Tuesday, November 27, 2012

ஸ்ரீமத் ராமாயணம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

http://valmikiramayanam.in/
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்கhttp://copiedpost.blogspot.in/2012/07/blog-post_970.html
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்


http://www.nagarathargateway.com/interview/sundarakandam/RAMAYANAM-%20TAMIL.PDF


ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

 


சுந்தர காண்டம் . MP3 Audio Bookhttp://copiedpost.blogspot.in/2013/01/mp3-audio-book_1069.htmlஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்


http://vivekaanandan.blogspot.in/2011/11/blog-post_9787.htmlஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அவர்களின் ராமாயண உபன்யாசம் 

 

http://mayuren.org/site/mayurengorg/1Tamil/Audio%20Books%20-%20Tamil%20Collection/Sri%20Ramayanam

 

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

 

 இராமாயணம் நமக்குச் சொல்லி கொடுக்கும் தர்மங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பின்பற்றினால் நம் வாழ்க்கை இன்பகரமாக அமையும். இராமாயணத்தில் கவிநயம் இருக்கும் அதேப்போல் நீதிகளும் நிறைய இருக்கும். அதில் உள்ள ஸ்லோகங்களைக் கூர்ந்து படித்தால் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் வாழ்க்கைக்கு வேண்டிய நீதிகள் பொதிந்து கிடப்பது தெரிய வரும். ராமாயணத்தில் விதியின் விளையாட்டை நிறைய பார்க்கிறோம். ஆனால் இவை அனைத்தும், கடைசியில் ஒற்றுமையில் முடிவதைப் பார்க்கிறோம். ஆகவே நம் வாழ்க்கையிலும் விதி என்னதான் ஆட்டி வைத்தாலும் அதற்கு உட்பட்டு எல்லாம் ஒற்றுமையால் முடியும் என்கிற நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.

இராமாயணம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையோடு கலந்து விட்டதோ அதேபோல, இராமாயண பாத்திரமான ஆஞ்சநேயரும் நம் வாழ்வோடு கலந்து விட்டவர். இவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவற்றில் சிலவற்றை கூர்ந்து பார்ப்போமேயானால் அவர் எவ்வாறு இவ்வளவு பெரிய உன்னத ஸ்தானத்தை அடைந்தார் என்பது தெரிய வரும்.

பகவானை நினைக்கும்போது, பொதுவாக அம்பிகையையும் சேர்த்துதான் நினைக்கிறோம். ஆனால் ராமாவதாரத்தில் அவதரித்த ராமனை மட்டும் ஸீதா ஸமேதராக மட்டும் அல்லாது, வாயு குமாரனாகிய ஆஞ்சனேயரையும் சேர்த்துதான் வணங்குகிறோம். இந்த ஆஞ்சனேயர் தாசனாகவும் இருக்கிறார். தானே தெய்வமாகவும் இருக்கிறார். ராமனோடு இருக்கும்போது தாசன். தனியாக இருக்கும்போது நாம் வணங்கும் தெய்வம்.

ஸ்ரீராமனை எப்பொழுதும் வேறு சிந்தனை எதுவுமின்றி எந்நேரமும் பூஜித்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே பிரம்மசாரியாக இருந்துவிட்டவர். சிரவண பக்தியை இன்றும் செய்து கொண்டிருப்பவர். எங்கு ராமாயணம் நடந்தாலும் அங்கு இரு கைகளையும் தலையின் மேல் குவித்து அஞ்சலி செய்த வண்ணம் கேட்டுக் கொண்டிருப்பார். ராமனையும் லக்ஷ்மனையும் தனது தோளில் தாங்கும் பாக்யத்தைப் பெற்றவர்.

தியாகத்தின் மொத்த உருவம் ஆஞ்சனேயர். சீதையை அன்னையாக துதித்து காப்பாற்ற முன் வந்தவர். பல அரிய குணங்களைப் பெற்றிருந்த இவர் 'பணிவு' என்கிற சிறப்பான குணத்தை ஒருங்கே பெற்றிருந்ததால் ஒரு அவதார புருஷராகவே திகழ்ந்தார்.

இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் பக்தியைப் பற்றி கூறுகிறது. ராம பக்தரான ஹனுமார், இந்த காண்டத்தில்தான் முதலாவதாகத் தோன்றுகிறார். ராமனிடம் பக்தியையும், ராமநாமத்தின் மகிமையையும் இவர் எங்கிருந்து கற்றுக் கொண்டார்? சிறகை இழந்த ஜடாயுவின் சகோதரன் ஸம்பாதி சீதையைத் தேடிக் கொண்டு தன்னைப் பார்க்க ராம தூதர்களாக வந்த வானரங்களை ராம நாமத்தைச் சொல்ல வேண்டுகிறார். அவர்கள் அவ்வாறே ராம நாமத்தைச் சொல்ல சொல்ல சூரிய வெப்பத்தினால் கருகிய சிறகுகள் வானளவில் முளைக்கின்றன. அவர் பழைய உருவை அடைகிறார். அதைப் பார்த்து பரவசமடைந்த அனுமார் ராமனிடத்தில் பக்தியும் ராமநாமத்தின் மகிமையையும் அறிகிறார்.

கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதுல் கூறுவதை யே ஒரு வரமாக வைத்துக் கொண்டிருந்தவர் ஹனுமார். முதன்முதலாக கிஷ்கிந்தா காண்டத்தில் தோன்றும்போதே இக்காரியத்தைச் செய்துக் காட்டினார். அண்ணன் வாலியினால் அடித்துத் துரத்தப்பட்ட சுக்ரீவன், கடைசியில் ரிஷிமுக பர்வதத்தில் வந்து தங்குகிறான். ஒரு சாபத்தின் காரணமாக வாலியினால் அங்கு வர முடியாது. அப்பொழுது அனுமார் 'கவலைப் படாதே! உனக்கு சீக்கிரமே நல்ல காலம் வரப்போகிறது' என்று மனம் நொந்து கிடக்கும் சுக்ரீவனுக்கு ஆறுதல் கூறுகிறார். அப்பொழுது ராமனும் லட்சுமணனும் அங்கு வருகிறார்கள். மனைவியை இழந்த ராமருக்கு சுக்ரீவன் தயவு வேண்டும். அப்பொழுதுதான் சுக்ரீவனுடைய படைபலம் இவருக்குக் கிடைக்கும். சுக்ரீவனுக்கும், ராமனுடைய தயவு வேண்டும். ஏனெனில் சுக்ரீவன், இழந்த அரசையும், மனைவி உமையையும் களவாடிய வாலியைக் கொன்று அவைகளை மீட்டுத் தர ராமன் ஒருவனால்தான் முடியும்.

இருவர் சினேகம் பண்ணிக் கொள்ள வேண்டுமானால் இருவருக்கும் சமமான துக்கம், அல்லது இருவருக்கும் சமமான குறைகள் இருக்க வேண்டும். அதனால்தான் மனைவியையும் அரசையும் இழந்த ராமரும், சுக்ரீவனும் நண்பராகிறார்கள். ஒரு காரிய வெற்றிக்கு முயற்சி மட்டும் போதாது. முயற்சி, தவம் இரண்டும் தேவை. தவம் என்றால் நம் முன்னோர்கள் செய்த புண்ணியம் நாம் செய்த புண்ணியம் இரண்டும் கலந்தது. ராமரும் சுக்ரீவனும் நண்பர்களாக இணைந்ததைக் கம்பன் ''முன்னர் ஈட்டிய தவமும், பின்னர் முயற்சியும் இணைத்தது ஒத்தார்'' என்று வர்ணிக்கிறார். சுக்ரீவனுக்கு ராமரின் நட்பு கிடைத்ததற்கு ஹனுமார் தான் காரணம். அவர்கள் இருவரையும் தன் சொல் வன்மையால் சேர்த்து வைக்கிறார். அதனால் அன்றோ கம்பன் சொல்லின் செல்வன் என்று அனுமாரை அழைக்கிறார்.

''நூறு யோசனை தூரம் உள்ளக் கடலை, யார் தாண்டி இலங்கையை அடைவது'' என்கிற பிரச்சினை எழுகிறது. அப்பொழுது ஒன்றும் பேசாமல் இருந்த ஹனுமாரைப் பார்த்து ஜாம்பவான் அவன் பிறப்பை ஞாபகப்படுத்தி ''உமக்குள்ள பலத்தை நீர் அறிய மாட்டீர். நீர் சிறு குழந்தையாக இருந்தபோதே, சிவப்பாக இருந்த உதய சூரியனை நோக்கி பாய்ந்தவர்'' என்று ஞாபகப்படுத்துகிறார். உடனே ஹனுமாருக்கு கடலைத் தன்னால் தாண்ட முடியும் என்ற சுயநம்பிக்கை வருகிறது. உடனேயே வானளாவ உயர்ந்து, கடலைத் தாண்ட தயாராகிறார். நமக்கும், நாம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்போம் என்கிற சுய நம்பிக்கை வந்தால், எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.

இராமாயணத்தில் 'சுந்தர காண்டம்' தான் மிகச் சிறந்தது என்று போற்றப்படுகிறது. மற்ற காண்டங் களை கதாநாயகன் என ராமனைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறது. ஆனால் 'சுந்தர காண்டம்' ஒன்றுதான் சீதையைப் பற்றியும் பக்தன் ஆஞ்சனேயரைப் பற்றியும் கூறுகிறது. ஹனுமாரின் சாகச செயல்களை விவரிக்கும் இந்த காண்டத்திற்கு வால்மீகி முதலில் 'ஹனுமத் காண்டம்' என்று பெயரிட்டார். உடனே ஹனுமார் அவர் முன் தோன்றி தன் பெயரில் ஒரு காண்டமும் இருக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். உடனே வால்மீகிக்கு ஆஞ்சனேயர் குழந்தையாக இருந்த காட்சி கண் முன் வர, அவருடைய தாயார் அஞ்சனா தேவி குழந்தை ஹனுமனை ''சுந்தரா'' என்று வாஞ்சையுடன் அழைத்தது தெரிந்தது. ஆகவே அக்காண்டத்திற்கு 'சுந்தர காண்டம்' என்று பெயரிட்டார்.

பாவம் ஹனுமார்! ராமர் அழகானவர் ஆனதால் அவர் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது என்று சந்தோஷமடைந்தார். இது ஏன் சுந்தர காண்டம் என்றால் பகவானுடைய திவ்ய மங்கள உருவம் மிக அழகாக வர்ணிக்கப்படுகிறது. ராமனுடைய அழகை ஹனுமார் சீதைக்கு மிக அழகாக வர்ணிக்கிறார். உபமானங்கள் சிறந்து விளங்குவது இந்த காண்டத்தில்தான். இலங்கையில் ஹனுமான் சந்திரோதயத்தை வர்ணிப்பதை இன்றெல்லாம் படித்து மகிழலாம்.

சீதையைத் தேடிச் சென்ற ஹனுமார், தன் காரியத்தில் வெற்றி பெற்றார். காரியத்தை தொடங்கும் முன் சூரியனை வணங்கினார். அவர் ஹனுமாரின் குரு. பிறகு குழந்தை ஹனுமாரை தன் ஜராயுதத்தால் அடிக்கப் போகத்தான், பல வரங்கள் கிடைக்கின்றன. ஆதலால் இந்திரனை வணங்கி னார். பிறகு பிரம்மாவை வணங்கினார். பிரம்மாதானே அவரை மூர்ச்சை தெளிவித்து சிரஞ்சீவியாக இரு என்று ஆசிர்வாதம் செய்தவர். பிறகு தகப்பனார் வாயுதேவனை வணங்கினார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எந்தக் காரியத்தையும் தொடங்கும் முன்னர் பெரியவர்களை வணங்கி அவர்கள் ஆசியை பெற வேண்டும் என்பது.

கடலைக் கடக்க ஹனுமான் ஒரே தாவலில் கடக்கவில்லை. வழியில் மூன்று தடைகளைக் கடந்து சென்றதாக வால்மீகி கூறுகிறார். முதலில் நட்பு முறையில் மைநாகம் என்ற பர்வதமும், சுரசை என்கிற ஒரு கோர அரக்கியும், பின் விரோத மனப்பான்மை கொண்ட ஸிம்ஷிகா என்ற அரக்கியும் தடை செய்கிறார்கள். ஹனுமாரோ வாயில் ராமனுடைய மோதிரத்துடன் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டு இத்தடைகளை கடந்து இலங்கையை அடைகிறார்.

கடலைத் தாண்ட கிளம்பும் ஹனுமார் சற்று மார்தட்டி பேசுகிறார். ''திரும்பினால் சீதையுடன் திரும்புவேன். இல்லாவிடில், இராவணனோடு கூட இலங்கையைப் பெயர்த்துக் கொண்டு வருவேன்' என்று சொல்லுகிறார். ஆனால் சீதையை இலங்கையில் பல இடங்களில் தேடியும் காணவில்லை. அதனால் மனம் உடைந்து போகிறார்.

சீதையை இராவணனின் அந்தப்புரத்தில் தேடுகிறார். திடீரென்று அவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. ''இப்படி பரஸ்திரீகளை பல அலங்கோல நிலைகளில் பார்த்தேனே, அதன் காரணமாக என் தர்மத்திற்கு ஏதாவது கெடுதல் ஏற்பட்டால் என்ன ஆவது என்று நடுங்குகிறார். பிறகு அவர் தம்மைத் தாமே தேற்றிக் கொள்கிறார். அந்தப் பெண்ணை நான் பார்க்கத்தான் செய்தேன். ஆனால் அதன் காரணமாக என் மனதில் ஒரு விகாரமும் ஏற்படவில்லை. என் மனதோ துளியும் சஞ்சலப் படவில்லை'' என்று தேற்றிக் கொள்கிறார். ஹனுமார் தன் மனதை சோதித்துக் கொண்ட மாதிரி, நாமும் நம்மனதை அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும்.

எங்கு தேடியும் சீதை கிடைக்காமல் போகவே, எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டவர், ராமனை மனதார வேண்டிக் கொள்ளவில்லையோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்படுகிறது. உடனே ராமனைக் குறித்து 'நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய' என்று தொடங்கும் ஸ்லோகத்தால் ராமனை துதிக்க இன்னும் அசோக வனத்தில் தேடவில்லையே என்கிற எண்ணம் தோன்றுகிறது. அசோக வனத்தில் தேடுகிறார். சீதை அகப்படுகிறாள்.

ஹனுமாரைக் கண்டதும் சீதையின் முகம் மலர்கிறது. பத்து மாத காலமாக காணாத கணவரின் மோதிரத்தைக் கண்டவுடன் அவள் அடைந்த மகிழ்ச்சி சொல்லி முடியாது. உடனே ஹனுமாரை 'இன்றென இருத்தி' அதாவது இன்று போல் என்றும் சிரஞ்சீவி யாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினாள். ''இன்று நீ எனக்கு உதவியதைப் போலவே எல்லோருக்கும் உதவ வேண்டும்'' என்று பொருள் கொள்ளலாம்.

சீதையைக் கண்டுபிடித்து அவளிடமிருந்து சூடாமணியைப் பெற்றுக் கொண்டு இலங்கையிலிருந்து திரும்பிய ஹனுமாரை பாராட்டும் ராமர் அவரை 'உத்தமசேவகன்' என்று குறிப்பிடுகிறார். உத்தமசேவகன் எஜமானன் கொடுத்த கஷ்டமான காரியத்தை சரிவர நிறைவேற்றுவதோடு அதற்கு அனுசரணையாக உள்ள பல காரியங்களையும் நிறைவேற்றிவிட்டுத்தான் திரும்புவான். ஹனுமாரும் அவ்வாறே செல்கிறார். சீதையைக் கண்டுபிடித்த தோடு அவள் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதையும் தடுக்கிறார். ராமர் வந்துவிடுவார் என்று உற்சாகப்படுத்துகிறார். அத்துடன் நின்றாரா! ராவணனின் பலாபலத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றே அசோகவனத்தை அழித்துத் தம்மை யார் எதிர்க்கிறார்கள் என்று கவனிக்கிறார். பிறகு ராவணனை சந்திப்பதற்காக வேண்டுமென்றே இந்திரஜித்திடம் அகப்பட்டுக் கொண்டு ராவணனைச் சந்திக்கிறார். யுத்தத்தை தவிர்ப்பதற்காக அவனுக்கும் பல நீதிகள் எடுத்துரைக்கிறார். இவை ராவணனின் இருபது காதுகளில் விழவில்லை. அவன் கேட்காமல் போகவே, அவனை பலவீனப்படுத்த இலங்கையை எரிக்கிறார்.

ஹனுமாருக்கு ஞானம், பக்தி, வைராக்கியம், வாக்கு வன்மை முதலிய குணங்கள் இருந்தது. ஜீவாத்மா சீதையைத் தேடி, பரமாத்மா ராமன் மிதிலை சென்று, அந்த ஜீவாத்மாவை தம்மோடு சேர்த்துக் கொள்கிறது. எதுவும் வலுவில் நம்மைத் தேடி கொண்டு வருவதால் அதற்கு நாம் அதிக மதிப்பு கொடுக்க மாட்டோம். அதே மாதிரி, இந்த ஜீவாத்மாவும் தன்னைத் தேடி வந்த பரமாத்மாவிற்கு அதிகம் மதிப்பு வைக்காமல் தன் ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங் களையும் கட்டுப்படுத்தாமல், ஒரு மாயமான் மீது மோகம் கொள்கிறது. அதன் காரணமாக பரமாத்மா விடமிருந்து பிரிகிறது. தன் பத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்த முடியாத தசமுகனால் களவாடிச் செல்லப்படுகிறது. பரமாத்மாவைப் பிரிந்து ஜீவாத்மா துடிக்கிறது. ஒரு நல்ல ஜீவாத்மாவை விட்டு பிரிந்து விட்டோமே என்று இங்கு பரமாத்மாவும் துடிக்கிறது. இப்பொழுது இந்த பரமாத்மாவையும் ஜீவாத்மாவை யும் ஒன்று சேர்த்து வைக்க வருகிறார் ஆசாரிய ரூபத்தில் ஹனுமார். இருவரையும் ஒன்று சேர்க் கிறார்.

பல விதங்களிலும் உதவி செய்த ஹனுமாருக்கு என்ன பிரதி உபகாரம் செய்வது என்று தவிக்கிறார் ராமர். ''நீ சீதையை கண்டுபிடித்தால், என் ரகுவம்ச குலத்தையே காப்பாற்றினாய் மேலும் விர லக்ஷ்மணனைக் காப்பாற்றினாய். உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. உனக்கு நான் என்னையே கொடுப்பேன் என்று சொல்லி ஹனுமாரை இறுகத் தழுவிக் கொள்கிறார்.

இராமாயணம் மகாபாரதம் இந்த இரண்டு இதிகாசங்களிலும் எத்தனையோ உயர்ந்த கதா பாத்திரங்கள் வருகிறார்கள். ஆனால் இவர்கள் யாவருக்கும் கோவில் கிடையாது. ஆனால் ஹனுமாருக்கு மட்டும் கோவில் கட்டி வணங்கு கிறோம். போதாக்குறைக்கு அவருக்கு வடை மாலை வேறு சாத்தி மகிழ்கிறோம் ஏன்? இதற்கு காரணம் அவர் ஞானி. பராக்கிரசாலி. மிகச் சிறந்த பக்தர்.

ஹனுமான் மிகச் சிறந்த ஞானி. ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். சூரிய பகவானிடமிருந்து ஞானத்தைப் பெற்றவர். ஆனால் பீஷ்மரை விட சிறந்த ஞானியா? அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டே பீஷ்மர் எத்தனை தர்மங்களை எடுத்துரைக்கிறார். அவர் சொல்லாத தர்மங்களே இல்லை. ஆனால் அவருக்கு கோவில் இல்லை. ஹனுமாருக்குத்தான் கோவில்.

பராக்கிரமத்தை எடுத்துக் கொண்டால் ஹனுமார் பராக்கிரமசாலிதான். அவர் ராவணனை வெல்ல ராமருக்கு எத்தனையோ வழிகளில் உதவினார். ஆனால் பீஷ்மரோ மகாபாரதப் போரின் எட்டாம் நாள் இரவு துரியோதனன், தம்மை சற்றுக் குறைவாக பேசினான் என்பதற்காக ஒன்பதாம் நாள் ஒரு கடும்போர் புரிகிறாரே, அதைப் போன்ற பராக்கிரமத்தை நாம் பார்க்க முடியுமா? ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சொன்ன கர்ணனையே ஆயுதம் எடுக்க வைத்து விட்டாரே அந்தக் கடும் போரினால்! ஆனால் அவருக்கு கோவில் இல்லை.

ஹனுமார் சிறந்த பக்தர்தான். சந்தேகமில்லை. ராமர் வைகுண்டம் சென்றபோது ஹனுமானைத் தன்னுடன் வரும்படி அழைக்கிறார். ''வைகுண்டத்தில் ராமாயணமும் இல்லை. ராம நாமமும் இல்லை'' என்பதற்காக அவருடன் போக மறுத்துவிடுகிறார் ஹனுமார். ஆனாலும் ஐந்து வயது பிரஹலாதனைவிட இவரை சிறந்த பக்தன் என்று சொல்ல முடியுமா? ஆனால் பிரஹலாதனுக்கு கோவில் இல்லை. ஹனுமாருக்கு கோவில்.

ஏன்? இதற்கு இரண்டு கோணங்கள் உள்ளன. ஒரு பக்தர் பகவானை பார்த்து, ''ஹே பிரபோ! எங்களுக்கு ஏதாவது கஷ்டம் என்றால் நாங்கள் உன்னிடம் ஓடி வருகிறோம். உனக்கு கஷ்டம் என்றால் நீ எங்குப் போவாய் என்று உருகுகிறார். ஆனால் ஹனுமாரோ கஷ்டத்தில் இருந்த பகவானுக்கே உதவி செய்தார். இதைவிட சிறந்த காரணம் லோக மாதா சீதையின் பரிபூரண அருள் கிடைத்ததால்தான் அவருக்கு நாடெங்கும் கோவில்கள்.

ஒருமுறை அனுமன் சீதையிடம் அவள் நெற்றியில் காணப்பட்ட ஸிந்தூரத்தின் அழகை ரசித்து வாத்ஸல்யத்துடன் அதை நெற்றியில் வைத்திருக்கும் காரணத்தை அறிய, ஆவலுடன் கேட்கிறார். ''ராமனுக்கு மிகவும் பிடித்தமான இந்த செந்தூரத்தை நெற்றியில் வைத்திருப்பதால் அவருடைய அன்புக்கும், ஆசைக்கும் பாத்திரமானவளாக இருக்கிறேன்'' என்று சீதை கூறுகிறாள். மறுநாள் ராமனிடம் சென்ற அனுமனைப் பார்த்து ராமன் சிரித்தபடியே ''என்ன இது. உடம்பு முழுவதும் செந்தூரம்'' என்று அன்பொழுக கேட்டபோது, ஹனுமன் ''உங்களுக்கு பிடித்த இந்த செந்தூரத்தினால் உங்கள் அன்புக்கும், ஆசைக்கும் என்றென்றும் நான் உங்கள் அடிமையாக இருக்க வேண்டும்'' என வேண்டிக் கொள்கிறான். இப்பொழுதும் எல்லா ஆஞ்சநேயர் கோவில்களிலும், அவர் விக்கிரகம் முழுவதும் செந்தூரத்தாலேயே அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

ஹனுமனின் அவதார நாள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது. தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தன்று ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இராமனுடைய நாமத்தைச் சொல்லும்போது ராமனுடைய குணங்கள் நமக்கு வர, நாம் ராமனாக மாறிவிடுவோம். ராம பக்தனுக்கு ராமனுடைய குணங்கள் வந்துவிடும் என்பதற்கு ஹனுமாரே உதாரணம். பட்டாபிஷேகத்தின்போது ராமர் ஒரு முத்துமாலையை சீதையிடம் கொடுத்து உனக்கு யார் இஷ்டமோ அவருக்குக் கொடு என்கிறார். சீதை மாலையை ராமனிடம் காணப்பட்ட அத்தனை நற்குணங்களையும் கொண்ட ஹனுமாருக்குக் கொடுக்கிறாள்.

திருமாள் கிருஷ்ணாவதாரத்தில் விஸ்வரூபம் எடுத்துக் காட்டிய பெருமையை ராமாவதாரத்தில் ராமனாக அவதரித்தபோது எடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால் ஹனுமாரோ பல சந்தர்ப்பங்களில் விஸ்வரூபமெடுத்து தன் பெருமையை உலகிற்கு உணர்த்தி இருக்கிறார். தனது உருவத்தை சிறிதாக்கிக் கொள்ளவும், பெரிதாக்கிக் கொள்ளவும் வரம் பெற்றவர் பல கோவில்களில் இன்றும் சிறிய ஹனுமார் சிலைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருவதாக கருதுகிறார்கள்.

இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான தீமைகளை விரட்டும் ஹனுமாரை, சதா ராமநாமத்தை ஸ்மரிக்கும் ஆஞ்சனேயரை சீதாராம லட்சுமண பரத சத்ருகன ஸமேதராக விளங்கும் சுந்தர ஹனுமானை வணங்குவோம்.

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்


இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை. 
 

Saturday, November 17, 2012

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

 ஓம் சரவணபவ

 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை”வேலுண்டு வினை தீர்க்க மயில் உண்டு எமைக் காக்க”
முருகன் துணை

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=91121

ஓம் சரவணபவ

 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை


http://www.kaumaram.com/nucontentsu.html

ஓம் சரவணபவ

 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை


http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=2203:2011-05-08-03-44-40&catid=59:cricket&Itemid=387
 ஓம் சரவணபவ

 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை 

 http://vivekaanandan.blogspot.in/2013/06/blog-post_5.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

 

கந்தர் சஷ்டி கவசம் 

http://vivekaanandan.blogspot.in/2011/11/skandha-sashti-kavacham.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

சண்முக கவசம் 

http://vivekaanandan.blogspot.in/2011/11/blog-post_3035.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

 

சூரா சம்ஹாரம் சொற்பொழிவு வழங்குபவர் திரு. சுகி சிவம் 

http://vivekaanandan.blogspot.in/2013/02/blog-post_22.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

முருகனை வழிபடும்போது “அரோகரா” போடுவதன் பொருள் என்ன? 

http://vivekaanandan.blogspot.in/2013/04/blog-post_1005.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

ஆறு படை வீடு சத்சங்கம் வழங்குபவர் திருமுருக .கிருபானந்த வாரியார் 

http://vivekaanandan.blogspot.in/2013/06/blog-post_5637.html

ஓம் சரவணபவ

 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

வள்ளி கல்யாணம் சத்சங்கம் வழங்குபவர் திரு. பாலகிருஷ்ணா சாஸ்திரிகள் 

http://vivekaanandan.blogspot.in/2013/06/blog-post_7514.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

 

ஸ்ரீ வள்ளி திருமணம் சத்சங்கம் வழங்குபவர் திரு. கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் 

http://vivekaanandan.blogspot.in/2013/06/blog-post_8874.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

 

கந்தன் கருணை சத்சங்கம் வழங்குபவர் திரு. கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் 

http://vivekaanandan.blogspot.in/2013/06/blog-post_2044.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

கந்த புராண தத்துவம் சத்சங்கம் வழங்குபவர் திரு. கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்

http://vivekaanandan.blogspot.in/2013/06/blog-post_5766.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

ஸ்ரீ முருகன் புகழ் மாலை 

http://vivekaanandan.blogspot.in/2013/07/blog-post_6278.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

முருகன் அடியார்கள் காவடி வரலாறு 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_4083.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

 

வேத ஆகமத்தில் முருகப்பெருமான் 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_2646.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

 

திருப்புகழ் 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_673.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

கச்சியப்ப சிவசாரிய சுவாமிகள் அருளிச் செய்த - கந்தபுராணம் 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_8126.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

கந்தர் அநுபூதி - சொற்பொழிவு 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_8086.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

கந்தகோட்டம் தெய்வ மணி மாலை பாடுபவர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_7048.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

முருகனும் அருணகிரிநாதரும் - சத்சங்கம் - திரு சண்முகவேல் அவர்கள் 

http://vivekaanandan.blogspot.in/2013/10/blog-post_5886.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

கந்த புராணம் சத்சங்கம் - சத்சங்கம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர் 

http://vivekaanandan.blogspot.in/2013/10/blog-post_6.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

முருகனின் திருவுரு - தத்துவ விளக்கம் - சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன் அவர்கள் 

http://vivekaanandan.blogspot.in/2013/10/blog-post_1960.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

 

வேல் பந்தனம் 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_18.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

முருக தத்துவங்கள் 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_2569.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

அருணகிரிநாதரின் திருப்புகழ் - சொற்பொழிவு 

http://vivekaanandan.blogspot.in/2013/09/blog-post_247.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

அதி சூட்சும முருக மந்திரம் 

http://vivekaanandan.blogspot.in/2013/04/blog-post_17.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

முருகா என்றால் வரும் நன்மைகள் - தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் 

http://vivekaanandan.blogspot.in/2013/02/blog-post_8607.html 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

 

 

 

  ஓம் சரவணபவ


 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

திருச்சிற்றம்பலம்

ஓம் சரவணபவ
 வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!

வேலும் மயிலும் துணை

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


Monday, November 12, 2012

கடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா? இல்லையா?

http://realnest-slokas.blogspot.in/2012/01/blog-post_742.html
மறுபிறப்பு உண்டா ? இல்லையா ?
சிலர் முன்தேகம் என்பதும் இல்லை ,பின் தேகம் எடுப்பதும் இல்லை என்கிறார்கள் /இப்பொழுது எடுத்த தேகம் அழிந்தால் தேகியும் அழிந்து விடுவான் என்றும் நினைக்கிறார்கள் .
சிலர் முத்தி அடைவான் என்றும்,சிலர் பாவம் புண்ணியங்களை எக்காலத்தும் அனுபவிப்பான் என்றும் ---சிலர் தேகம் அழிந்தால் அவனும் அழிந்து விடுவான் என்றும் பலவாறு வாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்
இப்படி வாதிப்பது எதனால் என்று அறிய வேண்டும் !
அவரவர்களும் தேகமே ஆன்மா என்றும் --போகமே முத்தி என்றும் ,உலகியல் மதம் சமயம் சாத்திரங்கள் அப்படி சொல்லி மக்களை குழப்பி விட்டார்கள்.மூடமாகிய தேகத்தில் அறிவாகிய ஆன்மா என்னும் ஒளி ஒன்று உண்டு என்றும்,அது தேகம் அழிந்தால் அதுவும் அழிந்து விடும் என்று அறியாமையில் நினைத்துக் கொண்டு உள்ளார்கள் .ஆன்மா முத்தி அடையும் வரை அதாவது மரணத்தை வெல்லும் வரை,பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும் .இதுதான் ஆண்டவன் கட்டளையாகும் .
ஜீவர்கள் தங்கள் தங்கள் சுதந்திரத்தாலே தேக போகங்களை அடைகிறார்கள் என்றால்,தங்கள் தங்கள் இச்சைக்கு தகுந்த தேகங்களையும் போகங்களையும் அடையவேண்டும் இல்லையா ? அப்படி இன்றி சிலர் பழது அற்ற அங்கம் உள்ளவர்ளாகவும். சிலர் பழுது உள்ள அங்கம்
உள்ளவர்களாகவும்.இருக்கின்றார்கள்,இவை எப்படி வந்தது என்று சிந்திக்க வேண்டும்.அவரவர் இச்சைக்கு தகுந்தாற் போல் குழ்ந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் இல்லையா! ஏன் முடியவில்லை ?அறிவால் அறியவேண்டும் .
முன் தேகம் உண்டு என்பது எப்படி ?
சமுசாரியான ஒருவன் குடி இருக்க வீடு வேண்டும் .வீடு இல்லாமல் குடி இருக்க முடியாது, அவன் குடியிருக்க வாடகைக்கு குடிபோகிறான் அந்த வீட்டுக் காரருக்கும் அவனுக்கும் சிறு தகராறு வந்து வீட்டைக் காலி செய்யச சொல்கிறார்.அவனும் வீட்டை காலி செய்து வேறு வீட்டுக்கு குடிபோகிறான் அப்படியே பின் வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டதால் வீட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறான் .--தனக்கு என்று ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளாதவரை வாடகை வீட்டில்தான் குடி இருக்க வேண்டும் .
அதுபோல இந்த தேகத்தில் ஆகாரம் என்ற ஆகாரக் கூலி கொடுத்துக் குடி இருக்க வந்த ஜீவன் இதற்கு முன்னும் வேறு ஒரு தேகத்தில் அந்த ஆகாரக் கூலிகொடுத்து ஜீவித்து இருந்தான் என்றும் தெரிந்து கொள்ளவேண்டும்.
தேகம் இல்லாமல் ஜீவிக்க மாட்டான என்றும்,இந்த தேகத்திலும் கலகம் நேரிட்டால் இன்னம் வேறு ஒரு தேகத்திற்கு குடி போவான் என்பதை அறிவின் முதிர்ச்சி அனுபவத்தால் அறிந்து கொள்ளவேண்டும்.
தனக்கு என்று சுதந்தரமாக் நித்திய தேகமாகிய அருள் தேகத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் பின்பு வேறு ஒரு தேகத்திற்கு குடி போக மாட்டான் என்பதை அறிய வேண்டும் .ஆதலால் மரணம் அடைந்து விட்டால் மறு பிறப்பு நிச்சயம் உண்டு .மரணம் என்பது இயற்கை அல்ல,அவை செயற்கையாகும்.
இதைத்தான் வள்ளலார் மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ வேண்டும் என்கிறார்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.
வள்ளலாரின் ஒரு அருமையான பாடல் ;--
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே ஏன் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகிலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே !
என்ற பாடல் வாயிலாக இறைவனை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தி உள்ளார் வள்ளலார் .

திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்