Saturday, August 10, 2013

எந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம்

 

அரவம் தீண்டி மாண்ட அப்பூதி அடிகளாரின் மகனை மீண்டும்
உயிர்ப்பித்தருள வேண்டி அப்பர் பெருமான் பாடிய பதிகம்.
“ஒன்றுகொலாம்”


http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4018


திருச்சிற்றம்பலம்

Nalamigu Padhigangal 40 Vol 5

திருச்சிற்றம்பலம்


பாடியவர்: திருஞானசம்பந்தர்

ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம்இடு வெண்டலை கையது
ஒன்று கொலாம்அவர் ஊர்வது தானே

இரண்டு கொலாம் இமையோர் தொழுபாதம்
இரண்டு கொலாம் இலங்குங்குழை பெண்ணால்
இரண்டு கொலாம் உருவம் சிறு மான்மழு
இரண்டு கொலாம் அவர் எய்தின தாமே

மூன்று கொலாம் அவர் கண்ணுத லாவன
மூன்று கொலாம் அவர்சூலத்தின் மொய்யிலை
மூன்று கொலாம் கணை கையது வில் நாண்
மூன்று கொலாம் புர மெய் தன தாமே

நாலு கொலாம் அவர் தம்முகம் ஆவன
நாலு கொலாம் சனனம் முதற் தோற்றமும்
நாலு கொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொலாம் மறை பாடின தாமே

அஞ்சு கொலாம் அவர் ஆடரவின் படம்
அஞ்சு கொலாம் அவர் வெல் புலனாவன
அஞ்சு கொலாம் அவர் காயப்பட்டான் கணை
அஞ்சு கொலாம் அவர் ஆடின தாமே

ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன
ஆறு கொலாம் அவர்தம் மகனார் முகம்
ஆறு கொலாம் அவர்தார்மிசை வண்டின் கால்
ஆறு கொலாம் சுவை ஆக்கின தாமே

ஏழு கொலாம் அவர் ஊழி படைத்தன
ஏழு கொலாம் அவர்கண்ட இருங்கடல்
ஏழு கொலாம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழு கொலாம்இசை யாக்கின தாமே

எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
எட்டு கொலாம் அவர் சூடும் இனமலர்
எட்டு கொலாம் அவர் தோளிணை யாவன
எட்டு கொலாம்திசை யாக்கின தாமே

ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் போலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடம் தானே.

பத்துக் கொலாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக் கொலாம் எயிறுந்நெரிந் துக்கன
பத்துக் கொலாம் அவர் காயப்பட்டான் தலை
பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே.

திருச்சிற்றம்பலம்

  

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!





வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

No comments: