Sunday, May 31, 2015

நீங்கள் எல்லையில்லா ஆனந்தத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் மன அமைதியையும் பெற்று வாழ ஸ்ரீவெங்கடராம சித்தர் அருளிய அமுத மொழிகள்


நீங்கள் எல்லையில்லா ஆனந்தத்தையும் 


ஆரோக்கியமான வாழ்க்கையையும் 

மன அமைதியையும் பெற்று வாழ 


ஸ்ரீவெங்கடராம சித்தர் அருளிய அமுத மொழிகள்



http://www.kulaluravuthiagi.in/vina5.htm


Saturday, May 30, 2015

உடல் ஆரோக்கியதிற்கான வழி

டல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நாம் பொதுவாக நம் ஆரோக்கியத்தில் உள்ள நல்ல விசயங்களுக்கு நன்றி கூறாமல் அதில் உள்ள குறைகளை மட்டுமே எண்ணிக்கொண்டு இருப்போம் (கை வலி, கால் வலி, சோர்வு, வீக்கம் என பல). குறைகளையே எண்ணுவதால் நம் உடலின் ஆரோக்கியமாக இயங்கும் பகுதிகளுக்கும் ஆரோக்கியகுறைவு ஏற்படுகிறது. எனவே இனி நம் உடலில் இருக்கும் குறைகளை மறந்து அதில் உள்ள நல்ல விசயங்களுக்கு நன்றி கூறுவோம். உடலின் ஆரோக்கியம் நிச்சயம் மேம்படும், பரிபூரண ஆரோக்கியம் பெற முடியும்.

நான் நிற்பதற்கும், நடப்பதற்கும், படிகள் ஏறுவதற்கும், உட்கார்ந்து கொண்டு இருபதற்கும் உதவும் எனது சக்திமிக்க வலுவான கால்களுக்கும் கால்விரல்களுக்கும் நன்றி.
எல்லா வேலைகளையும் செய்வதற்கு எனக்கு உதவும் எனது சக்திமிக்க வலுவான கைகளுக்கும் கைவிரல்களுக்கும்

 நன்றி.

அனைத்தையும் தெளிவாக பார்பதற்கு எனக்கு உதவும் எனது சக்திமிக்க கண்களுக்கு நன்றி.
பிறர் பேசுவதையும், பல்வேறு விதமான சப்தங்களையும், இசையையும் கேட்பதற்கு எனக்கு உதவும் எனது சக்திமிக்க காதுகளுக்கு நன்றி.
பல்வேறு விதமான வாசனைகளை உணர்ந்து கொண்டும், மூச்சுக்காற்றை 24 மணி நேரமும் தொடர்ந்து சுவாசித்துக் கொண்டும் எனது உடல் ஆரோக்கியத்தை பராமரித்து கொண்டும் இருக்கும் எனது மூக்குக்கு நன்றி.
பேசுவதற்கும் ஆறு சுவைகளை உணர்வதற்கும், வாய்க்கு வரும் உணவை கூழக்க அதனை பற்களுக்கு இடையே மாற்றி தள்ளும் வேலையையும் செய்து கொண்டிருக்கும் எனது சக்திமிக்க நாக்குக்கு நன்றி.
எளிதில் ஜீரணம் ஆகுவதற்கு ஏற்றவாறு உணவை கூழாக்க உதவும் எனது வலுவான பற்களுக்கு நன்றி.
நான் பேசுவதற்கு ஏற்ற சரியான அசைவுகளை தந்து உதவும் எனது உதடுகளுக்கு நன்றி.
எனது உடலின் உள்ளுறுப்புகளுக்கும், எலும்புகளுக்கும், தசைகளுக்கும், ரத்த குழாய்களுக்கும், கவசமாக இருந்து பாதுகாத்து கொண்டிருக்கும் எனது உடலின் மேல்தோலுக்கு நன்றி.
ரத்தத்தை உடலின் எல்லா செல்களுக்கும் தேவையான அளவு செலுத்தி கொண்டு இருக்கும் எனது சக்திமிக்க இதயத்திற்கு நன்றி.
இதயத்தை அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கும் இதயமேலுறைக்கு நன்றி.
உடலின் காற்று ஓட்டத்தை பரமரித்துகொண்டும் ரத்தத்தை சுத்திகரித்து கொண்டும் இருக்கும் எனது சக்திமிக்க இரு நுரையீரல்களுக்கும் நன்றி.
நுரையீரல்களையும் இருதயத்தையும் பாதுகாத்து வைத்திருக்கும் வலிமையான மார்புகூட்டிற்கு நன்றி.
உணவை நல்ல முறையில் செரிமானம் செய்யும் எனது இரைப்பைக்கு நன்றி.
தரமான ஜீரணத்திற்கு தேவையான சுரப்பிகளை சுரந்து உதவும் எனது சக்திமிக்க மண்ணீரலுக்கு நன்றி.
தரமான ஜீரணத்தின் மூலம் உற்பத்தி ஆகும் தரமான சர்க்கரைக்கு ஏற்ப சரியான அளவு இன்சுலினை சுரந்து உடலின் இயக்க ஆற்றலுக்கு உதவும் எனது சக்திமிக்க கணையதிற்கு நன்றி.
உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சி ரத்தத்தில் சேர்க்கும் சிறுகுடலுக்கு நன்றி.
ஜீரணதிற்கும், கழிவை வெளியேற்றவும் உதவ பித்தநீரை சுரக்கும் எனது சக்திமிக்க பித்தபைக்கு நன்றி.
கழிவான உணவை மலமாக வெளியேற்ற உதவும் பெருங்குடலுக்கு நன்றி.
உணவிலிருந்தும் மற்றும் பிற உடலின் சாதாரண இயக்கத்திற்கு எதிரான செய்கைகளாலும் உடலில் உருவாகும் நச்சுக்களை முறித்து உடலை பாதுகாக்கும் எனது சக்திமிக்க கல்லீரலுக்கு நன்றி.
தேவைக்கு அதிகமாக உடலுகுள் வரும் தரமான சர்க்கரையை Glycogen ஆக மாற்றி சேமித்து வைக்கும் எனது சக்திமிக்க கல்லீரலுக்கு நன்றி.
கல்லீரலால் முறிக்கப்பட்ட நச்சுகளையும், ரத்தத்தில் இருக்கும் கழிவுபோருட்களையும் ரத்தத்திலிருந்து பிரித்து வெளியேற்ற உதவும் எனது சக்திமிக்க சிறுநீரகத்திற்கும் சிறுநீர்பைக்கும் நன்றி.
ஓர் அறிவு உயிர் முதல் மனித பிறப்பு வரையிலும், உலகின் முதல் மனிதன் முதல் இன்று இருகின்ற எனது உடல் வரையிலும் எனது ஆண் (அல்லது பெண்) தன்மையை பாதுகாத்து வரும் எனது ஜனன உறுப்புகளுக்கு நன்றி.
எனது உடலின் இயல்பான இயக்கங்களுக்கு உதவும் கை மூட்டுகள், கால் மூட்டுகள் என உடலில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் நன்றி.
நல்ல விசயங்களை எளிதில் பிடித்து கொள்ளும் எனது மனதுக்கு நன்றி.
தெளிவான நல்ல எண்ணங்களை கொண்டுள்ள எனது மனதிற்கு நன்றி.

இந்த நன்றியுணர்வு வாசகங்களை நான் தொகுக்க காரணமாய் இருந்த ஹீலர். C.S. வேதாத்திரி விக்ரம் ஐயா அவர்களுக்கும், ஹீலர்’ஸ் பாஸ்கர் ஐயா அவர்களுக்கும், டாக்டர். பஸ்லூர் ரகுமான் ஐயா அவர்களுக்கும், மாயஜாலம் புத்தகத்தின் மூலம் வழி செய்த ரோண்டா பைர்ன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி.


Saturday, May 23, 2015

கற்க கசடற.../ ஜெயந்தி ஸ்ரீ பாலகிருஷ்ணன்

நான் யார்? / சுதா சேஷய்யன்

புண்ணியம் வேண்டுமா!! Master Baskar

Gomutra (Cow Urine) as a Spiritual Healing Remedy

மகாபாரதம்