலாம் ராஜேந்திரன்முதலாம் குலோத்துங்கன் மற்றும் விக்கிரம சோழன் போன்றோர் காலத்தியகல்வெட்டுக்கள் இத்திருக்கோவிலின் சுற்று மதிற்சுவர்களிலும்எம்பெருமானின்கர்ப்பக்கிரகச் சுவர்களிலும்அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபங்களிலும்காணப்படுவதாகஇத்திருக்கோவில் வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
43. தமிழக இந்து சமய அறநிலையத்தினரால் இத்திருக்கோவில் திறம்படநிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
44. ஸ்காந்த புராண புத்ர வைபவக் காண்டத்தில் சனத்குமார சம்கிதையில்இத்திருக்கோவில் தல வரலாறு காணப்படுகிறதுஇது சமஸ்கிருதத்தில் அமைந்ததாகும்.
45. அம்பலவாணப் பண்டாரம் என்பவரால் தமிழில் பாடப்பட்ட 338 பாடல்கள் தற்சமயம்அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் இல்லை.
கோவில் முகவரி:
அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில் 
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சன்னதி திருக்கருகாவூர் அஞ்சல், பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். தமிழ்நாடு போன்: (04374) 273423

மொபைல்: 8870058269