Tuesday, March 22, 2016

ஞானியின் இலட்சணம்:

ஞானியின் இலட்சணம்:

கீழே உள்ள MP 3 ஆடியோவை பதிவிறக்கம்(Download) செய்து கேளுங்கள்.



பிரமாணம் (Means of Knowledge)

பிரமாணம் (Means of 

Knowledge)**********************************************ஞானத்தைக் கொடுக்கும் 

கருவி - சுவாமி குருபரானந்த அவர்களின் விளக்க உரை கேட்க 

விரும்புபவர்கள் கீழே உள்ள இணப்பை அழுத்தி பதிவிறக்கம் (Download) 

செய்து கேளுங்கள்.https://jumpshare.com/v/GUywiKZlRPHovU4zXAXB






ஸ்ரீ மஹா சிவராத்திரி

ஸ்ரீ மஹா சிவராத்திரி
********************************
சிவராத்திரி விரதம் - சுவாமி குருபரானந்த மஹாராஜ் அவர்களின் 


விளக்க உரை கேட்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணப்பை அழுத்தி 

பதிவிறக்கம் (Download) செய்து கேளுங்கள்.


https://jumpshare.com/v/xJDkGsDmhSYlpOshzWXw



ஞானத்தின் பலனை அடைய

ஞானத்தின் பலனை அடைய நாம் கடைபிடிக்க வேண்டிய பண்பு நலன்களை
ஸ்வாமி குருபரனந்த அவர்களின் விளக்க உரையாக இங்கு
கொடுக்கப்பட்டுள்ளது. விரும்புபவர்கள் இதனை கீழே உள்ள லின்க் - கை 
அழுத்தி பதிவிறக்கம் (Download) செய்து கேட்டு (சிரவணம்) பயன் பெறவும்
. நன்றி!


https://jumpshare.com/v/vL7gY6Onpc2zzbgKTSnx





Wednesday, March 9, 2016

Neerkondar Entammal Venkudusamy Naidu: பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்த...

Neerkondar Entammal Venkudusamy Naidu: பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்த...: பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள் ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும...


Saturday, March 5, 2016

தங்க மழை பொழியும் தங்க ஆனந்தக் களிப்பு




தங்க மழை பொழியும் தங்க ஆனந்தக் களிப்பு

பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு ஆகும். இது அவர் இயற்றிய பாடல் தொகுப்பில் 6ம் மண்டலத்தில் அமைந்துள்ளது. பாம்பன் சுவாமிகள் உலக மக்களின் வறுமையை போக்கி செல்வத்தினை பெற குமரக்கடவுளின் பால் இயற்றப்பட்ட தங்கமயமான துதி ஆகும். இது 10 பாடல்களை உடையது. ஒவ்வொரு பாடலிலும் குமரக்கடவுளை தங்கம் என்றே துதிக்கிறார் பாம்பன் சுவாமிகள்.

இப்பாடலானது ஒருவரது ஜாதக தோஷத்தினை அடியோடு அழித்து பெரும் செல்வத்தினை தரக்கூடியது. இதனை பாராயணம் செய்து வந்தால் வீட்டில் பொன் ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். பெரும் செல்வ யோகம் உண்டாகும். இதனை பாராயணம் செய்து பொன்னும், பொருளும் பெற்றவர்கள் பலர். இப்பாடல் முருகனின் அருளை வாரி வழங்கும் ஆற்றல் கொண்ட தாகும். அருளுடன் பொன்னும், பொருளும் அள்ளி தரக்கூடியதாகும்.

நியாயமான முறையில் செல்வ செழிப்பினை அளிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட பாடல் மேற்கண்ட தங்கஆனந்த களிப்பு ஆகும். மேலும் செய்யும் தொழிலில்லாபத்தினை அளிக்கக்கூடியதாகும். மனதிற்கு அமைதியையும் தர வல்லது. கர்மவினைகளை நாசம் செய்ய வல்லது. திருமகளின் அருளை நிரந்தரமாக வழங்க தர வல்ல வலிமை கொண்டதாகும். இதை பாராயணம் செய்பவர்க ளின் இல்லங்களில் திருமகளின் வாசம் நிரந்தரமாக இருக்கும்.

இத்தகையசிறப்புகள்கொண்டதங்கஆனந்தகளிப்புபாடலை பயன்படுத்தும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பின்பு இந்த பாடலை அச்சிட்டோ அல்லது தாளில் எழுதிக்கொள்ள வேண்டும். இதனை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். பின்பு முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது வளர்பிறை சஷ்டி அல்லது செவ்வாய்க்கிழமை வரும் நாளில் குரு ஓரையில் அருகிலுள்ள முருகன் ஆலயத்தில் தரையின் மீது விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து 27 முறை பாராயணம் செய்ய வேண்டும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கண்டிப்பாக குரு ஓரையில் தான் ஆரம்பிக்க வேண்டும்.

இவ்வாறு பாராயணம் செய்யும் போது ஐந்து எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்றி தாமரைத் தண்டு திரியிட்டு நான்கு அகல் விளக்குகள் ஏற்றிட வேண்டும். அதில் இரண்டு தீபங்கள் வடக்கு நோக்கியும், மற்ற இரண்டில் ஒன்று கிழக்கு முகமாகவும்மற்றொன்று மேற்கு முகமாகவும் எரிய வேண்டும். பின்பு வீடு திரும்பி முருகனின் படத்தின் முன்பாக மேற்கண்ட முறையில் 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பின்பு தினமும் மேற்கண்ட முறையில் தீபங்கள் ஏற்றி 9 முறை பாராயணம் செய்ய வேண்டும். 108 நாட்கள் பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது. முருகன் படத்திற்கு பதிலாக வேல் வாங்கி வந்து அதனை முருகனாக பாவித்து பூசை செய்யலாம். நீங்கள் வாங்கும் வேல் 6 அங்குலமாக இருப்பது மிக்க சிறப்பு. எக்காரணம் கொண்டும் உங்களின் கட்டைவிரலின் நீளத்தின் 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று.

தினமும் 9 முறை பாராயணம் செய்யவும். 108 நாட்களுக் குப் பின்னர் தினமும் 1 முறை பாராயணம் செய்தாலே போதுமானது. தங்க ஆனந்த களிப்பு துதியை பாராயணம் செய்து பொன்னும், பொருளும், அருளும் பெற்றிட முருகப்பெருமானின் அருளும், ஞானபானு பாம்பன் சுவாமிகளின் அருளும் துணையிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஓம் சரவணபவ

ஓம் குமரகுருதாசாய போற்றி…!



Om Chanting By Anuradha Bhatt