Wednesday, January 29, 2014

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு தெரியுமா?

Temple News | News | Dinamalar Temple | கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு தெரியுமா?


கந்த சஷ்டி கவசம் விளக்கம் || kantha sasti kavasam meaning


சென்னி மலையில் சிரகிரி வேலவன் சீக்கிரம் தந்தருளிய தெய்வீக தரிசனம

http://vivekaanandan.blogspot.in/2014/09/blog-post_3.html


கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌
விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌
கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌.
என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.
கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.
இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?
கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.
இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.
ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.
ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.
அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!
காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க
இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும் !


படித்தது.

 ஓம் சரவணபவ
 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை 

 

 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

திருச்சிற்றம்பலம்

ஓம் சரவணபவ
 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை
அறுபடைவீடு
 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


தை அமாவாசை: வழிபாடும்.. பிதுர் தர்ப்பண பலனும்!

Tuesday, January 28, 2014

கோலக் கலையும் அதன் சில உண்மைகளும்

வெற்றிக்கு ஸ்வஸ்திக்


Temple News | News | Dinamalar Temple | வெற்றிக்கு ஸ்வஸ்திக் கோலம்!


வெற்றிக்கு ஸ்வஸ்திக் கோலம்! ஸ்வஸ்திக் என்பது மங்கலச்சின்னம். செங்கோணவடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். விநாயகரின் சின்னமாக விளங்கும் இதனைப் பூஜையறையிலும், வாசலிலும் கோலமாக இடுவர். வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு. "ஸ்வஸ்தி' என்றால் "தடையற்ற நல்வாழ்வு'. ஸ்வஸ்திக்கில் உள்ள எட்டு கோடுகளும் எட்டுத் திசைகளைக் குறிக்கும். எட்டுத்திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம், ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வதுண்டு. சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றிருந்தது.


ஸ்வஸ்திக் கோலங்கள்
வெற்றியைத் தரும் சின்னம் ஸ்வஸ்திக் . பண்டை காலங்களில் மன்னர்கள் போர் புரியச் சென்றபோது ஸ்வஸ்திக் கோலங்கள் போடப்பட்டன. பின்னர் அவை அவரவர் வீடுகளில் நடக்கும் விழாக்கள் நல்லபடியாக வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக போடப்பட்டன. அது மட்டும் அல்லாது தெய்வங்கள் வந்து அமரும் இடமே ஸ்வஸ்திக் எனக் கருதப்பட்டது. ஸ்வஸ் + அஸ்தி + கா என்பதின் வார்த்தையே ஸ்வஸ்திகா . அதாவது சுவாசம் ( ஸ்வாஸ்) நின்று நீ அஸ்தியாகப் ( அஸ்தி) போய் மோட்ஷம் பெற காத்திரு என்பதை நினைவு படுத்துவதே ஸ்வஸ்திகா . ஸ்வஸ்திகாவை பாருங்கள் ஒவ்வொரு பக்கத்தையும் நோக்கி குழாய் போல நீண்டு இருக்கும். ஸ்வஸ்திக் சின்னத்தைப் போட்டு அதன் நடுவில் வைக்கப்படும் புள்ளியின் அர்த்தம் என்ன என்றால் நடுப்புள்ளி நம் ஆத்மா. வீட்டில் உள்ளவர்களின் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே அது போடப்பட்டது. மேலும் ஸ்வாதிக் நமக்கு எடுத்துக் காட்டுவது என்ன?
-நான்கு வேதங்கள்
- நான்கு திசைகள்
-நான்கு யுகங்கள்- சத்ய, த்ரேதா , துலாபார, கலி யுக
- நான்கு வர்ணங்கள் (ஜாதிகள்) -பிராமண , ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர என்பவை
-நான்கு யோகங்கள்- ஞான, பக்தி, கர்ம, ராஜ
- நான்கு மூலங்கள் - ஆகாயம்,வாயு, நீர் , நிலம்
-வாழ்கையின் நான்கு பருவங்கள்- குழந்தை, பிரும்மச்சாரி, கிரஹஸ்தன், சந்நியாசி (அனைத்தையும் துறந்தவர்)
இதில் மூன்றாவது ஜெயின் மதத்தினர் போடுவது. நான்காவது எந்த திசையை நோக்கி வெளியேறும் பகுதி இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் படம்.

கோடான கோடி நன்றிகள்

http://santhipriyaspages.blogspot.in/2010/09/rangoli-kolak-kalai.html 

 தற்போது எங்கு பார்த்தாலும் சிகப்பு (+) கூட்டல் குறி நம் கண்களில் படுகிறது .பெயர்ப்பலகைகள் ,வண்டி வாகனங்கள் என எல்லா இடத்திலும் சர்வ சாதாரணமாக இந்தச் சின்னம் உபயோகிக்கப் படுகிறது.இந்தச் சின்னத்தை உபயோகப் பதற்கு ஏதாவது அதிகாரம் உள்ளதா ? இதன் பின்னணி என்ன ? யோசித்தால் , இந்தச் சின்னத்தை அவ்வாறு உபயோகப் படுத்தக்கூடாது என்ற விதிமுறை நினைவுக்கு வரும்.
1960 இல் ஜெனிவாவில் நடைபெற்ற கன்வென்ஷன் விதிகளின் படி இந்த சிகப்பு நிற கூட்டல் குறியை மற்றவர்கள் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

வரலாறு என்ன ?
உலக மஹா யுத்தத்தின் போது காயமுற்ற ,நோயுற்ற, யுத்த வீரர்களை, பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக சிகப்பு (+)கூட்டல் சின்னம் பயன்படுத்தப் பட்டது. இந்த சின்னத்தை நடுநிலை வடிவமாக ஏற்று கொண்டு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன.

அதன்பிறகு இந்த சின்னம் நிரந்தரமாக ரெட் கிராஸ் சொஸைட்டி மட்டும் உபயோகிப்பத்தென ஜெனீவா கன்வன்சன் உறுதிப்படுத்தியது. அதன்படி எல்லா மாவட்ட உயரதிகாரிகளும் ரெட் கிராஸ்  சொஸைட்டியின் தலைவர்களாக ஆக்கப்பட்டு முக்கிய சிகிச்சை அதிகாரிகளாக அங்கீகரிக்கப்பட்டனர்.
மாநில ஆளுநர் இதற்கான கட்டளைகளை பிரப்பிபார் இது தான் நடைமுறையில் வந்துள்ளது ஆக,இவ்வாறு ரெட் கிராஸ் சொஸைட்டி அங்கீகாரம் உள்ளவர்கள் மட்டுமே சிகப்பு கூட்டல் சின்னத்தை பயன்படுத்தலாம் மற்ற மருத்துவர்கள் கூட இந்த சின்னத்தை பயன் படுத்தக்கூடாது .
மாற்று என்ன ?
மருத்துவர்கள் பயன்படுத்தகூடிய சின்னம் ஸ்வஸ்திக் பாரத நாட்டில் மிகப் புராதன காலத்தொட்டே, எல்லா சுய மற்றும் மங்கல காரியங்களில் , ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுதிள்ளோம்.
மருத்துவ உலகத்திற்கு இந்த வடிவம் முக்கியமான பொருளைத் தருகிறது. ஆர்வேதத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் விளக்கப் படுகின்றன.
1. மருத்துவர்
2. நோயாளி
3. மருந்து
4. உதவியாளர்

இந்த நான்கும் ஒருகிணைந்து மேன்மையோடு செயல் பட்டால் மருத்துவத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் கூறலாம்  என்கிறது ஆயுர்வேதம் . ஆக ஸ்வஸ்திக் வடிவத்தில் உள்ள நான்கு கரங்களும் மேலே சொன்ன நான்கு அம்சங்களால் பிணைக்கப் பட்டுள்ளது
இந்த சக்கரம் வலது புறமாக சுழல வேண்டும். ஸ்வஸ்திக் என்றால் நன்மை.'க ' என்றால் விளைவிப்பது என்று பொருள்படும். நவீன மருத்துவ விஞ்ஞானியான டாக்டர் ஹாட்மன்ட் அனர்சட் அவர்கள் 'ஆவேயன்டினா'என்னும் மின் அணுக்கருவி கொண்டு 'ஸ்வஸ்திக் ' வடிவத்தை ஆராய்ந்தார். அதன்படி  ஒரு லட்சம் போவிஸ் அலகுகள் கொண்ட மின் சக்தி இந்த சின்னத்திலிருந்து வெளிப்படுவதாக பதிவு செய்துள்ளார் .
அவர் செய்த ஆராய்ச்சில் மற்ற பல வடிவங்கள் அடங்கும் .அதன் விவரம் கீழே தரப்படுகிறது.

சிரிக்கும் புத்தர் - 500 போவிஸ் அலகுகள்
ரஷ்யாவின் சாவி - 1000 போவிஸ் அலகுகள்
சிலுவை - 10,000 போவிஸ் அலகுகள்
ஓம் - 70,000 போவிஸ் அலகுகள்
சர்ச் மற்றும் மசூதி வளாகங்கள் -11 ,000 போவிஸ் அலகுகள்
ஸ்வஸ்திக் (சிகப்பு பொட்டுகளுடன் பூஜை செய்யப்பட்டது )-1,00,000 போவிஸ் அலகுகள் .

மேற்படி மின் சக்தி, நேர் மின் சக்தி அதாவது நல்ல விளைவுகள் ஏற்படுத்த கூடியவை எனவே இதை நமது மக்கள் எல்லா சுப காரியங்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் . பாரத சமுதாயத்தில் வீட்டு வாசல்கள் பொன் பொருட்கள் வைகுமிடங்கள் , பணப்பெட்டி இரும்பு கல்லாப்பெட்டி கணக்கு மற்றும் குறிப்பேடுகள் வழிபாட்டிடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் "ஸ்வஸ்திக்" சின்னத்தை பயன்படுத்தலாம்.


ஸ்வஸ்திக் சின்னத்தின் மஹத்துவம் என்ன?

நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான். நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே "ஸ்வஸ்தி" என்ற வார்த்தையால் குறிக்கிறோம்.

யஜுர் வேதத்தில் வரும் ஒரு ப்ரார்த்தனை.

ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா;
ஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா:|
ஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத ||

எல்லா வளங்களும் நிறைந்த நல்வாழ்வை அருள வேண்டி இந்திரன், பூஷன்,கருடன், ப்ருஹஸ்பதி முதலான தேவர்களைக் குறித்தும் செய்யும் பிரார்த்தனை இது.

இதில் வரும் 'ஸ்வஸ்தி' என்ற வார்த்தை "தடையற்ற நல்வாழ்வு" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவேதான் இந்த ஸ்வஸ்தியைக் குறிக்கிற சின்னமாக ஸ்வஸ்திகா பயன்படுத்தப்படுகிறது.

பகவான் விஷ்ணுவின் கரத்தில் உள்ள சுதர்சன சக்கரம் ஸ்வஸ்திகா வடிவிலேயே அமைந்துள்ளதாக சிலர் கூறுவர்.

செங்கோன வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், ஒன்றுக்கு ஒன்று குறுக்கில் செல்லும் கோடுகள் தாம் ஸ்வஸ்திகா.

பிரணவத்தின் வடிவமான\போலவே சின்னமும் புனிதமானது. இல்லங்களில் முகப்பிலும், பூஜை அறையின் சுவர்களிலும் வரைவது வழக்கம். இதில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திக்குகளைக் குறிப்பதாகக் கொள்வர். எட்டு திக்குகளிலுமிருந்து நாம் தொடங்கும் செயலுக்கு எந்த விக்னமும் வரக்கூடாது என்பதே இப்படி வரைவதன் தாத்பர்யம் ஆகும்.

ஜெர்மனியில் நாஸி இயக்கத்தினர் பயன்படுத்தியது இந்த ஸ்வஸ்திகா சின்னத்திற்கு நேர் எதிரான === சின்னமாகும்.

இந்த சின்னத்தை திருஷ்டி பரிகாரமாக ஜெர்மானியர்கள் பயன்படுத்தினார்கள் என்பதும் ஒரு தகவல்.

மங்கலச் சின்னம் ஸ்வஸ்திகா. இது ஸூர்யனின் வடிவத்தைக் குறிப்பதாகவும் சிலர் கூறுவர்.
 
 புனித அடையாளக்குறிகளைக் காட்சிக்கு வைத்தல்


http://www.vaastuinternational.com/fengshui/items/vi_om_swastik.jpgமுற்காலத்தில் சீனர்கள், அதிர்ஷ்டத்தைச் சேர்க்கும் மங்களகரமான எழுத்துக்களையும் குறியீடுகளையும் தங்கள் வீடுகளில் மாட்டி வந்தார்கள். அவை அதிர்ஷ்டம் சேர்க்கும் என நம்பினார்கள். நாமும் "ஸ்வஸ்திக்", "ஓம்" போன்ற புனித நற்குறிகளைக் கண்ணில் தெரியும்படி வைக்கலாம். இவை மிகுந்த அதிர்ஷ்டத்தைக் குறிப்பவை. நல்ல எழுத்துக்களையோ, நல்ல குறிகளையோ மேசை. நாற்காலி போன்ற மரச் சாமான்களில் நாம் சித்திரங்களாகச் செதுக்கி வைக்கலாம்.

ஸ்வஸ்திக் சின்னத்தையும், ஓம் மற்றும் திரிசூலத்தையும் நான் என் தொழில் முறையில் பலமுறை உபயோகித்துள்ளேன். அவை நற்பயன்கள் அளித்துள்ளன. இவற்றை எனக்கு ஒரு ரெய்கி - (reiki) ஆசிரியர் தந்தார். இந்தச் சின்னங்களை உங்கள் வாசல் கதவின் உள்பக்கமோ வெளிப் பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டின் பாதுகாப்பிற்கு உதவும். இதை நீங்கள் உங்களிடமே வைத்திருக்கலாம், அல்லது நாட்குறிப்பில் (Diary) ஒட்டி வைக்கலாம். உங்கள் அதிர்ஷ்டத்திற்கும் தற்காப்பிற்கும் உதவும்.
 http://speloona.files.wordpress.com/2011/05/swastika-hindu.png


http://image.shutterstock.com/display_pic_with_logo/708472/708472,1326434172,2/stock-photo-indian-hindu-symbol-swastika-92614456.jpg

Monday, January 27, 2014

மலைக்கோயில் மகிமை!மலைகளிலும், கடற்கரை, அருவிக்கரை ஓரங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டதற்கான காரணம் தெரியுமா!
நம் முன்னோர் ஆன்மிகத்தில் மட்டுமல்ல! அறிவியலிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.
ஒரு மலையைக் காட்டி, ""இதன் மேல் ஏறு! நன்றாக மூச்சு வாங்கும், மூச்சு வாங்குவது என்பது மிகச்சிறந்த பிராணாயாமப் பயிற்சி,'' என்று யாரிடமாவது சொன்னால் கேட்பார்களா!
""வேறு வேலை இல்லையா! போங்க சாமி!'' என்று ஒருமாதிரியாகப் பார்த்து விட்டு போய் விடுவார்கள்.
அதேநேரம், ""அந்த மலையில் தங்கப்புதையல் இருக்கிறதாம்! அங்கே நிரூற்று இருக்கிறதாம். அதில் நீராடினால்,
கருப்பாய் இருப்பவர் கூட சிவப்பாகி விடுவாராம்,'' என்றால் என்னாகும்! அடித்துப் பிடித்து ஏறி மலை உச்சியை அடைந்து விடுவார். இதுதான் மனிதனின் மனநிலை.
அதனால் தான் மலையிலும், கடற்கரையிலும் கோயில்களை அமைத்து வழிபாட்டு தலமாக்கினர் முன்னோர்.
மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோ
குளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.
தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம். விடுமுறை எடுக்க வேண்டிவராததால், பணி, தொழிலில் கிடைக்கும் சம்பளம் குறையாது. உடல்நிலை நன்றாக இருந்தால், மனம் முன்னேற்றம் குறித்துசிந்திக்கும். இது பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடிக்க மனிதனுக்கு துணை செய்யும்.
இப்போது புரிகிறதா! மலைக்கோயில், கடற்கரை கோயில் ரகசியம்.

 http://www.puthiyathalaimurai.tv/wp-content/uploads/2014/01/murugan.jpghttp://1.bp.blogspot.com/_ZzSqdXhtwvg/TAR7N0ArnNI/AAAAAAAACXg/HMUfg0HWd_s/s1600/Lakshmi+Narasimhar+Temple.JPGhttp://1.bp.blogspot.com/-wdZBXnx9zsE/TXKL_iwqyfI/AAAAAAAABT4/ne42vriR2jY/s1600/Athulyanadheswarar%2Btemple%2Bat%2BArakandanallur.JPGhttp://1nellore.com/wp-content/uploads/2011/03/200920090081.jpg?74ba06http://1.bp.blogspot.com/_NzpL-GFFhLk/TTJ80IqPoEI/AAAAAAAANiU/nWwMwZ-jiwM/s1600/P1060831.JPGhttp://upload.wikimedia.org/wikipedia/commons/0/01/Tiruchengode_sivan_hill_temple.JPG

Sunday, January 26, 2014

சிவன் அருளால் - திருமந்திரம் - விளக்கம்

சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவன் அருளால் வினை சேர கிலாமை
சிவன் அருள் கூடின் அச் சிவலோகம் ஆமே
 

ஓம்  அகத்தீசாய நம


ஓம்  நந்தீசாய நம

ஓம் திருமூலதேவாய நம

ஓம் கருவூர் தேவாய நம

ஓம்  பதஞ்சலி தேவாய நம

ஓம்  இராமலிங்க தேவாய நமஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

நாய்களுக்கு பிஸ்கட் போட்டா அறிவு விரிவு அடையும்
ஓம்  அகத்தீசாய நம

ஓம்  நந்தீசாய நம

ஓம் திருமூலதேவாய நம

ஓம் கருவூர் தேவாய நம

ஓம்  பதஞ்சலி தேவாய நம

ஓம்  இராமலிங்க தேவாய நமஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Wednesday, January 22, 2014

TO GET RID OF BAD HABITS


கோடான கோடி நன்றிகள்

Siddhayogi Sivadasanrav
 
SECRETS OF SYMBOLISM IN ASTROLOGY BY S.RAVI

Symbols have been designed and extensively used to give certain commands to the human brain. Almost all the creations of humans were once in their imagination and visualization. The visual effect of flying b
irds impelled the human to create Airplanes. The visual effect of Swan in water impelled the human to create ships. Whatever the image, human eye observes; it is getting registered in the brain almost instantly. The images registered in the brain are involuntarily visualized by humans till they assume proper shape in the material world.

Each image is linked with a word and vice versa. When the word “Elephant” is uttered by someone, the image of “Elephant” appears in the mind almost instantly. In the same way when we see the real “Elephant”, the word “Elephant” is uttered involuntarily. Each image has a word attached to it and each word has an image attached to it. Human brain requires both image and a word to understand anything. Human brain does not recognize a word without image, and an image without a word. Words are verbal and the images are visual in nature.

The material world comprises of five elements. The five elements are linked with five sensory organs. Skin, Mouth, Eyes, Nose and Ears are five sensory organs. The Eyes are the most powerful ones, out of these five sensory organs. The images observed by eyes are sent to the brain and the effect of the same is felt almost instantly. Next to the visual effects of eyes, the brain gets affected by the words uttered and heard. The word and image are called sound and Light. Everything in this material world is being controlled by sound and light.

The term “world” is called “vishwam” in Sanskrit. The word “Vishnu” was derived from this root word “vishwam”. The meaning of “Vishnu” is “All pervading”. The invisible and intangible natural force which is controlling the material world is considered as GOD by humans. Human comprehensions cannot go beyond the limit of material world. God’s principle works within as well as beyond the material world. The five elements are in the gross (Sthulam) level. The sound and light are in the abstract (Sukshumam) level. The gross level world is controlled by the abstract level world. In order to depict this concept, the image of Lord Vishnu is holding a Conch shell in one hand, and holding a wheel in another hand. The conch shell represents sound and the Wheel represents Light. The image of Lord Siva is also holding a Drum (Damarukam) in one hand, and fire pot in another hand to depict the same concept. The Drum represents sound and the fire pot represents Light.

In Hindu religion, the image worship is given more importance. Each Hindu God has a name and form. The name and form of the god will create a desired effect in human brain in the form of sound and light which will ultimately impel the man to achieve his goal. This is the reason in South Indian Temples several god images are installed to activate the human brain. The images are called “Yantras” and the descriptions of the images in word are called “Mantras”.
The modern science also confirms that the left brain of the human is more concerned with verbal communication and the right brain of the human is more concerned with visual communication. The right brain usage is found to be very less in humans. The one who uses the right brain effectively becomes a creative man. In order to use the right brain effectively several images are installed in Hindu temples. Frequent visit to Hindu Temples improves the visualization power of the humans.

Modern society is erroneously mocking at image worshippers without understanding the benefit enjoyed by the worshipper. When the images are visualized and its descriptive words are heard, the left and right brain, works in synchronization which helps the human to achieve his goal.
Regular visualization of images makes the one to achieve his goal in the long run. In order to facilitate the human to achieve his desired goal, several symbols have been designed by our ancestors. Such symbols are used in Astrology and Hindu image worship. Each of such symbols has a great secret behind it. It was god’s grace to me to understand and reveal such secrets for the benefit of humanity.

Monday, January 20, 2014

பெண்களுக்கான ஒரு வரப்பிரசாத தலம்

ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தல மகிமை                                                                              திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீவடிவுடைநாயகி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலத்திற்கு முன் தோன்றிய பெருமையை உடையது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்குப் பின் அத்தம்பதிகள் வெகுநாட்களாக குழந்தை பேறில்லாமல் இருந்தார்கள் அல்லவா? பின்னர் ஐயர்மலை ஈசனருளால் அந்தத் தெய்வீக தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. ஆனாலும், கர்ப்பத்தில் இருந்த குழந்தைக்கு போதிய உடல் வளர்ச்சி இல்லாததை அறிந்த அரண்மனை ராஜ வைத்தியர்கள் மீனாட்சி அம்மனை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலத்திற்கு சென்று வருமாறு வேண்டினர்.
தனபீட ஸ்ரீசக்கரம் பொலியும்
ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருத்தலம், மணப்பாறை

அக்காலத்தில் ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலத்தில் தாயுமான சுக சித்தர் என்று திருநாமம் தாங்கிய ஓர் அற்புத சித்த பிரான் அங்கு தவம் இயற்றி வந்தார். அவருடைய தவம் என்னவென்றால் யாருடைய கர்ப்பத்தில் குழந்தை போதுமான வளர்ச்சி இன்றி இருக்கிறதோ அவர்கள் இப்பெருமானை வேண்டினால் அவர்களுடைய கர்ப்பத்தில் உள்ள சிசுவை இவர் தன்னுடைய வயிற்றுக்கு மாற்றிக் கொண்டு விடுவார். சரியாக 54 நாட்கள் கழிந்ததும் மீண்டும் அக்குழந்தைக்கு உரிய தாய்க்குக் குழந்தையை மாற்றி விடுவார்.

தற்காலத்தில் டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்லும் விஞ்ஞான லீலையை அக்காலத்தில் எந்த வித விஞ்ஞான உபகரணமும் இன்றி செயலாற்றிய அற்புத மகானே தாயுமான சுக சித்தர். இடுசுரை கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் கர்ப்பப்பை அல்லாது வேறு இடத்தில் கர்ப்பம் தாங்கும் முறையைக் குறிக்கும் சித்த மொழியாகும்.

ஔர்வரின் தாய் தன் குழந்தையைக் காக்க கர்ப்பத்திலிருந்த சிசுவை இந்த சித்தியின் மூலம்தான் தன்னுடைய தொடைக்கு மாற்றிக் கொண்டு எதிரிகளிடமிருந்து தப்பித்தார்கள்.

இந்த இடுசுரை சித்தியை பிரயோகம் செய்ய உதவும் மூலிகைகளும் உண்டு. இந்த அற்புதமான மூலிகைகள் வெள்ளியங்கிரிப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. குள்ளகா, மப்புகா என்ற மலை வாழ் இன மக்கள் மட்டுமே இந்த மூலிகைகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். தங்களின் அன்புக் காணிக்கையாக இத்தகைய மூலிகைகளை தாயுமான சுக சித்தருக்கு அவ்வப்போது அவர்கள் அளித்து வந்தனர்.

அந்த மூலிகைகளிலிருந்து அஞ்சனா கூறு ரகசிய முறையில் அஞ்சனம் செய்து அதை உள்ளங்கைகளில் தடவி இடுசுரை கர்ப்ப பிரயோகத்தை மேற்கொண்டார் தாயுமான சுக சித்தர்.

அவ்வாறு தாயுமான சுக சித்தரால் கர்ப்பம் தாங்கப்பட்ட குழந்தைகள் நல்லவிதமாக பிரசவம் அடைந்ததோடு மட்டும் அல்லாமல் வளரும் பருவத்தில் நல்ல இறை பக்தியுடனும் நற்குணங்களுடனும் சிறந்து விளங்கினர்.

அத்தகைய அற்புத மகானை ஸ்ரீசுந்தர பெருமானும் மீனாட்சி தேவியும் வணங்கி தங்கள் குறையைத் தெரிவிக்கவே சித்தபிரானும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று மீனாட்சி தேவிக்காக 54 நாட்கள் கர்ப்பம் தாங்கி உக்கிர வழுதி பாண்டியனைப் பெற்றெடுக்க அற்புத சேவை புரிந்தார்.

தாயுமான சுக சித்தரின் திருஉருவச் சிலையை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலத்தில் இன்றும் தரிசித்து பயன்பெறலாம். குழந்தைப் பேறு இல்லாதவர்களும், கர்ப்பம் தாங்கிய பின் போதுமான வளர்ச்சி அடையாத குழந்தைப் பேறால் வருந்துவோரும், கர்ப்பம் தாங்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு பலம் இழந்தோரும் நற்சந்ததி பெற இப்பெருமானை வணங்கி இளநீர் தானம் அளித்து வந்தால் தங்கள் குறைபாடுகள் நீங்கப் பெறுவர்.

தற்காலத்தில் போதுமான வளர்ச்சி அடையாத குழந்தைப் பேறு உடையவர்கள் அதை அழித்து விடுவதைக் காண்கிறோம். இது தெய்வீகத்திற்கு முற்றிலும் ஏற்புடையது அன்று. எந்தச் சூழ்நிலையிலும் கருச் சிதைவு ஏற்புடையது அன்று என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஸ்ரீவித்யா இரகஸ்யத்தில் அனைத்து ஜீவன்களின் சிருஷ்டி ரகஸ்யமும் ஒரு அங்கமே. இதன் ஒரு பகுதியாக உள்ளது மனிதர்களின் சிருஷ்டி ரகஸ்யம். மனிதர்களின் சிருஷ்டி ரகஸ்யத்தில் ஒரு பகுதியாகத் திகழ்வதே ஸ்ரீதன சிருஷ்டி ரகஸ்யமாகும். சக்தி வாய்ந்த இந்த அற்புத ஸ்ரீதன சிருஷ்டி ரகஸ்யத்தை ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு அம்பாள் புகட்டிய திருத்தலமே மணப்பாறை ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருத்தலமாகும்.

எனவே இத்திருத்தலம் பெண்களின் மார்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் குறிப்பாக மார்பு புற்று நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஸ்ரீதன சக்திகள் பொலியும் தலமாகும். இத்தல அம்பிகைக்கு உருண்டை மஞ்சள், கொம்பு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என்ற மூன்று வித மஞ்சளை கையால் அரைத்து அபிஷேகம் நிறைவேற்றி வந்தால் பெண்களுக்கு வரக் கூடிய அனைத்து நோய்களுக்கும், சிறப்பாக மார்பு சம்பந்தமான நோய்களுக்கு எளிதில் நிவாரணம் கிட்டும். தாய்மைப் பேறு அடைந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் ஏங்கினால் அவர்களுக்கு இத்தகைய வழிபாடு உறுதுணை புரியும்.

ஸ்ரீதன சக்ர பீடம்

ஸ்ரீலலிதா பரமேஸ்வரி உறையும் ஸ்ரீசக்கரத்தை பலரும் பற்பல யந்திர வடிவில் வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீஆதிசங்கரர் உள்ளிட்ட பல மகான்கள் ஸ்ரீசக்கரத்தை கல், உலோகங்கள் போன்றவற்றில் பொறித்து பல திருத்தலங்களிலும் நிர்மாணித்துள்ளனர். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம், திருவல்லிக்கேணி (சென்னை) ஸ்ரீபாரத்தசாரதி பெருமாள் ஆலயம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயம் போன்ற திருத்தலங்களில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை பக்தர்களின் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி திருவானைக் கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்கரம் பொறித்த தாடங்கம் அணிந்து பக்தர்களுக்கு ஸ்ரீவித்யா சக்திகளை வாரி வழங்குகிறாள்.

இவ்வாறு ஸ்ரீசக்கரங்கள் பல வடிவங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் இவற்றில் சிறப்பான முறையில் ஸ்ரீதன ஸ்ரீசக்கர பீடம் அமைக்கப்பட்ட மிகவும் அபூர்வமான திருத்தலமே திருச்சி மணப்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலமாகும்.

மணப்பாறை ஸ்ரீஅகத்தீஸ்வரர்
இவ்வுலகில் மிகவும் பவித்திரமான, புனிதமான, தூய்மையான, தெய்வீகமான, அன்பான, சிறப்பான, நலமான, கனிவான, உண்மையான ஒரு பொருளைக் கூற வேண்டுமென்றால் அதுவே பெண்களின் தனமாகும். இக்காரணம் பற்றியே அகிலாண்டநாயகியும் ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் என்ற திருநாமம் கொண்டு அருளாட்சி செய்து வருகிறாள். ஆனால், இத்தகைய மதிப்பு வாய்ந்த, தெய்வீகப் பொக்கிஷமானது எதிர்காலத்தில் ஒரு வியாபாரப் பொருளாக அவமதிக்கப்படும் என்பதை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்த ஸ்ரீஅகத்தியப் பெருமான் மனித குலத்தை எதிர் வரும் துன்பத்திலிருந்த மீட்பதற்காக ஸ்ரீதன ஸ்ரீசக்ர சூட்சும பீடத்தை ஸ்ரீஅகத்தீஸ்வர திருத்தலத்தில் நிர்மாணித்து இறைவனின் நிரந்தர அன்பிற்குப் பாத்திரமானார்.

ஸ்ரீதனம் என்பது மக்களின் நற்சந்ததி விருத்திக்காக இறைவன் பெண்களுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம். மருமகள் என்னும் ஸ்ரீதனம் ஒரு இல்லத்தில் குடியேறாவிட்டால் அந்த இல்லத்தில் எப்படி சந்ததி தழைக்கும்? எனவேதான் அக்காலத்தில் திருமணம் என்பது பெண்கள் கொண்டு வரும் ஸ்ரீதனம் என்று போற்றினார்கள். இதை வருங்கால மாமியார்கள் உணர்ந்தால் மாமியார் மருமகள் தகராறு என்பது ஒரு கடந்த கால சம்பவம் என்று ஆகி விடும் அல்லவா?

அதே போல ஸ்ரீதனத்தைக் கொண்டு மருமகளாய் வரும் பெண்களும் வெறும் பணம், ஆடம்பரம், ஏட்டுப் படிப்பு, உடல் அழகு என்பது ஸ்ரீதனம் அல்ல, கடவுள் பக்தி, பணிவு, நற்குணம், தயை என்பதே பெண்களின் ஸ்ரீதனம் என்று உணர்ந்தால் அதை விட அமைதி நிலவும் சிறந்த குடும்பம் வேறேது?

எனவே, மணப்பாறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலம் பெண்களுக்கான ஒரு வரப்பிரசாத தலம் என்றே கூறலாம். பெண்களுக்கு வேண்டிய உடலழகு, நற்பண்புகள் அனைத்தையும் அருள வல்லதே இத்திருத்தலமாகும். கிளியோபாட்ரா என்ற கிரேக்க பேரழகி பூர்வ பிறவிகளில் வழிபட்ட தலமே இத்திருத்தலமாகும். பொங்குதனமாலினி என்று அழைக்கப்பட்ட கிளியோபாட்ரா ஆறு பிறவிகளில் இத்தல இறைவனுக்குத் தொண்டு செய்தே சக்கரவர்த்திகளும் கண்டு வியக்கும் அழகு ராணியாகத் திகழந்தாள் என்பது இதுவரை நீங்கள் அறியாத ரகசியமாகும்.

தெரிந்தோ தெரியாமலோ தங்கள் உடலழகைத் தவறாகப் பயன்படுத்திய பெண்களும் ஆண்களும் மீண்டும் அத்தகைய தவறுகளைச் செய்வதில்லை என்ற உறுதி பூண்டு இத்தல இறைவனை வேண்டி வழிபட்டால் தக்க பிராயசித்த வழிமுறைகளை பெற அருள்புரியும் தலம்.

இத்திருத்தலத்தின் தலவிருட்சமான கொன்றை மரம் தற்போது மறைந்து விட்டாலும் இங்குள்ள வில்வ மரத்திற்கோ, அரச மரத்திற்கோ துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் திருக்குள தீர்த்த நீரை அபிஷேகம் செய்து வழிபடுதலால் அற்புத பலன்களைப் பெறலாம்.

இத்திருத்தலம் மட்டும் அல்லாது எங்கெல்லாம் தலவிருட்சங்கள் மறைந்துள்ளனவோ அங்கெல்லாம் இத்தகைய தேவ விருட்ச வழிபாடுகளை மேற்கொள்தலால் தலவிருட்சங்களை வழிபட்ட பலன்களைப் பெறலாம். இறைவன் இல்லாத ஆலயம் உண்டா, அது போல தலவிருட்சம் இல்லாத திருக்கோயில்கள் கிடையாது. சில திருத்தலங்களில் அவை சூட்சுமமாகவும் மற்ற தலங்களில் அவை அனைவரின் கண்களுக்குத் தெரியும் வண்ணத்திலும் எழுந்தருளி இருப்பது உண்டு.

எனவே, தல விருட்சங்களை அறிய முடியாத திருத்தலங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள ஆல், அரசு, புரசு, வில்வம், துளசி, வன்னி, வேம்பு, தென்னை, கொன்றை, பனை, மணமுள்ள மலர்ச் செடிகள், அருகம்புல் இவற்றிற்கு தீர்த்தம் வார்த்து வழிபட்டால் அதுவே தலவிருட்ச வழிபாட்டை பூரணமாக அளிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அது மட்டுமல்லாமல் தலவிருட்சம் மறைந்த திருத்தலங்களில் மீண்டும் அத்தல விருட்ச கன்றுகளை உரிய முறையில், தகுந்த அனுமதியுடன் பெற்று அத்திருக் கோயில்களில் வளர்த்து, பேணி, பராமரித்து வருதல் பக்தர்களின் கடமையாகும். ஒரு தலவிருட்சத்தை பராமரித்தல் என்பது ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நிறைவேற்றிய பலனைத் தரும் என்பது பெரியோர்களின் உறுதி மொழி.
                                                                           http://kulaluravuthiagi.com/thala.html                   

ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/             

திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

peaceRainbow
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
“ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே—மிக
நன்று பல் வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக் கை” —தேசிய கவி சுப்ரமண்ய பாரதி—

இந்து மதத்தில் வேத மந்திரங்கள் அனைத்தும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் துவங்கி ஓம் சாந்தி என்ற வாழ்த்துடன் முடிவடையும். அந்த ஓம் சாந்தி என்ற சொல்லையும் மூன்று தடவை சொல்லி நிறைவு செய்வார்கள். அது மட்டுமின்றி “ லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து” என்ற மந்திரத்தையும் சொல்லி முடிப்பார்கள். உலகெங்கும் மக்கள் பேரின்பத்தோடு வாழ வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனை. சில மந்திரங்கள் இன்னும் குறிப்பாக இரண்டு கால் பிராணிகள், நாலு கால் பிராணிகள் அனைத்தும் நலமோடு வாழவேண்டும் என்றும் கூறும்.
உலகையே இன்பக் கேணியாக மாற்றும் வேதம் ஏன் இப்படி உலக அமைதிக்காக பிரார்த்திக்கிறது? அதுவும் மூன்று முறை சாந்திக்காக ஏன் பிரார்த்திக்கிறோம்? இதன் தாத்பர்யம் (கருத்து) என்ன?
எந்த மனிதனும் முதலில் தனக்கு அமைதி இருந்தால்தான் குடும்பத்தில் அமைதியை உண்டாக்கமுடியும். குடும்பத்தில் அமைதி இருந்தால்தான் நாட்டிலும் உலகிலும் அமைதியை உண்டாக்கமுடியும். மூன்று முறை சாந்தி (அமைதி) சொல்லுவது தனக்கும், குடும்பத்திற்கும் உலகிற்கும் அமைதி உண்டாகவேண்டும் என்று பிரார்த்திப்பதாகும்.

ஒரே மனிதனிலும் மனோ, வாக், காயம் (உள்ளம், சொல், உடல்) மூன்றும் அமைதியாக இருக்கவும் ஓம் சாந்தி, ஓம் சாந்தி ஓம் சாந்தி என்று சொல்லுவது அவசியமாகும்.
ஒரு மனிதன் நிம்மதியாக வாழ அவனது சுற்றுப் புறம் அமைதியாக இருக்கவேண்டும். அவனது குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும். இந்தக் கருத்து எல்லாம் வேத காலத்திலேயே இருந்ததைப் பார்க்கையில் அவர்களது அறிவு முதிர்ச்சி எந்த அளவுக்கு உயர்ந்திருந்தது என்பது தெரிகிறது.
ஏன் மூன்று முறை சொல்லுகிறார்கள்? இந்துக்கள் எதையும் உறுதி செய்ய மூன்று முறை செய்வது வழக்கம். கோவிலைச் சுற்றுவதில் இருந்து கோர்ட்டில் பெயர் சொல்லி அழைப்பது வரை எல்லாம் மூன்று முறை செய்கின்றனர். ஏலம் போடுவோர் கூட மூன்று முறை அழைத்துவிட்டு ஏலம் போடும் பொருளைக் கேட்டவருக்கே கொடுத்துவிடுவர்.

வேதத்தின் பல பகுதிகளில் சாந்தி பற்றிப் பேசினாலும் அதர்வ வேதத்தில் 19-ஆவது காண்டத்தில் இருக்கும் சாந்தி மந்திரம்தான் மிகவும் புகழ் பெற்றது. அதில் சில பகுதிகளை மட்டும் காண்போம்:
international day of peace 2012
வானம் (நமக்கு) அமைதி வழங்கட்டும்
பூமி அமைதி வழங்கட்டும்
காற்றுமண்டலம் அமைதி வழங்கட்டும்
கடல் அலைகள் அமைதி வழங்கட்டும்
மூலிகைகள் அமைதி வழங்கட்டும்
கடந்தகாலமும் எதிர்காலமும் அமைதி வழங்கட்டும்
எல்லாப் பொருட்களும் அமைதி வழங்கட்டும்.
இதற்குப் பின், எல்லா கடவுளரும், வான மண்டலத்தில் வலம் வரும் எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் அமைதி நல்க பிரார்த்திக்கப்படுகிறது.
பூமி நமக்கு அமைதியை நல்கும்
காற்றுமண்டலமும் வானமும் நமக்கு அமைதியை நல்கும்
தண்ணீர் நமக்கு அமைதியை நல்கும்
தாவரங்கள் நமக்கு அமைதியை நல்கும்
எல்லாக் கடவுளரும் நமக்கு அமைதியை நல்கும்
எங்கும் அமைதி நிலவட்டும்
பிரபஞ்சம் முழுதும் அமைதி நிலவட்டும்
நலங்கள் பெருகட்டும்.

இப்படிப் பல பிராத்தனைகள் வருகின்றன. யஜூர் வேதத்திலும் த்யௌ சாந்தி: அந்தரிகஷம் சாந்தி:– என்ற மந்திரம் இதே பொருளைக் குறிக்கும்.
அந்தக் காலத்தில் இப்படி மந்திரம் சொல்லும் பார்ப்பனர்களுக்கு மன்னர்கள் பொன்னையும் பொருளையும் நிலத்தையும் கொடுத்து உதவினார்கள். ஆக்கபூர்வமான எண்ணங்களைப் பரப்ப அவர்களுக்கு இப்படி வாரி வழங்கப்பட்டது. உலகம் முழுதும் நலமுடன் வாழ அவர்கள் அல்லும் பகலும் பிரார்த்தித்தனர். எல்லோரும் இப்படி செய்யமுடியாதென்பதால் அவர்களுக்கு சமுதாயத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
why no peace
எப்போதும் ஆக்கபூர்வமான சொற்களைக் கேட்பதும் சொல்லுவதும் ஒருவருடைய நம்பிக்கையைப் பலமுறை பெருக்குகிறது. கஷ்ட காலங்களில் எதையும் தாங்கும் இதயத்தைக் கொடுக்கிறது. மனநோய் அருகில் வராமல் காக்கிறது. மோட்டார் வாஹனங்களில் உள்ள ‘ஷாக் அப்சார்பர்’ போல செயல்படுகிறது. எந்நிலையிலும் சம நிலை தவறாமல் வாழ்க்கை என்னும் வண்டி ஓட வகை செய்கிறது.
இந்துக்கள் எல்லா பூஜைகள், விழாக்கள், பண்டிகைகள், யாக யக்ஞங்கள் ஆகியவற்றை முடிக்கும்போது ‘காலே வர்ஷது பர்ஜன்ய:’ என்ற ஸ்லோகத்தையும், “ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்” என்ற ஸ்லோகத்தையும், சொல்லி நிறைவு செய்வர். வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக,ஆழ்க தீயது எல்லாம், வையகமும் துயர் தீர்கவே என்பது இதன் பொருள்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Sunday, January 19, 2014

எலுமிச்சம்பழம்

உலகில் தோன்றிய புல் பூண்டுக்குக் கூட உயிர் உண்டு. அதனால் அதற்குத் தீங்கு செய்யக் கூடாது. துறவிகள் அதை மிதித்து நடக்கக் கூடாது என்று சமண மதம் போதிக்கிறது.
ஒவ்வொரு தாவரத்திற்கும் மின் சக்தியும், காந்த சக்தியும் உண்டு. அவை தாவரத்திற்குத் தாவரம் வித்தியாசப்படும்.
எலக்ட்ரோ மீட்டா் வைத்து அதன் மின் சக்தியை அளக்கலாம். அந்த மின்சக்திக்கு பயோ எலக்ட்ரிசிட்டி எனப் பெயா். இதே மாதிரி அனேக ஜீவராசிகளிலும் மின் சக்தி உண்டு.
ஜீவனுள்ள கனி என்பது எலுமிச்சம் பழம்! எலுமிச்சம் பழத் தோப்புக்குள் ஆசாரமில்லாதவா்கள் போனால் அவை வாடி விடும்.
எலுமிச்சம்பழத் தோட்டத்தில் சாம்பிராணி புகை போட்டுத் தீய சக்தியை விரட்டுவார்கள்.
“பதார்த்தகுண சிந்தாமணி” என்னும் நூலில் எலுமிச்சம் பழ மருத்துவம் கூறப்பட்டுள்ளது.
முன்பு வாழ்ந்த இந்துத் துறவிகள் தங்களுக்கு மாயையினால் தூண்டப்படும் காம சக்தியை அடக்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
அக்கினி தத்துவமுள்ள ஆண் தெய்வங்களுக்கும், பெண் தெய்வங்களுக்கும் எலுமிச்சம் மாலை போட்டுக் குளிர்விக்கின்றனா்.
மாரியம்மன் கோயில், காளி அம்மன் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் சோ்த்து எலுமிச்சம் சாதம் நைவேத்தியம் செய்து பின் சாப்பிட்டால் தீராத நோய்கள் விலகும்.
செவ்வாய் மாலை எலுமிச்சம் சாதம் சூடாக நைவேத்தியம் செய்யலாம். முடிந்தால் எலுமிச்சம் சாதம் அன்னதானமும் செய்யலாம்.
எலுமிச்சை அதீத சக்தியைப் பற்றிய நூல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அஷ்ட கா்மம் என்பது எண்வகைத் தொழில்கள். மோகனம், வசியம், ஆகா்ஷணம், ஸ்தம்பலம், உச்சாடனம், பேதனம், வித்வேடணம், மாரணம் ஆகியவை.
மேற்படி எட்டுத் தொழிலுக்கும் சித்தா்கள் எலுமிச்சம் பழத்தை உபயோகித்ததாகத் தெரிகிறது. மாந்திரீகா்கட்கு முக்கியமான பொருள் எலுமிச்சம்பழம். அது இல்லாவிட்டால் மாந்திரீகம் கிடையாது.
நம் வலது கையில் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து நாம் ஒருவரை எண்ணினால் நம் எண்ணம் நாம் எண்ணியவரிடம் போய் அலைஅலையாய்த் தாக்கும். அக்காலத் ரெலிப்பதி முறை இதுதான்.
ஒரு பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு சூரியக் கலையில் சுவாசம் செய்து கொண்டு பல கிரகங்களுடன் தொடா்பு கொள்ளலாம்.
கொடி எலுமிச்சை என்பது ஒரு வகை. அது பெரிதாக முட்டை அளவிருக்கும். அதைக் கையில் வைத்து எந்த மத தேவதைகளையும் மந்திரம் சொல்லி அழைக்கலாம். கொடி எலுமிச்சையை சாதாரண எலுமிச்சையுடன் கலந்து விற்பார்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை விலை பேசாமல் வாங்கி தெய்வ ஆகா்ஷண மந்திரத்தையும், பிதுா் ஆகா்ஷண மந்திரத்தையோ அதில் தினம் உரு ஏற்ற வேண்டும். அதைப் பூஜை அறையில் வைத்து வர வேண்டும்.
40 நாளில் அந்தப் பழம் நாம் வேண்டிய தெய்வத்தை அல்லது ஆவியை ஈா்த்துக் கொண்டு வரும். நாம் மனதில் எண்ணுவது அதற்குத் தெரியும். வீட்டில் அனைவரும் பேசும் பேச்சுக்களைப் பதிவு செய்யும்.
அதனால் வீட்டின் முகப்பில் எலுமிச்சம் பழம் கட்ட வேண்டும். வீட்டுக்குள் நுழைபவா்களின் எண்ணம் நம்மைத் தாக்குவதில்லை. மேற்படி பழ வலிமையால் அவா்கள் எண்ணம் அங்கேயே தடுக்கப்படுகின்றது.
எலுமிச்சைச் சாறு, மஞ்சள் பொடி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் கொண்டு தயாரிக்கப்பட்ட குங்குமத்தை புருவ மத்தியில் இட்டுக் கொண்டு வந்தால் நெற்றிக் கண் திறக்கும்.
அமாவாசையில் சுடுகாட்டுக்குப் போய் தனக்கு அடிமையாக இருக்க விரும்பும் ஆவியை வா என எண்ணி எலுமிச்சம் பழத்தை எறிந்து விட்டு வந்து விடுவார்களாம். பெளா்ணமிக்கு மேற்படி பழம் ஒருநாள் இரவு அவா்கள் கால் மாட்டில் கிடக்குமாம். அதை எடுத்துத் துண்டு துண்டாக்கிச் சாப்பிடுவார்களாம். அந்த ஆவி சாப்பிட்டவா்கள் உடலுக்குள் போய்விடுமாம். அதனை ஏவி மாந்திரீகா் தொழில் பார்ப்பார்களாம். இள வயதில் மாந்திரீக நண்பா் சொல்லக் கேட்டது இது.
கேரளாவில் ஆவி பிடித்தவனை உட்கார வைத்து ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தை எடுத்து, அவன் தலையைச் சுற்றி வலது புறமாக ஒரு சுற்று சுற்றுகிறார்கள். பின் ஒரு குண்டூசி எழுத்துப் பழத்தின் தலைப்பக்கம் கத்தி அமுக்கி விடுகின்றனா். பின்னா் ஒரு சுற்று அதே தலைப்பக்கம் குத்தி அமுக்கி விடுகின்றனா். பின்னா் ஒரு சுற்று அதே பழத்தை இடது பக்கமாக அவன் தலையைச் சுற்றி எடுத்துப் பழத்தின் கீழ்ப்பக்கம் குத்துகின்றனா்.
பின்னா் வலது பக்கம், இடது பக்கம் மாறி மாறி சுற்றி ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு குண்டூசியாகப் பழத்தில் குத்துகின்றனா். பழத்தின் மேல் பக்கம் ஒரு குண்டூசி சுற்றிவர 25 குண்டூசிகள் ஆக மொத்தம் 27 சிறு குண்டூசிகள்! அவனைப் பிடித்த பீடை விட்டு விடுகின்றது.
பிறகு உடனே அதை ஓடும் தண்ணீரில் போட்டு விடுகின்றனா். இதை நேரில் கண்டேன்.
தன் குல தெய்வம் எது என்று தெரியாதவா்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி, என் குல தெய்வமே! நீ எங்கிருக்கிறாய்? என மனமுருகி வேண்டி வீட்டில் வைத்துவிட வேண்டும். தினமும் வேண்டிக் கொள்ள வேண்டும். 9 நாள் கழித்து, அதை அருள்வாக்கு சொல்பவரிடம் கொடுத்தால் உங்கள் குல தெய்வம் எங்குள்ளது என எளிதாகச் சொல்லி விடுவார்கள்.
தெய்வங்களை உபாசனை செய்பவா்கள் பழத்தில் தெய்வ மந்திரத்தை மூன்று தினங்கள் உரு ஏற்றி, பின் அதன் சாற்றில் தண்ணீா் பிட்டு, வெல்லம், ஏலக்காய் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் சித்தி கிடைக்கும்.
சில சாதுக்கள் உரு ஏற்றிக் கொடுக்கும் பழம் வெகுநாள் வரை கெடாது. சில போ் உரு எற்றிக் கொடுக்கும் பழம் சில தினங்களில் அழுகி விடும்.
மந்திரவாதிகள் கொடுக்கும் பழம், நம் குடும்ப நிகழ்ச்சிகளை அவருக்கு அறிவித்துக் கொண்டே (Transmit)    இருக்கும். அதன் மூலம் அவா் உங்களை ஆட்டுவிப்பார்.
தைமாதப் பிறப்பன்று அல்லது புதுவருடம் பிறப்பன்று. அருளாளா்களையோ, எஜமானா்களையோ பார்க்கப் போகும்போது, அவசியம் எலுமிச்சம்பழம் கொண்டு செல்ல வேண்டும் நம் நல்ல எண்ணத்தை அதன் மூலம் அவா்களுக்குச் சமா்ப்பிக்க வேண்டும்.
எலுமிச்சையை வைத்து அனேகா் அபிசாரப் பிரயோகம் செய்கின்றனா். அதை நான் எழுத விரும்பவில்லை.
ஆந்திர மந்திரவாதிகள் எலுமிச்சம் பழத்தில 40 நாள் வசிய மந்திரம் உரு ஏற்றுகின்றனா். பின் அதைக் கருக்கிக் கஸ்தூரி, கோரோசனை, ஜவ்வாது, அரகஜா, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், புனுகு சோ்த்து, காராம்பசு நெய்விட்டு அரைக்கின்றனா் பின் மீண்டும் அதற்கு வசிய மந்திரம் உருவேற்றி, வசியத் தொழில் செய்து பல லட்சம் சம்பாதிக்கின்றனா்.
பிரபல விஞ்ஞானி G.D  நாயுடு எலுமிச்சை விதைகளைக் கொண்டு குடும்பக் கட்டுப்பாடு மருந்து கண்டுபிடித்தார்.
எலுமிச்சைச் சாற்றுக்குப் பயங்கர சக்தி உள்ளது. அனேக சித்த ஆயுா்வேத மருந்துகளை எலுமிச்சைச் சாற்றில் சுத்தி செய்கின்றனா்.
ஐம்பது மில்லி சாற்றில் ஒரு பவளத்தை அல்லது கடல் சோழியையோ தட்டிப் போட்டால் ஒரு மணி நேரத்தில், அவை கரைந்து போகும். இதற்கு பயோ கால்சியம் (Bio – Calcium) என்று பெயா்.
மருளாடிகளின் சாமி ஆட்டத்தைக் குறைக்க எலுமிச்சம் பழம், வெல்லம், ஏலக்காய் போட்ட பானத்தைக் கொடுப்பது அனைவரும் அறிந்ததே!
சில பள்ளிச் சிறுவா் – சிறுமிகள் பிடிவாத குணம் கொண்டவா்களாகவும், கண்ணில் கண்ட பொருள்களை எடுத்து உடைப்பவா்களாகவும் இருப்பார்கள். பிறவியிலேயே அவா்களுகட்குச் சில நரம்புகள் இறுகியிருக்கும். அதைத் தளர்த்தினால்தான் அவா்களின் கோபம் பிடிவாதம் மற்றும் ரென்ஷன் போகும்.
அவா்களுக்கு ஒரு டம்ளா் தண்ணீரில் அரை எலுமிச்சைச் சாறு பிழிந்து, சிறிது வெல்லம், ஒரு ஏலக்காய் தட்டிப் போட்டுக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.
அல்லது எலுமிச்சம்பழ சா்பத் குடிக்கக் கொடுக்கலாம். பகல் 12.00 மணிக்கு ஒரு நேரம் மட்டும் கொடுக்கவும். ஒன்பது நாள் மட்டும் இப்படிக் கொடுக்கவும். பின் கொடுக்க வேண்டாம். குணம் தெரியும்.
எலுமிச்சம் பழத்தில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன. இதை விஞ்ஞான பூா்வமாக ஆராய்வது நல்லது. ஆன்மிகத்திற்கு எலுமிச்சம்பழம் ஒரு சிறந்த துணை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஆன்மிகப் பயணம் – என்ற நூல் முதல் பாகம்
நன்றி!
ஓம் சக்தி!
திரு. மிஸ்டிக் செல்வம், தென்காசி